சுந்தரகில்லாடி (திரைப்படம்)
| சுந்தரகில்லாடி (திரைப்படம்) | |
|---|---|
| கதை | பாசில் |
| திரைக்கதை | பாசில் |
| படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
சுந்தரகில்லாடி (Sundarakilladi) என்பது 1998 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய மலையாளத் திரைப்படமாகும். முரளி கிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குநர் பாசில் இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் திலீப், ஷாலினி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நெடுமுடி வேணு, குதிரைவட்டம் பப்பு, நந்து மற்றும் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கதைச்சுருக்கம்
[தொகு]'சுவப்பனபூமி' என்ற கிராமம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. அங்கு கிணறு தோண்ட முயற்சிப்பவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். அந்த கிராம மக்களின் வேண்டுகோளின்படி, புகழ்பெற்ற கிணறு தோண்டும் தொழிலாளியின் மகனான பிரேமச்சந்திரன் (திலீப்) அங்கு கிணறு தோண்ட வருகிறான். ஆனால் அவனுக்கு அந்தத் தொழிலில் போதிய அனுபவம் இல்லை. இதற்கிடையில் அவன் அந்த கிராமத்தைச் சேர்ந்த தேவயானி (ஷாலினி) என்ற பெண்ணை காதலிக்கிறான். அவன் அந்த ஆபத்து நிறைந்த கிராமத்தில் கிணறு தோண்டி தண்ணீர் எடுத்தானா? காதலில் வெற்றி பெற்றானா? என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.
நடிகர்கள்
[தொகு]- திலீப் - பிரேமச்சந்திரன் / சுந்தரகில்லாடி
- ஷாலினி - தேவயானி
- நெடுமுடி வேணு - இராஜமாணிக்கம்
- பாபு நம்பூதிரி - சோமாஜி வைத்தியர்
- குதிரைவட்டம் பப்பு - வாசு
- அசோகன் - புவனப்பன்
- நந்து - பிரதீப்
- சங்கராடி - மல்லியண்ணன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு அவுசப்பச்சன் இசையமைத்துள்ளார். பாடல்களை பூவாச்சல் காதர் எழுதியுள்ளார்.