சுந்தரம் பைனான்ஸ்
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1954 |
| நிறுவனர்(கள்) | டி. எஸ். சந்தானம் |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| முதன்மை நபர்கள் | ஆனந்த் ராதாகிருஷ்ணன், (நிர்வாக இயக்குநர்)[1] |
| தொழில்துறை | நிதிச் சேவைகள் |
| உற்பத்திகள் | பரஸ்பர நிதி, அடமானக் கடன்கள், காப்பீடு, சிறுதொழில் நிதி; |
| வருமானம் | |
| இயக்க வருமானம் | |
| நிகர வருமானம் | |
| மொத்தச் சொத்துகள் | |
| இணையத்தளம் | www |
சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் (Sundaram Finance Limited) என்பது சென்னையை தளமாகக் கொண்ட ஒரு இந்திய நிதி மற்றும் முதலீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் நுகர்வோர் கடன்கள், செல்வ மேலாண்மை, வணிக நிதி, முதலீட்டு வங்கியியல், தனியார் சமபங்கு, கருவூல ஆலோசனை, கடன் அட்டைகள், உள்கட்டமைப்பு நிதி போன்றவற்றை வழங்குகிறது. [3]
சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் 1954 இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்ளும் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக இந்திய ரிசர்வ் வங்கியில் முறையாக பதிவு செய்துள்ளது. [4] 2017 திசம்பர் நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ₹ 26,000 கோடி இது நாடு முழுவதும் 640 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. [5]
துணை நிறுவனங்களும், கூட்டு முயற்சிகளும்
[தொகு]இந்த நிறுவனம் ஆறு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது மேலும் ₹69 பில்லியன் (ஐஅ$810 மில்லியன்) மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கிறது. 2017 மார்ச் நிலவரப்படி 4,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம், இந்த நிறுவனக் குழு ஆயுள் காப்பீடு, சொத்து மேலாண்மை, தனியார் சமபங்கு, பெருநிறுவன நிதி, கட்டமைக்கப்பட்ட நிதி, காப்பீட்டு தரகு, செல்வ மேலாண்மை, பங்கு தரகு, நாணயத் தரகு, பொருட்கள் தரகு, நிதி ஆலோசனை சேவைகள், வீட்டுவசதி நிதி, ஓய்வூதிய நிதி மேலாண்மை, உடனலக் காப்பீடு, வெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. [6]
2017–18 ஆம் ஆண்டில், சுந்தரம் ஃபைனான்ஸ், ஆட்டோமொடிவ் மற்றும் உற்பத்தி வணிகங்களில் அதன் நிதி சாராத முதலீடுகளை சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (எஸ்.எப்.எச்.எல்) என்ற தனி நிறுவனமாக பிரித்தது. சுந்தரம் கிளேட்டன், டர்போ எனர்ஜி, வீல்ஸ் இந்தியா, பிரேக்ஸ் இந்தியா, ஆக்சில்ஸ் இந்தியா உள்ளிட்ட பல டிவிஎஸ் குழும நிறுவனங்களில் எஸ்.எப்.எச்.எல் சிறிய அளவு பங்குகளை வைத்துள்ளது. [7] [8]
- சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ்
- சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் (முன்னர் சுந்தரம் பிஎன்பி பரிபாஸ் ஹோம் ஃபைனான்ஸ்) [9]
- சுந்தரம் சொத்து மேலாண்மை நிறுவனம்
- சுந்தரம் ஃபண்ட் சர்வீசஸ்
- சுந்தரம் டிரஸ்டி நிறுவனம்
- எல்ஜிஎஃப் சர்வீஸ்
- சுந்தரம் ஃபைனான்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்தில் 50% பங்குகளையும் கொண்டுள்ளது, இது ஏஜியாஸ் (40% பங்கு) மற்றும் இந்திய முதலீட்டாளர்களுடன் (10% பங்கு) கூட்டு முயற்சியாகும். [10]
2025 அக்டோபரில், சுந்தரம் ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ், சுந்தரம் ஃபைனான்ஸிலிருந்து டி.எஸ்.எப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் எனப் பிரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "
- 1 2 3 4 "Sundram Finance Ltd. Financial Statements". moneycontrol.com.
- ↑ "Sundaram Finance spurts 8% post Q1 numbers". The Economic Times. 2018-08-27. https://economictimes.indiatimes.com/markets/stocks/news/sundaram-finance-spurts-8-post-q1-numbers/articleshow/65557471.cms.
- ↑ Dave, Neha (18 September 2018). "Sundaram Finance: A steady performer, buy". Moneycontrol (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 15 July 2020.
- ↑ "Company Overview of Sundaram Finance Limited". bloomberg.com.