சுதா சுந்தரராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுதா சுந்தரராமன்
Sudha SundararamanDSC 0305.jpg
சுதா சுந்தரராமன்
பொதுச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு 1958
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) சுந்தரராமன்

சுதா சுந்தரராமன் (பிறப்பு: 1958) ஒரு பெண் அரசியல் போராளி மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் மத்திய குழுவின் உறுப்பினர். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.[1][2].

படிப்பு, ஆரம்ப வாழ்க்கை[தொகு]

சுதா ஆங்கில இலக்கியத்தில் பட்டப் படிப்பைச் சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கற்றார்.[2] படிக்கும் பொழுது இந்திய மாணவர் சங்கம் (கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு) ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தார். அவர் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின் பள்ளி ஆசிரியையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஆசிரியையாகப் பணியாற்றிய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்தும், அவர்களைப் பாதுகாக்கவும் போராடினார். அதனைத் தொடர்ந்து, தனது ஆசிரியர் பணியை விடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மகளிர் அமைப்பில் சேர்ந்தார். 1995 ஆம் ஆண்டில், அவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) தமிழ்நாட்டின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பெற்றார். அன்று முதல் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார்.[2]

மேலும், அவர் பெண்களின் 33 சதவித மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றவேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UPA diluting women's protection laws". The Hindu]. 28 June 2011. http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2011062863010600.htm&date=2011/06/28/&prd=th&. பார்த்த நாள்: 15 March 2014. 
  2. 2.0 2.1 2.2 Ambujam Anantharaman (20 December 2004). "India: New Woman on the Top". Chennai: Women's Feature Service. பார்த்த நாள் 15 March 2014.(subscription required)
  3. Sudha Sundararaman on India's Women's Reservation Bill

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_சுந்தரராமன்&oldid=2339422" இருந்து மீள்விக்கப்பட்டது