சுதீர் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுதீர் பாபு போசானி
Sudheer Babu at Saina Nehwal's wedding reception (cropped).jpg
2018இல் சுதீர் பாபு
பிறப்பு11 மே 1980 (1980-05-11) (அகவை 41)
கண்டமராஜு, கொண்டூரு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்ஐதராபாத், தெலங்காணா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிரியதர்சினி (2006இல் திருமணம்)
உறவினர்கள்

சுதீர் பாபு (Sudheer Babu) (பிறப்பு போசனி நாக சுதீர் பாபு ; 1980 மே 11) இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும் முன்னாள் தொழில்முறை பூப்பந்து வீரரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு திரையுலகில் பணியாற்றுகிறார் . டோலிவுட்டில் சிவா மனசுலோ ஸ்ருதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பிரேம கதா சித்ரம் மற்றும் பாகி ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் "சுதீர் பாபு புரொடக்சன்ஸ்" என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பூப்பந்து தொழில்[தொகு]

சுதீர் போசானி ஆந்திராவின் விசயவாடாவில் போசானி நாகேஸ்வர ராவ் மற்றும் அவரது மனைவி போசானி ராணி ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு கருணா என்ற ஒரு மூத்த சகோதரி இருக்கிறார். சித்தார்த்த பொதுப் பள்ளியில் விசயவாடாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா தொழில் நுட்ப நிறுவனத்தில் படித்தார். அங்கிருந்து வெளியேறிய பிறகு, ஐதராபாத்தின் மகரிஷி மேலாண்மை நிறுவனத்தில் பட்டம் பெற்றார்.

பின்னர், இவர் பூப்பந்து மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அதை தொழில் ரீதியாக எடுத்துக் கொண்டார். விரைவில் தேசிய பள்ளி விளையாட்டில் இரண்டாவது இடம் பெற்றார். இளையோர் பூப்பந்து உலகக் கோப்பைக்கு சாத்தியமானவர். பாபு இறுதியில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் முதல் தரவரிசை வீரராக ஆனார். இவர் புல்லேலா கோபிசந்த் உடன் இரட்டையர் கூட்டாளராக விளையாடியுள்ளார். [1] பிந்தையவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் இவர் கோபிசந்த் வேடத்தில் நடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. [2]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

கௌதம் மேனன் இயக்கிய யே மாயா சேசாவே என்றப் படத்துடன் சுதீர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இப்படத்தை இவரது மைத்துனர் மஞ்சுளா கட்டமனேனி தயாரித்திருந்தார் . இந்தப் படத்தில், இவர் கதாநாயகியின் சகோதரர் வேடத்தில் நடித்தார். [3] பீம்லி கபாடி ஜட்டு என்ற திரைப்படப்புகழ் டத்தினேனி சத்யா இயக்கிய எஸ்.எம்.எஸ் (சிவா மனசுலோ ஸ்ருதி) படத்தின் மூலம் சுதீர் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். படம் 2012 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்டது. [4] இதை சூப்பர் குட் பிலிம்ஸ் பதாகையின் கீழ் விக்ரம் ராஜு தயாரித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரெஜினா கசாண்ட்ரா சுதீருடன் இணையாக நடித்தார். இந்த படம் 2009ஆம் ஆண்டு வெளியானத் தமிழ்த் திரைப்படமான சிவா மனசுல சக்தியின் மறு ஆக்கமாகும். [5]

கதாநாயகனாக இவரது இரண்டாவது படம் பிரேமா கதா சித்ரம் 2013 சூன் 7 அன்று வெளியிடப்பட்டது. நந்திதா இவருடன் நடித்தார். ஜே. பிரபாகர் ரெட்டி இயக்கிய மற்றும் இயக்குனர் மாருதி தயாரித்த இந்த படம் மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [6] சுதீர் மற்றும் நந்திதா ஆகிய இருவரும் தங்களது நடிப்பால் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றனர். அதே ஆண்டு, இவர் ஆடு மகத்ரா புஜ்ஜி என்ற படத்தில் கதாநாயகனாக தோன்றினார். ஜி. கிருஷ்ணாரெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் அஸ்மிதா சூத் மற்றும் பூனம் கவுர் ஆகியோரும் நடித்திருந்தனர். [7] இவர் தற்போது ராஜு என்பவர் தயாரிப்பில் உருவாகும் "வி" என்ற தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். இது 2020 மார்ச் 25 அன்று வெளியிட திட்டமிடபட்டிருந்ததது. [8]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தெலுங்கு நடிகர் கிருட்டிணாவின் இளைய மகள் பிரியதர்சினியை 2006 ஆம் ஆண்டில் சுதீர் மணந்தார். இந்த தம்பதிக்கு சரித் மானஸ் மற்றும் தர்ஷன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மைத்துனர் ஆவார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதீர்_பாபு&oldid=3347867" இருந்து மீள்விக்கப்பட்டது