உள்ளடக்கத்துக்குச் செல்

சுதா வர்க்கீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதா வர்கீசு
Sudha Varghese
இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடம் பத்மசிறீ விருது பெறும் சுதா வர்கீசு, 2006
பிறப்பு5 செப்டம்பர் 1949 (1949-09-05) (அகவை 76)
கோட்டயம் மாவட்டம், கேரளா, இந்தியா
தேசியம் இந்தியா
பணிசமூகப்பணி
அறியப்படுவதுநாரி குஞ்சன் பள்ளிகள், பிரேர்னா பள்ளிகள்

சகோதரி சுதா என்றும் அழைக்கப்படும் சுதா வர்கீசு (Sudha Varghese) இந்தியாவைச் சேர்ந்த ஓர் முன்னாள் மத சகோதரியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார்.[1] இவர் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலித்த்துகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர். தற்போது இவர் பட்னா மாவட்டத்திலுள்ள ஜம்சவுத் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.[2] இவர் சில நேரங்களில் தீதி (மூத்த சகோதரி) என்றும் அழைக்கப்படுகிறாள்.[3]

பீகாரில் உள்ள தலித் பெண்கள் மற்றும் பெண்களுக்கு கல்வி, எழுத்தறிவு, தொழில் பயிற்சி, சுகாதாரம், வாதிடுதல் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வழங்கும் லாப நோக்கற்ற அமைப்பான நாரி குஞ்சன் ("பெண்களின் குரல்" [4] ) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். நாரி குஞ்சன் 50 வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 1500 பெண்கள் சேர்க்கப்படுகிறார்கள்.[5]

சுதா வர்கீசு, தீண்டாமைக் கருத்துக்கு எதிராகப் போராடியவரும் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவருமான அம்பேத்கர் [4] உத்வேகம் பெற்றதாகக் கூறினார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

சுதா வர்கீசு 1949 செப்டம்பர் 5 அன்று கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தார்.[6] 1965 ஆம் ஆண்டில், நோட்ரே டேம் டி நாமூரின் சகோதரிகளுடன் ஏழைகளுக்காக பணியாற்ற பீகாருக்குச் சென்றார்.[6][7] அங்கு சில ஆண்டுகள் பயிற்சி பெற்ற இவர், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளைக் கற்றுக்கொண்டார்.[8] துறவற மடம் நடத்திய ஒரு பள்ளியி பணியாற்றினார். பின்னர் அதிலிருந்து வெளியேறினார்.[9] பிகாரின் முசாகர் இன மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக 1986 ஆம் ஆண்டில் அவர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு செங்கல் குடிசைக்கு குடியேறினார்.[7][10] சுதா வர்கீசு 21 ஆண்டுகள் அப்பகுதியிலேயே வசித்து வந்தார்.[8]

அங்கு இவர் பள்ளிகளையும் ஒரு வீட்டையும் கட்டினார். வன்கலவி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை கையாள 1989 ஆம் ஆண்டில் பெங்களூரில் சட்டப் பட்டம் பெற்றார்.[6][8][11] 2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்திலும் இவர் இருந்தார்.

தனது வீட்டில், இவர் இளம்வயது சிறுமிகளின் குழுவைக் கூட்டி அவர்களுக்கு வாசிப்பு, எழுத்து, தையல் மற்றும் பூத்தையல் ஆகியவற்றைக் கற்பித்தார்.[6] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறுமிகளுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் பண மேலாண்மை ஆகியவற்றில் தொழிற்பயிற்சி கற்பிக்க ஐந்து மையங்களைத் திறந்தார்.[6] இது முசாகர் சிறுமிகளுக்கான நாரி குஞ்சன் வசதிகளில் முதன்மையானது. இந்த மையங்கள் செவிலியம் மற்றும் ஆரம்ப மருத்துவ உதவி மற்றும் பொருளாதார ரீதியாக மதிப்புமிக்க பிற திறன்களையும் கற்பிக்கின்றன.[6] தனது பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் சமூகத்திடமிருந்து நிதியைப் பெற்றிருந்தார்.[8] இப்பணிகளை மேலும் 50 மையங்களுக்கு விரிவாக்கம் செய்ய ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சில ஆயிரம் டாலர்கள் மானியமாக அளித்தது.[8]

விருது

[தொகு]
  • 2006: இவரது சிறப்பான பங்களிப்புகள் மற்றும் சாதனைகளைப் பாராட்டி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[12]
  • 2023 ஆம் ஆண்டில், காந்திய விழுமியங்களை நிலைநிறுத்தும் சமூக சேவையை வழங்கியதற்காக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது. .[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nolen: 10 December 2011
  2. Indian Catholic Community
  3. Nolen: 2013
  4. 1 2 Nolen: 3 December 2011
  5. Srivastava: 2006
  6. 1 2 3 4 5 6 Patna: 2008
  7. 1 2 Nolen: 2012
  8. 1 2 3 4 5 Nolen: 3 December 2011
  9. Shoshit Seva Sangh
  10. Indian Catholic Community
  11. Srivastava: 2006
  12. "Mrs. Sudha Varghese - Joy of Helping" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-11-23. Retrieved 2024-11-14.
  13. "Malayali social worker Sudha Varghese bags Jamnalal Bajaj Award". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 2023-12-08. Retrieved 2024-01-11.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_வர்க்கீசு&oldid=4433521" இலிருந்து மீள்விக்கப்பட்டது