சுனிதா துலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுனிதா துலால்
Sunita Dulal.jpg
ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் சுனிதா துலால்
பின்னணித் தகவல்கள்
பிறப்புஜல்பைர், சிந்துபால்சோக் மாவட்டம், நேபாளம்
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், நேபாள நாட்டுப்புறப் பாடகர்
தொழில்(கள்)பாடுதல்
இசைத்துறையில்2009– தற்போது வரை

சுனிதா துலால் (Sunita Dulal) நேபாளத்தின் காட்மாண்டுவின் நாட்டுப்புற பாடகராவார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக நேபாளி நாட்டுப்புற, நவீன பாடல்களைப் பாடுகிறார். சுனிதா துலால் ஒரு பன்முக இளம் நேபாளி பெண்ணாவார். பாடுவதைத் தவிர, சுனிதா துலால் நடிப்பு, என்.டி.வி ( நேபாள தொலைக்காட்சி), மற்றும் விளம்பங்களிலும் நிகழ்ச்சியை வழங்குகிறார். சமீபத்தில், இவர் தனது 13வது இசைத் தொகுப்பான மேரோ ஹஜூர் என்பதை சந்தையில் வெளியிட்டார். இது இவரது மற்றொரு வெற்றியாக நேபாள தீஜ் பண்டிகை தொகுப்பாக பிரதிபலிக்கிறது. தீஜ் திருவிழா பொதுவாக சூலை பிற்பகுதியிலிருந்து செப்டம்பர் தொடக்கத்தில் வரும். இவர், சமீபத்திய தீஜ் பண்டிகைக்கான நச்சாவ் சராரா என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இது இவரது 15வது வெளியீடாகும். இதில் தீஜ் கோ அயோ லஹாரா மற்றும் சுப்பா மோய் கவுலா ஆகிய பாடல்கள் அடங்கும். 365 நேபாள கலைஞர்கள் அடக்ன்கிய மெலஞ்சோலி என்ற சுற்றுச்சூழல் பாடலிலும் இவர் பங்கேற்றார். அதில் "ஒரு பாடல் பதிவில் அதிக குரல் தனிப்பாடல்கள்" என்ற தலைப்பில் கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது. இதனை நிபேஷ் தாகா என்பவர் இசையமைத்து இயக்கியிருந்தார். [1] மே 19, 2016 அன்று, துலால் தனது குழுவுடன் நேபாள வானொலி அரங்கத்தில் பதிவுசெய்தார். காத்மாண்டுவில் உள்ள இராணுவ அதிகாரிகள் சங்கத்தில் குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி 2 செப்டம்பர் 2017 இல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். [2]

வாழ்க்கையும், தொழிலும்[தொகு]

இவர், சிந்துபால்சோக் மாவட்டத்தின் ஜல்பைர் என்ற ஊரில் பிறந்தார். கோல்டன் பிரைட் பியூச்சர் உறைவிடப் பள்ளியிலும், சிந்துபால்சோக்கின் ஜல்பைரில் உள்ள சிறீ ஆனந்த் மேல்நிலைப் பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். உயர்கல்வி முடிந்ததும், மேலதிக படிப்புக்காக காத்மாண்டுக்குச் சென்றார். பின்னர் காத்மாண்டுவில் உள்ள பத்ம கன்யா வளாகத்தில் இருந்து மனிதநேயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர், இளம் வயதிலேயே இசைத் துறையில் நுழைந்தார். இவர் 100க்கும் மேற்பட்ட நேபாளி நாட்டுப்புற பாடல்களை பதிவு செய்துள்ளார். இவர் இசை ரீதியாக வளர்க்கப்பட்ட குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.

அருணா லாமாவின் சிறந்த ரசிகரான சுனிதா துலால் கூறுகிறார், “நான் மூன்றாம் வகுப்பில் மட்டுமே இருந்தபோது எனது ஆசிரியர்களும் மூத்தவர்களும் என்னை எப்படி பாடவும் நடனமாடவும் செய்தார்கள் என்பது எனக்கு நினைவிருக்கிறது”. [3] இவர் தனது பாடல் வாழ்க்கையில் தனது முக்கிய தாக்கங்களில் ஒன்றாக தனது தாயையும் குறிப்பிடுகிறார். இவர், அமெரிக்கா, ஐரோப்பா, தென் கொரியா, யப்பான், மலேசியா, ஆங்காங், பல மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சுனிதா துலால் தற்போது தனது தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். திருமண வாழ்க்கையைப் பற்றி இவர் சிந்திக்கவில்லை. இவர் சில ஆண்டுகள் கழ்ந்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_துலால்&oldid=3107812" இருந்து மீள்விக்கப்பட்டது