சுந்தா மாதா கோயில்

ஆள்கூறுகள்: 24°49′59″N 72°22′01″E / 24.833°N 72.367°E / 24.833; 72.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தா மாதா கோயில்
சுந்தா மாதா கோயில் is located in இராசத்தான்
சுந்தா மாதா கோயில்
இராஜாஸ்தானில் கோயிலின் அமைவிடம்
சுந்தா மாதா கோயில் is located in இந்தியா
சுந்தா மாதா கோயில்
சுந்தா மாதா கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ராஜஸ்தான்
மாவட்டம்:ஜலோர்
அமைவு:சுந்தா, பின்மால்
ஆள்கூறுகள்:24°49′59″N 72°22′01″E / 24.833°N 72.367°E / 24.833; 72.367
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:தெரியவில்லை
இணையதளம்:http://sundhamatatemple.in/
மலைகளுக்கு இடையே பல படிக்கட்டுகள் இருப்பதால், சுந்தா மாதா கோவிலுக்குச் செல்ல கம்பிவட சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுந்தா மாதா கோயில் (Sundha Mata Temple) என்பது இராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் தீர்க்கரேகை 72.367°கிழக்கிலும் அட்சரேகை 24.833°வடக்கிலும் அமைந்துள்ள சுந்தா என்ற மலையுச்சியில் அமைந்துள்ள சாமுண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுமார் 900 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இது அபு மலையிலிருந்து 64 கிமீ தூரத்திலும், பின்மால் நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. [1]

நிலவியல்[தொகு]

சுந்தா மலையில் ஆரவல்லி மலைத்தொடரில் 1220 மீ உயரத்தில் சாமுண்டி தேவியின் கோயில் உள்ளது. இது பக்தர்களால் சுந்தமாதா என்று வணங்கப்படுகிறது. இது மாவட்டத் தலைமையகத்திலிருந்து 105 கிமீ மற்றும் துணைப்பிரிவு பின்மாலில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது. இந்த இடம் மல்வாராவின் மத்திய கிழக்கில் உள்ள ராணிவாரா வட்டம் முதல் ஜஸ்வந்த்புரா சாலை வரை தண்டலவாஸ் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

இக்கோயிலுக்கு குசராத்து, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்குள்ள சூழல் புதியதாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறது. மலையிலிருக்கும் அருவிகளில் ஆண்டு முழுவதும் நீர் பாய்கின்றன. பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பல சமூகங்கள் பக்தர்களுக்காக சமூக மையங்களை நிறுவியுள்ளன. இரவில் மலையின் உச்சியில் தங்கி சாமுண்டி தேவியை வழிபட சிறந்த வசதிகள் உள்ளன.

கட்டிடக்கலை[தொகு]

சுந்தா கோயில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆனது. இந்த தூண்கள் அபு மலையின் தில்வாரா கோயில் தூண்களின் கலையை நினைவூட்டுகின்றன. பெரிய கல்லின் அடியில் சாமுண்டி தேவியின் மிக அழகான சிலை உள்ளது. இங்கு சாமுண்டியின் தலை வணங்கப்படுகிறது. அன்னை சாமுண்டியின் தும்பிக்கை கோர்டாவிலும் கால்கள் சுந்தர்லா பாலிலும் (ஜலோர்) நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அன்னை சாமுண்டியின் முன் பூர்புவ சுவவேசுவர் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. பிரதான கோவிலில் சிவன் மற்றும் பார்வதியின் இரட்டை சிலை, பிள்ளையார் சிலை மிகவும் பழமையானதாகவும் அழிந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது.

வனவிலங்கு சரணாலயம்[தொகு]

கோயிலின் அருகிலுள்ள வனப்பகுதியில் நரி கழுதைப்புலி காளை, காட்டுப்பூனை காடை, ஆந்தை, பிணந்தின்னிக் கழுகு, முள்ளம்பன்றி, புறா, மற்றும் 120 வகையான பறவையினங்களும் உள்ளன.

வசதிகள்[தொகு]

கோயில் பகுதிக்கு அருகில் பக்தர்கள் இரவில் ஓய்வெடுக்கவும், மலையின் இயற்கைக்காட்சிகளை ரசிக்கவும் அறக்கட்டளையால் ஒரு பெரிய சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், சுந்தா மலையில் ஏறுவதற்கு ஒரு கம்பிவட சேவை [2] தொடங்கப்பட்டது. இது யாத்ரீகர்களுக்கு பயணத்தை எளிதாக்குகிறது.

சான்றுகள்[தொகு]

  1. "जालोर पर्यटन स्थल (Jalore tourist place)". Archived from the original on 2022-01-30. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
  2. "सुंधा माता रोप-वे पर मनमानी प्रशासन को दिख नहीं रही". patrika. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தா_மாதா_கோயில்&oldid=3584268" இலிருந்து மீள்விக்கப்பட்டது