சுதா கவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதா கவுல்
Sudha Kaul
பிறப்புஇந்தியா
பணிசமூகப்பணி
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
Official web site

சுதா கவுல் (Sudha Kaul) ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் கல்வியாளராவார். மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக இவர் செய்த சேவைகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.[1] கவுல் இந்திய பெருமூளை வாத நிறுவனத்தின் துணைத் தலைவராகவும்,[2] சிறப்புக் கல்வி மையத்தின் நிறுவனர முதல்வராகவும் உள்ளார்.[1] மான்செசுட்டர் பெருநகர பல்கலைக்கழகத்தில் கவுல் மிகைப்படுத்தல் மற்றும் மாற்று தொடர்பாடல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இந்த பாடத்தில் பல புத்தகங்களையும் கவுல் எழுதியுள்ளார்.[3] பல அரசாங்கக் குழுக்களில் இணைந்து கவுல் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் மாற்றுத்திறன் குடிமக்களுக்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்கக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.[1] 2010 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருதை கவுலுக்கு வழங்கி சிறப்பித்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "IICP". IICP. 2014. பார்க்கப்பட்ட நாள் November 17, 2014.
  2. "Interview with Dr. Sudha Kaul". Video. Cafedissensus. 2014. பார்க்கப்பட்ட நாள் November 17, 2014.
  3. "DINF". DINF. 2014. பார்க்கப்பட்ட நாள் November 17, 2014.
  4. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதா_கவுல்&oldid=3554986" இலிருந்து மீள்விக்கப்பட்டது