சுனந்தா ராஜேந்திர பவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனந்தா பவார்
பிறப்பு31st மே 1959
தேசியம்இந்தியர்
பணிவிவசாயி, பெண்ணார்வலர்
அமைப்பு(கள்)விவசாய மேம்பாட்டுக் குழு (ADT),பூனே, இந்தியா
அறியப்படுவதுசமூக செயல்பாடு
குறிப்பிடத்தக்க படைப்புகள்பீம்தாடி ஜாத்ரா
பட்டம்Tவிவசாய மேம்பாட்டுக் குழு அறங்காவலர் (ADT), Baramati
வாழ்க்கைத்
துணை
ராஜேந்திர திங்கன்ராவ் என்னும் அப்பாசாகேப் பவார்
பிள்ளைகள்1. ரோகித் ராஜேந்திர பவார், 2. சாயி பவார்-நேகி
வலைத்தளம்
https://bhimthadijatra.com, https://agridevelopmenttrustbaramati.org

சுனந்தா ராஜேந்திர பவார் ஒரு இந்திய பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். [1] இவட் சுனந்தாதாய் என்றும் அழைக்கப்படுகிறார். புனேவில் உள்ள பாராமதியில் விவசாய மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். [2] இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மருமகளும் கர்ஜத்-ஜாம்கேட் பகுதியின் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினரான ரோஹித் பவாரின் தாயாரும் ஆவார். [3] [4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

மோகன்ராவ் நாம்தேவ்ராவ் பாப்கர் மற்றும் சாவித்ரிபாய் மோகன்ராவ் பாப்கர் ஆகியோருக்கு மஹாராஷ்டிராவின் பாராமதியில் 31 மே, 1959 இல் பவார் மகளாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கதல்பட்டா சி. பி. பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை பாராமதியிலுள்ள மகாத்மா காந்தி பாலக் மந்திர் பள்ளியிலும், இளநிலைக் கல்வியை இந்தாபூர் சத்ரபதி வித்யாலயா பவானிநகரிலும் முடித்தார். 1980 இல் புனே பல்கலைக்கழகத்தில் 'பொருளாதாரத்தில்' பட்டம் பெற்றார். பின்னர் ராஜேந்திர பவாரை மணந்தார். இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கர்ஜத்-ஜாம்கேட்டில் இருந்து மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ரோஹித் பவாரின் தாயார் ஆவார்.

சமூக செயல்பாடுகள்[தொகு]

பீம்தாடி ஜாத்ராவில் பழங்குடியினரின் நாட்டுப்புற நடனம்

பீம்தாடி ஜாத்ரா[தொகு]

சுனந்தா பவார், 2008 முதல் பீம்தாடி ஜாத்ரா என்ற வருடாந்திர திருவிழாவை ஏற்பாடு செய்து வருகிறார். ஒரு வார கால நிகழ்வான மகாராஷ்டிராவின் இக்கிராமப்புற கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைல் காட்சிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்களின் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டது.[5] [6] [7]

சோப்தி[தொகு]

பவாரின் "சோப்தி" திட்டம், மாதவிடாய் விழிப்புணர்வை பரப்புவதற்கும், கிராமப்புற பெண்களுக்கு மாதவிடாய்க்குத் தேவையான பொருட்கள் எளிதாகக் கிடைப்பதற்கும் நிறுவப்பட்டது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கிராமப்புற இந்தியாவில் 55,000 கல்லூரி வயதுப் பெண்களைச் சென்றடைந்துள்ளது. [8] [9]

நீர் பாதுகாப்பு[தொகு]

மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் நீர் பாதுகாப்பு பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட குழுக்களுக்கு பவார் தலைமை தாங்கினார். இந்தக் குழுக்களும் முன்முயற்சித் திட்டங்களும் மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தி, தண்ணீர் வரத்தை அதிகரித்துள்ளன.[10] [11]

பெண்களுக்குக் காவல் பயிற்சி[தொகு]

பவார், பெண் காவல் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கும் அவர்களின் பயிற்சிக்கான உதவித்தொகைகளை வழங்குவதற்குமான முயற்சியை வழிநடத்துகிறார். இந்த முயற்சியைத் தொடங்கியதிலிருந்து, மகாராஷ்டிராவில் 600க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்துறை அதிகாரிகளாகியுள்ளனர். [12] [13]

குறிப்புகள்[தொகு]

  1. "Guest Speakers". www.lmad.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-15.
  2. Khyade, Vitthalrao B.; Pawar, Sunanda Rajendra; Borowski, Jerzy (2016). "Physical, nutritional and biochemical status of vermiwash produced by two earthworm species Lampito mauritii (L) and Eudrillus eugeniae (L)." (in English). World Scientific News (42): 228–255. பன்னாட்டுத் தர தொடர் எண்:2392-2192. https://www.infona.pl//resource/bwmeta1.element.psjd-aad2179e-43b2-45a8-843b-1f0f654839f0. 
  3. "Sharad Pawar's grandnephew Rohit Pawar to contest Zilla Parishad elections, says he wants to do social work at grassroots level". punemirror.com (in Indian English). 2017-02-09. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  4. "महाराष्ट्राची आधुनिक सावित्री 'सुनंदा पवार' | Jamkhed Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-14. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  5. "Bhimthadi Jatra returns after 2 years with 230 stalls | Pune News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Dec 23, 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. "13th edition of Bhimthadi Jatra to focus on 'recycle, reuse and sustain'". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-12-14. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  8. "'सोबती'चा लाखाचा टप्पा पार". eSakal - Marathi Newspaper (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  9. "Help Rural India | Social Work for rural India". helpruralindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  10. "Spirit of competition turns barren Pune village into green". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  11. "जलसंधारणाच्या कामासाठी लोकसहभागाची चळवळ होणे गरजेचे - सुनंदा पवार". eSakal - Marathi Newspaper (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  12. "बारामतीच्या २५ मुलींची पोलिस शिपाई पदावर नियुक्ती". eSakal - Marathi Newspaper (in மராத்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
  13. "अकरा वर्षांच्या संसारानंतर तिने घर सावरण्यासाठी कंबर कसली.. सुनंदाताईंची एक भेट तिचे सारे आयुष्य बदलणारी ठरली..! आज ती म्हणाली.. मैं हूॅं खुश रंग 'हिना'..! - Maha News Live". mahanews.live (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_ராஜேந்திர_பவார்&oldid=3666768" இலிருந்து மீள்விக்கப்பட்டது