உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தரராஜு சோமு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தரராஜூ சோமு
Sundarajoo Somu
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 ஆகத்து 2023
ஆளுநர்அகமது புசி அப்துல் ரசாக்
(2023–2025)
ராம்லி நிகா தாலிப்
(2025 தொடக்கம்)
அமைச்சுவீடமைப்பு சுற்றுச்சூழல்
முன்னையவர்ஜக்தீப் சிங் டியோ (வீடமைப்பு)
பி பூன் போ (சுற்றுச்சூழல்)
தொகுதிபிறை சட்டமன்றத் தொகுதி
பினாங்கு மாநில சட்டமன்றம்
பிறை சட்டமன்றத் தொகுதி
பதவியில்
12 ஆகத்து 2023  தற்போது வரையில்
முன்னையவர்இராமசாமி பழனிச்சாமி
(பாக்காத்தான் அரப்பான்ஜசெக)
பெரும்பான்மை9,139 (2023)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Sundarajoo a/l Somu

23 மே 1962 (1962-05-23) (அகவை 64)[1]
பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர், சிலாங்கூர், மலாயா கூட்டமைப்பு (மலேசியா)
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி ஜனநாயக செயல் கட்சி (DAP)
(2018 தொடக்கம்)
பிற அரசியல்
தொடர்புகள்
பாக்காத்தான் அரப்பான் (PH)
(2018 தொடக்கம்)
பிள்ளைகள்4
முன்னாள் மாணவர்நாட்டிங்காம் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி

சுந்தரராஜூ சோமு (ஆங்கிலம்; மலாய்: Sundarajoo Somu‎) (பிறப்பு: 23 மே 1962) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2023 ஆகத்து 12-ஆம் திகதியில் இருந்து, பினாங்கு முதல்வர் சாவ் கொன் யாவ் அவர்களின்; பாக்காத்தான் அரப்பான் (PH) மாநில நிர்வாகத்தில் பினாங்கு மாநில ஆட்சிக்குழு (EXCO) உறுப்பினராகவும்; பிறை சட்டமன்றத் தொகுதிக்கான பினாங்கு மாநில சட்டமன்ற (MLA) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினராகவும் உள்ளார்.

தொடக்ககால வாழ்க்கை

[தொகு]

சுந்தரராஜு, கோலாலம்பூரில் உள்ள பிரிக்பீல்ட்ஸ் கிராமப் பகுதியில் 23 மே 1962 அன்று ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.[2]

கல்வி

[தொகு]

தொடக்கத்தில் கோலாலம்பூர் பெடரல் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பட்டச்சான்றிதழ் பெற்ற இவர். பின்னர் இங்கிலாந்து, நொட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.[2]

வாழ்க்கை

[தொகு]

சுந்தரராஜூ முதன்முதலில் மலேசியப் பொது காப்பீட்டு சங்கத்தில் (General Insurance Association of Malaysia) ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். 1987-ஆம் ஆண்டு பன்னாட்டு அளவிலான நிதி நெருக்கடியின் போது தன் வேலையை இழக்க நேர்ந்தது. அதன் பின்னர் அவர் ஒரு ரப்பர் தோட்டத்தில் கண்காளிப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், எஸ்பி செத்தியா (SP Setia) எனும் நில சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் டான் ஸ்ரீ லியூ கீ சின் வசித்து வந்த இடத்தில் ஒரு பாதுகாப்பு காவலராகப் பணிபுரிந்தார்.

அதற்கு முன்பு வாடகைக்கார் ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர். 2005-இல் எஸ்பி செத்தியா எனும் நிறுவனத்தில் விற்பனையாளராகச் சேருவதற்கு முன்பு, டான் ஸ்ரீ லியூ கீ சின் அவர்களின் வாகன ஓட்டுநராகவும் பணியாற்றினார். 2012-இல், எஸ்பி செத்தியா நிறுவனத்தின் மலேசிய வடக்குப் பகுதிக்கான பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.

2014-ஆம் ஆண்டில், எஸ்பி செத்தியா நிறுவனத்தை பெர்மோடலான் நேசனல் நிறுவனம் (Permodalan Nasional Berhad) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, எக்கோவேர்ல்ட் (EcoWorld) எனும் சுற்றுலா ஈர்ப்பு நிறுவனத்தை அமைக்க டான் ஸ்ரீ லியூ கீ சின்னுக்கு உதவினார். சிறிது காலத்திற்குப் பின்னர் எக்கோவேர்ல்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும்; துணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்றார்.[2][3]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

சுந்தரராஜூ சோமு, 2018-ஆம் ஆண்டில் ஜனநாயக செயல் கட்சியில் சேர்ந்தார்.[2]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பினாங்கு மாநில சட்டமன்றம்[4]
ஆண்டு தொகுதி வேட்பாளர் பெற்ற
வாக்குகள்
% எதிரணி வாக்குகள் % பதிவான
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2023 N16 பிறை சுந்தரராஜூ
சோமு
10,680 76.76% சிவசுந்தரம் ராசலிங்கம் (கெராக்கான்) 1,541 11.08% 14,044 9,139 68.58%
டேவிட் மார்சல் பாக்கியநாதன் (சுயேச்சை) 1,439 10.34%
விக்னேசுவரி அரிகிருஷ்ணன் (மூடா) 253 1.82%

விருதுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SENARAI PENERIMA DARJAH-DARJAH KEBESARAN, BINTANG DAN PINGAT-PINGAT KEHORMATAN NEGERI PULAU PINANG 2020" (PDF) (in மலாய்). Warta Kerajaan Negeri Pulau Pinang.
  2. 1 2 3 4 "Former EcoWorld top exec hopes to be 'hero' in Perai seat". Edgeprop.my (in ஆங்கிலம்). Retrieved 2023-12-02.
  3. "I won't stand again if I fail in Perai, vows Sundarajoo". The Star (in ஆங்கிலம்). Retrieved 2023-12-02.
  4. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES" (PDF). Retrieved 2023-12-02.
  5. 1 2 3 "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat". Bahagian Istiadat dan Urusetia Persidangan Antarabangsa. Prime Minister's Department (Malaysia). Retrieved 2023-12-02.
  6. "SENARAI PENERIMA DARJAH-DARJAH KEBESARAN BINTANG DAN PINGAT-PINGAT KEHORMATAN NEGERI PULAU PINANG 2009" (PDF) (in மலாய்). Warta Kerajaan Negeri Pulau Pinang.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரராஜு_சோமு&oldid=4460596" இலிருந்து மீள்விக்கப்பட்டது