சுனிதி சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனிதி சௌத்ரி
Suniti Choudhury
பிறப்பு22 மே 1917
பிரித்தானிய இந்தியா, கொமில்லா
இறப்பு12 சனவரி 1988 (70 வயதில்)
அறியப்படுவதுதன் 14ஆம் வயதில் பிரித்தானிய மாவட்ட நீதிபதியைக் கொன்றதற்காக
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

சுனிதி சௌத்ரி (22 மே 1917 - 12 சனவரி 1988) என்பவர் ஒரு இந்திய தேசியவாதி ஆவார். இவர் தன் 14ஆம் வயதில் சாந்தி கோஷ் என்பவருடன் சேர்ந்து, ஒரு பிரித்தானிய மாவட்ட நீதிபதியைக் கொன்றார்.[1][2][3] மேலும் இவரது ஆயுதப் புரட்சிப் போராட்டத்துக்காக சிறப்பாக அறியப்படுகிறார்.[2][4][5][6]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சுனிதி சௌத்ரி 22 மே 1917 அன்று வங்காளத்தின் (தற்போதைய வங்காளதேசம் ) கொமில்லா மாவட்டத்தின் , கொமில்லாவில் உமாசரண் சௌத்ரி மற்றும் சுரசுந்தரி சௌத்ரி ஆகியோருக்குப் பிறந்தார்.[7] இவர் கொமில்லாவில் உள்ள போய்சுனிசா பாலிகா வித்யாலயா பள்ளி மாணவியாவார்.[8][9]

புரட்சிகர நடவடிக்கைகள்[தொகு]

கொமிலாவில் வசித்தவந்த உல்லாஸ்கர் தத்தாவின் புரட்சிகர நடவடிக்கைகளில் சௌதிரி கவரப்பட்டார். புரட்சிகர விடுதலை இயக்கமான யுகந்தர் இயக்கத்தின் பிரபுல்லாலினி பிரம்மாவின் மாணவியாக ஆனார்.[10] மேலும் இவர் திரிபுரா ஜில்லா சத்ரி சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 6 மே 1931 இல் நடந்த திரிபுரா ஜில்லா சத்ரி சங்க ஆண்டு மாநாட்டில் மகளிர் தன்னார்வலர் அணியின் தலைவியாக சௌத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இந்த நேரத்தில், இவர் ' மீரா தேவி ' என்ற புனைபெயரில் அறியப்பட்டார்.[7][11]

சார்லஸ் ஸ்டீவன்ஸ் படுகொலை[தொகு]

14 திசம்பர் 1931 இல், 14 வயதான சௌதிரியும், 15 வயதான சாந்தி கோஷ் ஆகிய இருவரும் வங்காளத்தின் கொமில்லா மாவட்ட நீதிபதியான சார்லஸ் ஸ்டீவன்சின் அலுவலகத்திற்கு வந்தனர். தங்கள் வகுப்புத் தோழர்களுக்கு இடையில் ஒரு நீச்சல் போட்டியை ஏற்பாடு செய்யக் கோரி ஒரு விண்ணப்பத்தை அவரிடம் அளித்தனர்.[2] இந்த விண்ணப்பத்தை ஸ்டீவன்ஸ் கவனித்துக் கொண்டிருந்தபோது, கோசும் சௌத்ரியும் தங்கள் சால்வ்களில் கீழ் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு அவரை சுட்டுக் கொன்றனர்.[2][12][13]

விசாரணை மற்றும் தண்டனை[தொகு]

இதனையடுத்து இந்த இரு பெண்களும் கைது செய்யப்பட்டு உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.[2] 1932 பெப்ரவரி மாதம், கோஷ் மற்றும் சௌத்ரி ஆகியோர் கல்கத்தா நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டனர். இவர்கள் சிறுமிகளாக இருந்ததால், இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.[14] ஒரு நேர்காணலில், "ஒரு குதிரைக் கொட்டடியில் வாழ்வதை விட இறப்பது நல்லது." எனக் குறிப்பிட்டனர்.[5][14]

இவர் காவலில் வைக்கப்பட்டிருந்த முகாமில் "மூன்றாம் வகுப்பு கைதி"யாக வைக்கப்பட்டிருந்தார்.[15] இவர் புரிந்த செயலின் விளைவாக இவரது தந்தையின் அரசாங்க ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது, இவரது இரண்டு அண்ணன்கள் எவ்வித விசாரணையுமின்றி காவலில் வைக்கப்படனர். இவரது தம்பி ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தார்.[8]

ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் ஆங்கிலேய அரசுடன் காந்தி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருவரும் 1931இல் விடுதலை செய்யப்பட்டனர்.[8]

பிற்கால வாழ்க்கையும் மரணமும்[தொகு]

சௌத்ரி தன் விடுதலைக்குப் பிறகு மருத்துக் கல்வி (எம்.பி.பி.எஸ்) பயின்று மருத்துவரானார்,. 1947 ஆம் ஆண்டில், தொழிற்சங்க தலைவரான பிரதியானட் குமார் கோஷ் என்பவரை மணந்தார்.[8]

1988 சனவரி 12 அன்றுசௌத்ரி இறந்தார்.[8]

குறிப்புகள்[தொகு]

 1. Forbes, Geraldine Hancock (1997) (in en). Indian Women and the Freedom Movement: A Historian's Perspective. Research Centre for Women's Studies, S.N.D.T. Women's University. https://books.google.co.in/books/about/Indian_Women_and_the_Freedom_Movement.html?id=7lAqAAAAYAAJ&redir_esc=y. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Smith, Bonnie G.. The Oxford Encyclopedia of Women in World History. Oxford University Press, USA. https://books.google.com/books?id=EFI7tr9XK6EC&pg=RA1-PA377. 
 3. Smith, Bonnie G. (2005) (in en). Women's History in Global Perspective. University of Illinois Press. https://books.google.co.in/books/about/Women_s_History_in_Global_Perspective.html?id=maEPASodz7AC&redir_esc=y. 
 4. Kamala Das Gupta (January 2015). Swadhinata Sangrame Nari (Women in the Freedom Struggle), অগ্নিযুগ গ্রন্থমালা ৯. র‍্যাডিক্যাল ইম্প্রেশন. 
 5. 5.0 5.1 Guhathakurta, Meghna (2013-04-30) (in en). The Bangladesh Reader: History, Culture, Politics. Duke University Press. https://books.google.co.in/books?id=haGORCJRlOUC&pg=PA145&lpg=PA145&dq=Suniti+Chowdhury&source=bl&ots=asBSQKeDFD&sig=ziS3CM0_sQuHeaF53U-C5hwVaQE&hl=en&sa=X&ved=0ahUKEwjJ04T5r8rXAhVGro8KHUKJDXQQ6AEIYzAO#v=onepage&q=Suniti%20Chowdhury&f=false. 
 6. Agrawal, Lion M. G. (2008) (in en). Freedom fighters of India. Gyan Publishing House. https://books.google.co.in/books?id=p2qFYxtq3GYC&pg=PA115&lpg=PA115&dq=Suniti+Chowdhury&source=bl&ots=LR1wUdW-Nz&sig=ZQbxE04VesMnf0pv1CKLE7V8-y4&hl=en&sa=X&ved=0ahUKEwjJ04T5r8rXAhVGro8KHUKJDXQQ6AEIXjAM#v=onepage&q=Suniti%20Chowdhury&f=false. 
 7. 7.0 7.1 "826. Sudhin Kumar (1918-1984), 827. Suniti Choudhury, Ghosh (1917-1988)".
 8. 8.0 8.1 8.2 8.3 8.4 Sansad Bangali Charitavidhan (Bengali). 
 9. ட்ரொலொகிநாத சக்ரவர்த்தி, ஜெலீ டிரிஷ் பச்சார்: பாகிஸ்தான்-பாரத ஸ்வாமிநாத சங்ராம், புத்திசாலித்தனம், ஜாகுவா, ঢாகம் ¬00004, பத்தாம் 18২.
 10. 10.0 10.1 . 
 11. . 
 12. "INDIA: Bengal Pains". http://content.time.com/time/magazine/article/0,9171,753212,00.html. 
 13. "WOMEN KILL MAGISTRATE". pp. 37. http://nla.gov.au/nla.news-article90637603. 
 14. 14.0 14.1 "INDIA: I & My Government". http://content.time.com/time/magazine/article/0,9171,743094,00.html. 
 15. "দেশের প্রথম মহিলা জেল এখন আই আই টি'র গুদামঘর!". 2022-02-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-04-24 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதி_சௌத்ரி&oldid=3604840" இருந்து மீள்விக்கப்பட்டது