சுனாமிப் புகைப்படத்துக்கு உலக விருது
Appearance
டிசம்பர் 26, 2004 இல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கிப் பேரழிவை விளைவித்த ஆழிப்பேரலை சோகத்தைச் சித்தரிக்கும் நோக்கில் தமிழகத்தின் கடலூர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு உலகச் செய்திப் புகைப்பட விருது கிட்டியிருக்கிறது.[1]
இது ராய்ட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்தைச் சார்ந்த ஆர்கோ தத்தா என்ற புகைப்பட நிபுணர் 2004 டிசம்பர் 28-ஆம் தேதி எடுத்த படம் ஆகும்.
சுமார் 70,000 புகைப்படங்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சுனாமியின் போது தப்பிபிழைத்த பெண்மணி ஒருவர், கடற்கரையில், தம் உறவினர் ஒருவரின் உடல் அருகே கதறுவதைக் காட்டும் இந்தப் புகைப்படம், சுனாமி அழிவின் கோரத்தையும், சோகத்தையும் துல்லியமாகச் சித்தரிப்பதாக ஆம்ஸ்டர்டாம் நகரில் இப்போட்டியை நடத்தியவர்கள் கூறுகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tsunami picture news". Arko Datta. movingimages. Retrieved 05 சூலை 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)