சுதா யாதவ்
முனைவர் சுதா யாதவ் Dr. Sudha yadav | |
---|---|
தொகுதி | குருகிராமம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரேவாரி, அரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மறைந்த துணை கமெண்டெண்ட் சுக்பீர் சிங் யாதவ் |
பிள்ளைகள் | இரண்டு |
வாழிடம் | ரேவாரி |
வேலை | அரசியல்வாதி, சமூக சேவகர், கல்வியாளர் |
இணையத்தளம் | Sudha Yadav |
As of 9 ஏப்ரல், 2009 |
சுதா யாதவ் (Sudha Yadav) என்பவர் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் உறுப்பினரும், பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தேசிய செயலாளருமான ஆவார்.[1] இவர் 1999 முதல் 2004 வரை 13வது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். அரியானாவின் மகேந்திரகரிலிருந்து பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர், எல்லை பாதுகாப்புப் படையின் துணை கமாண்டன்ட் சுக்பீர் சிங் யாதவ் ஆவார். இவர் கார்கில் போரில் எல்லையில் பாக்கித்தான் ஊடுருவல்கரார்களுடன் நடந்த போரில் இறந்தார். 1987இல் ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் (இப்போது ஐ.ஐ.டி ரூர்க்கி) பட்டம் பெற்ற, சுதா யாதவ் கல்லூரி விரிவுரையாளர் ஆவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குளிர்பானம் பிரச்சினை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜேபிசி குழுவில் உறுப்பினராக யாதவ் இருந்தார்.[1] பரணிடப்பட்டது 2004-01-13 at the வந்தவழி இயந்திரம் முனைவர் சுதா யாதவ் மகேந்திரகர் மக்களவைத் தொகுதியிலிருந்து 2004 தேர்தலிலும், குர்கான் மக்களவைத் தொகுதியிலிருந்து 2009 தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 3 ஜூலை 2015 அன்று, சுதா யாதவ் பாஜக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மோர்ச்சாவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[2][3][4]
1999 மக்களவைத் தேர்தல்கள்
[தொகு]1999 இவரது வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் விசித்திரமான ஆண்டாகும். இந்தோ-பாக்கித்தான் கார்கில் மோதலில் கணவரை இழந்தார். எனவே போர் விதவைகளுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விரிவுரையாளராக இவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி மகேந்திரகர் தொகுதி 1999ல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக இவரை வேட்பாளராக நியமித்தது. இவர் போட்டியிட்ட முதல் தேர்தல் இதுவாகும். எளிய இல்லத்தரசியான இவர் ஓர் பிரபலமான அரசியல்வாதியைத் தோற்கடித்துப் பிரபலமான அரசியல்வாதியாக வெற்றிகரமாக மாறினார். இருப்பினும் இவரால் 2004 மற்றும் 2009 தேர்தல்களில் வெற்றிபெற முடியவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BJP National Office Bearers". Archived from the original on 2014-10-22. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
- ↑ "Amit Shah reshuffles BJP frontline, gives responsiblity(sic) of key states to his confidants".
- ↑ "With eye on Bihar polls, BJP to set up new OBC front". Archived from the original on 2015-07-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
- ↑ "BJP Questions JD(U)'s Source of Funds for Poll Campaign".
வெளி இணைப்புகள்
[தொகு]- 2009 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார தளம் பரணிடப்பட்டது 2017-04-23 at the வந்தவழி இயந்திரம்