உள்ளடக்கத்துக்குச் செல்

சுந்தரராசன் கிடாம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுந்தரராசன் கிடாம்பி
நாடுஇந்தியா
பிறப்பு29 திசம்பர் 1982 (1982-12-29) (அகவை 43)
சென்னை, இந்தியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2009)[1]
உச்சத் தரவுகோள்2526 (சனவரி 2010)

சுந்தரராசன் கிடாம்பி (Sundararajan Kidambi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 1982ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 19ஆவது கிராண்டுமாசுட்டராக அறியப்படுகிறார்.

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

கிராண்டு மாசுட்டர் கிருஷ்ணன் சசிகிரண் இவருக்கு பயிற்சியளித்தார். சுந்தரராசன் கிடாம்பி தனது கிராண்டுமாசுட்டர் விதிமுறைகளை பின்வருமாறு அடைந்தார்.[1][2]

  • 2005ஆம் ஆண்டு சூலை மாதத்தில் கனடிய திறந்தநிலை பன்னாட்டு சதுரங்கப் போட்டி
  • 2008ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் படலோனா பன்னாட்டு சதுரங்கப் போட்டி
  • 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் துபாய் திறந்தநிலை பன்னாட்டு சதுரங்கப் போட்டி

2017ஆம் ஆண்டு சூன் மாதத்தில் எசுப்பானியாவின் மோண்ட்கடாவில் நடந்த கேட்டலான் சதுரங்க சுற்றுப் போட்டியில், அனுப் தேசுமுக்குடன் சமநிலை முடிவுடன் முடித்தார்.[3]

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இசுலே ஆஃப் மேன் பன்னாட்டு சதுரங்கப் போட்டியின் முதல் சுற்றில், விளாடிமிர் கிராம்னிக்கை (இவரை விட 300 புள்ளிகளுக்கு மேல் மதிப்பிடப்பட்டவர்) சமநிலையில் வீழ்த்தினார்.[4]

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நடந்த லிஃப்ரே பன்னாட்டு திறந்தநிலை சதுரங்கப் போட்டியில் 6/9 என்ற புள்ளிகளுடன் கூட்டு ஏழாவது இடத்தைப் பிடித்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "FIDE Title Application (GM)" (PDF).
  2. Kulkarni, Vikramaditya (28 April 2017). "The Golden era of Indian chess: Players born in 1981-83".
  3. Sampat, Amit (28 June 2017). "Deshmukh holds 13th seed Grandmaster Kidambi in 27 moves". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/chess/deshmukh-holds-13th-seed-grandmaster-kidambi-in-27-moves/articleshow/59358426.cms. பார்த்த நாள்: 3 August 2025. 
  4. Pereira, Antonio (21 October 2018). "Isle of Man: Half-upsets".
  5. Ahmed, Shahid (30 October 2019). "Antonio Viani wins double in France".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரராசன்_கிடாம்பி&oldid=4385466" இலிருந்து மீள்விக்கப்பட்டது