சுனிதா காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுனிதா காந்தி (Sunita Gandhi) ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். உத்திரப்பிரதேச மாநிலம் இலக்னோவில் 1961 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாளன்று சகதீசு காந்திக்கும் பாரதி காந்திக்கும் மகளாகப் பிறந்தார். கேம்பிரிட்ச்சுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[1][2] உலக வங்கியில் பொருளாதார நிபுணராக பணியாற்றியுள்ளார்.[3] பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் அமைப்பான தேவி சன்சுதான் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர்-தலைவராக அறியப்படுகிறார். இந்தியா சாதனையாளர்கள் புத்தகத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான கல்வியாளர் விருதும், 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதற்கான டைனிக் பாசுகர் விருதும் பெற்றுள்ளார்.[4][5][6][7][8][9]

தொழில்[தொகு]

பல்வேறு காரணங்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் கிராமப்புறங்களில் உள்ளனர். 30 நாட்களுக்குள் அடிப்படை கல்வியறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் சுனிதா காந்தி இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறார். வசதியற்ற குழந்தைகளுக்கும் இந்த புதிய வழியை இவரது இயக்கம் கற்றுக்கொடுக்கிறது.

உலகளாவிய கனவு எழுத்தறிவு ஆய்வை சுனிதா காந்தியும் இவரது குழுவினரும் உத்தரப்பிரதேசத்தில் மேற்கொண்டனர்.[10][11][12]

கன்சாசு பல்கலைக்கழகத்தில் சுனிதா காந்தி ஒரு நூலகர் ஆவார்.[13] அவுட் லுக் ,[14] தி இந்து,[15] குட்ரீட்சு, தெக்கான் எரால்டு,[16] பொருளாதார மற்றும் அரசியல் வார இதழ்,[17] பைனான்சியல் எக்சுபிரசு,[18] பிசுனசு வோர்ல்டு எடுகேசன்[19] ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். 1994 ஆம் ஆண்டு தனது சக முனைவர் இராபர்ட் சாண்டர்சுடன் இணைந்து உலகளாவிய கல்விக்கான மன்றத்தை லை நிறுவினார்.[20][21][22][23]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr Sunita Gandhi: Transforming Education, Changing Lives". femina.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  2. Swarup, Anil (2021-05-05). "Nexus of Good: Global Dream". www.millenniumpost.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  3. "'Learn to Read, Write in 30 Hours': Ex-World Bank Economist's Inverted Teaching Helps 5 lakh Rural Kids". News18 (in ஆங்கிலம்). 2022-05-08. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  4. "World Bank Economist Quits Job, Helps Educate 800+ Women At Just Rs 5 Per Head!". The Better India (in ஆங்கிலம்). 2019-09-24. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  5. "India Literacy Board (ILB) Appoints Dr Sunita Gandhi as the new Vice-Chairman – This Week India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  6. admin (2020-09-12). "An interview with Dr Sunita Gandhi, Founder of GETI AND GCPL on How Covid-19 has impacted the education system in India". The Education Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  7. "Educationist and innovator Dr Sunita Gandhi develops new pedagogy 'Global Dream -ALfA'". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  8. Tiwari, Ramji. "Devi Sansthan NGO & Global Dream - Non Profit initiative, Non Profit Literacy Campaign, Literacy Campaign, Global Dreamshaala Literacy Campaign, Saaksharta Abhiyan ,DEVI Sansthan and SBI Foundation to implement Global Dreamshaala". www.dignityeducation.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  9. "DainikBhaskar.com honours visionaries of Uttar Pradesh". www.printweek.in. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  10. "International Literacy Day: Turning uneducated women into literacy champs". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  11. gargi.chaudhry. "Lucknow NGO funds free education, stay of over 300 COVID orphans". Asianet News Network Pvt Ltd (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  12. "Sunita Gandhi - Empowering Education All Over The World" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-13. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  13. "Sunita Gandhi". lib.ku.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Sunita Gandhi – Outlook Money". outlookmoney.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  15. Gandhi, Sunita (2021-03-27). "Competition, a catalyst?" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/education/competition-a-catalyst/article34178970.ece. 
  16. "Sunita Gandhi". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  17. "Sunita Gandhi" (in en). Economic and Political Weekly: 7–8. 2015-06-05. https://www.epw.in/author/sunita-gandhi. 
  18. "Right to Education: How Far Can 'Padhna Likhna Abhiyan' Go to Improve Literacy Rates in India?". Financialexpress (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  19. "Sunita Gandhi, Author at The Daily Guardian". The Daily Guardian (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  20. "Global Classroom boss uses lockdown-time to bond with son, likes playing Chinese checkers & Mastermind". m.economictimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  21. "Global Classroom". globalclassroom.in. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  22. "India Literacy Board (ILB) Appoints Dr Sunita Gandhi as the new Vice-Chairman". India Education | Latest Education News | Global Educational News | Recent Educational News (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
  23. Agrawal, Palak (2020-12-30). "This Educationist Launches 'Global Dream Shaala' To Provide Free Lessons To Out-of-School Children, Adults". thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_காந்தி&oldid=3584269" இலிருந்து மீள்விக்கப்பட்டது