உள்ளடக்கத்துக்குச் செல்

சுனந்தா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனந்தா நாயர்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
கல்விமும்பை பல்கலைக்கழகம் (முனைவர்)
பணிநிறுவனர்/இயக்குநர், சுனந்தா நிகழ்த்துகலை மையம்
Career
Dances
வலைத்தளம்
www.sunandanair.com

 

சுனந்தா நாயர் (Sunanda Nair) மோகினியாட்டத்தில் பயிற்சி பெற்ற இந்திய நடனக் கலைஞர் ஆவார். மும்பையில் பிறந்த சுனந்தா[1]மும்பை பல்கலைக்கழக இணைவு நிறுவனமான நாளந்தா நிருத்ய கலா மகாவித்யாலயாவில் மோகினியாட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். "கினியாட்டத்தில் உள்ளார்ந்த பாடல் சார்ந்த பெண்ணியம்" என்ற தனது ஆய்வறிக்கைக்காக மும்பை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினையும் முடித்துள்ளார், சுனந்தா நாயர்.

இளமை

[தொகு]

சுனந்தா தனது ஆறாவது வயதில் பரதநாட்டியத்தில் ஆரம்பப் பயிற்சியினைப் பெற்றார். கலாமண்டலம் கிருஷ்ணன்குட்டி வாரியரிடம் கதகளி பயின்றார்.

சுனந்தா, பாரம்பரியக் கேரள நடனப் பாணியின் மறுமலர்ச்சியினைப் பிரபலப்படுத்திய புகழ்பெற்ற மோகினியாட்ட கலைஞரான கனக் ரெலேவின் சீடர் ஆவார்.

இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நாலாந்தா நிருத்ய கலா மகாவித்யாலேயின் மாணவி ஆவார். இங்கு மோகினியாட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர் ஆவார். இவர் ஏழு வருட படிப்பை ஐந்து வருடங்களில் முடித்தார். இந்த நிறுவனம் குரு குல சம்பிரதாயத்திற்கு மிக நெருக்கமானது.

மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் நிகழ்த்து கலையில் இளங்கலை & முதுநிலை படிப்பினை இணைந்து பெற்றார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் நடனத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

தொழில்

[தொகு]

பட்டம் பெற்ற பிறகு, இவர் நாளந்தாவில் பணிபுரிந்தார். 1999 வரை ஒன்பது ஆண்டுகள் தான் பயின்ற கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்.

கலைமாமணி கதிர்வேலு, கலைமாமணி மகாலிங்கம் பிள்ளை, டி.வி.சௌந்தரராஜன், தீபக் மஜூம்தார், தேஜிஸ்வினி ராவ் போன்றோரிடம் காட்டுமன்னார் முத்துக்குமார் பிள்ளையின் பானியில் படித்தவர்.

1980ஆம் ஆண்டு, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, மோகினியாட்டம் மற்றும் பரதநாட்டியம் இரண்டிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சருதிலயா நுண்கலை நிறுவனத்தைத் தொடங்கினார்.

நிகழ்ச்சிகள்

[தொகு]
சுனந்தா நாயர் மோகினியாட்டத்தை முன்னின்று நடத்துபவர்களில் ஒருவர்.
  • முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இந்திய விழா
  • வட கொரியாவில் வசந்த நட்பு கலை விழா
  • மத்திய கிழக்கு, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் நிகழ்ச்சிகள்
  • மத்திய பிரதேசத்தில் கஜுராஹோ திருவிழா
  • ஒரிசாவில் கொனார்க் நடன திருவிழா
  • ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் உதய்பூரில் யுவ மஹோத்சவ்
  • நிஷாகந்தி, கேரள சுற்றுலா, திருவனந்தபுரம்
  • காளிதாஸ் சமராவோ, உஜ்ஜைன்
  • மோதேரா விழா, குஜராத்
  • மைசூர் தசரா விழா
  • நிருத்யோத்சவா, மத்திய சங்கீத நாடக அகாதமி, பெங்களூர்
  • இந்தோ-இந்தோனேசிய நட்புறவு சங்கம்
  • வள்ளத்தோள் ஜெயந்தி, கேரள கலாமண்டலம்
  • சார்க் மாநாடு, மும்பை
  • சங்கீதா சபா, பூனா
  • சுவாதி திருநாள் சங்கீத சபை, திருவனந்தபுரம்
  • சக்ரதர் சமராவோ, இராசச்தான் சங்கீத நாடக அகாடமி
  • இந்திய சர்வதேச மையம், அப்னா உத்சவ், புது தில்லி
  • கிருஷ்ண கான சபா, பாரத் கலாச்சார், பாரதிய இசை மற்றும் கலை, மெட்ராஸ்
  • தேசிய நிகழ்த்து கலை மையம், மும்பை
  • சுவாமி அரிதாசு சங்கீத சம்மேளம், மும்பை
  • கல்-கே-கலகர், மும்பை
  • நித்யா நித்யாதி மற்றும் தன்மை ஆரோகணம் விழா, பெங்களூர்
  • சிறீ சித்ரா நடன விழா, திருவனந்தபுரம்
  • நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, இசை கழகம், சென்னை
  • தேசிய மோகினி அட்ட விழா, நேரு மையம், மும்பை.
  • சூரிய பரம்பரா நடன விழா, திருவனந்தபுரம், கேரளா
  • இந்திய வாழிட மையம், புது தில்லி
  • தாரிணி, கொச்சி, கேரளா
  • பருவகால கலைவிழா-இந்தியா, புது தில்லி
  • மழைத்துளிகள் திருவிழா, சாம்வேட் மும்பை
  • பாரதம், திருச்சூர், கேரளா
  • சோபானம், மும்பை
  • கலா சேத்திரம், மும்பை
  • ஆசிய பசிபிக் பாரம்பரிய விழா
  • கேரளா சங்கீத நாடக அகாதமி -சூலை 2015, போபால்

அங்கீகாரம்

[தொகு]
2011ல் கேரள சங்கீத நாடக அகாதமியின் கலாசிறீ விருது விழாவில்
  • 'உலக மன்னம் விருது', வட அமெரிக்க நாயர் சமூக சேவை நிறுவனம், நியூயார்க் 2020
  • 'நிருத்ய சேவா மணி விருது', கிளீவ்லாந்து தியாகராசர் விழா 2020
  • 6வது பன்னாட்டு ஊடக மாநாடு-2019 'உலக சிறப்பு விருது'
  • கதகளி & கலை 2018க்கான பெங்களூர் குழும 'மேற்கோள்'
  • 'முத்திரை பதித்த வித்தகர்', நாட்டியாஞ்சலி விழா, நாட்டியாஞ்சலி நிறுவனம் 2018
  • 'அனந்த மார்கசீர்சா நாட்டிய விருது', நாயர் சங்கமம் 2018
  • 'நாளந்தா கனக நர்த்தன விருது', நாளந்தா நடன ஆராய்ச்சி மையம் 2017
  • கேரளா கலாமண்டலம்-2016, 'கலரத்தினம்'.
  • கேரள சங்கீத நாடக அகாதமி விருது (கலாசிறீ விருது) 2011 [2]
  • 'உலக சிறப்பு விருது' 2011, புது தில்லி
  • மறைந்த கலாமண்டலம் கிருஷ்ணன்குட்டி நினைவாக "கலாசாகர்" 2010
  • "அபிநயா சிரோமணி" சூர்யா நிகழ்த்துக் கலை, மிசோரி, அமெரிக்கா.
  • அபிநய, நடன அமைப்பில் மேம்பட்ட பயிற்சிக்காக மத்திய சங்கீத நாடக அகாதமியின் உதவித்தொகை
  • மும்பையைச் சேர்ந்த சுர் சிங்கர் சம்சாத்தின் 'பாடகர் மணி'
  • மோகினியாட்டத்திற்கு நெல்லுவாய் நம்பீசன் இசுமரக் விருது
  • 'நாட்டிய மயூரி' நாட்டியாஞ்சலி நிறுவனம், சென்னை
  • சிறந்த தொன்மை கலை விருது, நியூ ஆர்லியன்சு, 2003
  • லூசியானா மாநில கலைஞர் பணி
  • லூசியானா டூரிங் டைரக்டரி
  • உலக சிறந்த நடன விருது, நியூ ஆர்லியன்சு
  • சமூக சேவைக்கான விருது, நியூ ஆர்லியன்சு இந்தியச் சங்கம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srikanth, Rupa (27 December 2018). "Sunanda Nair shows the essence of the 'Nalanda Bani'" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/music/sunanda-nair-shows-the-essence-of-the-nalanda-bani/article25840995.ece. 
  2. "Kerala Sangeetha Nataka Akademi Award: Dance". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 26 February 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனந்தா_நாயர்&oldid=4201939" இலிருந்து மீள்விக்கப்பட்டது