உள்ளடக்கத்துக்குச் செல்

சுதாராணி இரகுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதாராணி இரகுபதி
பணிநடனக் கலைஞர்

சுதாராணி ரகுபதி (Sudharani Raghupathy) ஒரு குறிப்பிடத்தக்க இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் 1988 இல் பத்மஸ்ரீ மற்றும் 1984 இல் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். [1] [2] ஒரு புகழ்பெற்ற கலைஞராக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கௌரவிக்கப்பட்ட மற்றும் மதிப்பிற்குரியவரான, பேராசிரியர் சுதாராணி ரகுபதி தனது நடனப் பயணத்தில் ஆகஸ்ட் 17, 2007 அன்று 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

"வாழும் மேதை" என்று பாராட்டப்பட்ட இவர், 1956 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வருகை தந்த பிரமுகர்களுக்கு முன் நிகழ்த்திய அரிய பரதநாட்டியக் நடனக் கலைஞர்களில் ஒருவராக இருக்கிறார். புல்கானின் மற்றும் குருச்சேவ், ஈரானின் ஷா, எத்தியோப்பியாவின் பேரரசர், ஆப்கானிஸ்தான் மன்னர், சூ என் லாய், ஹோ சி மின் மற்றும் பலர். பண்டிட் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் நிகழ்த்தியுள்ளார். [3]

கல்வி[தொகு]

மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் சமூகவியலில் பட்டம் பெற்றுள்ளார். கே.பி. கிட்டப்பா பிள்ளை, யு.எஸ். கிருஷ்ணா ராவ் மற்றும் மைலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற திறமையான குருக்களிடம் பரதநாட்டியம் பயின்றார். கர்நாடக இசையில் இவரது பயிற்சி வயலின் மேதை டி சவுதியா மற்றும் வாகேயகரா, வித்வான் மதுரை என். கிருஷ்ணன் ஆகியோரின் கீழ் இருந்தது.

1964-65ல் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ராண்டால்ஃப் மாகாண மகளிர் கல்லூரியில் பயின்ற முதல் இந்தியர் ஆவார். இவர் ஒரு சர்வதேச மாணவராக நிதியுதவி பெற்றார். உலக நடனம், அரங்க கலைகள் மற்றும் நவீன நடனத்தில் மார்த்தா கிரஹாம் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றார். இவர் எலினோர் ஸ்ட்ரூப்பாவிடம் கற்றுக்கொண்டார். எலைன் செயின்ட் வின்சென்ட்டிடமிருந்து மேற்கத்திய இசையைக் கற்றுக்கொண்டார்.

சிறந்த திறமை வாய்ந்த ஒரு கலைஞரான இவர், 1981 டிசம்பரில் மனித உரிமைகள் தினத்தன்று நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில், அப்போதைய பொதுச்செயலாளர் கர்ட் வால்ட்ஹெய்மின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சி நிகழ்த்துவதற்கான பாக்கியத்தைப் பெற்றார். இவரது தொலைக்காட்சித் தொடர் 'பரதாஞ்சலி', என்பது 1981 ஆம் ஆண்டில் தூர்தர்ஷனில் முதன்முதலில் (13 அத்தியாயங்கள்) ஒளிபரப்பப்பட்டது. இது பரதநாட்டியத்தின் பாராட்டு, நடனத்திற்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும்.

நிகழ்ச்சிகள்[தொகு]

இவர் பல தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். மேலும், பல கலாச்சார குழுக்களின் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 1998 முதல் 2002 வரை புதுதில்லியில் உள்ள கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் துணைத் தலைவராக இருந்தார். திசம்பர் மாதம் நியூயார்க்கின் கொல்கேட் பல்கலைக்கழகத்தால் இந்திய ஆய்வுகளின் மூத்த கற்பித்தல் கூட்டாளர் (பேராசிரியர்) எனற தனித்துவமான கௌரவமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுதாராணி ரகுபதியால், 1970 இல் நிறுவப்பட்ட "சிறீ பரதாலயா" என்ற நுண்கலை நிறுவனம் தொடங்கப்பட்டது. இராமாயணம், கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும், சக்தி பிரபாவம், வந்தே குஹாம் உமாசுதம், ஏகமேவா நா த்வயம் மற்றும் சங்கர லோகா சங்கரா, சிலப்பதிகாரம், போன்ற இவரது நடன நாடகங்களில் இவரது நடனக் கலை நன்றாக பிரதிபலிக்கிறது. புது தில்லியில் உள்ள கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இவரது இராமாயண-பாலகாண்டத்ன் காணொலிக் காட்சியை தயாரித்துள்ளது. இது காஞ்சியின் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிஜியால் 1993 இல் வெளியிட்டது. [4]

விருதுகள்[தொகு]

இவருக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க விருதுகளில் பத்மஸ்ரீ (1988), சங்கீத நாடக அகாதமி விருது (1984), கலைமாமணி (1981 - தமிழ்நாடு மாநில விருது), சப்தகிரி சங்க வித்வான்மணி (1996 - ஆந்திரா); கலாசிறீ (1999 - கர்நாடகா); தெலுங்கு அகாதமி விருது போன்றவைகள் குறிப்பிடத்தக்கது. சென்னை இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, மற்றும் சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா ஆகியோரால் நாட்டிய கலா சாரதி பட்டத்தை முறையே 2001 ஜனவரி மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் இவருக்கு வழங்கப்பட்டது. நாட்டிய கலா சிகாமணி பட்டத்தை அவர் பெற்றார். மைசூர் ஸ்ரீ லலிதா கலா அகாடமி, உடுப்பியின் பெஜாவர் மடத்தைச் சேர்ந்த எச்.எச். சுவாமிஜி வழங்கிய ஸ்ரீ லலிதா கலா ரத்னா விருதையும் இவர் பெற்றுள்ளார். [5]

குறிப்புகள்[தொகு]

  1. http://www.narthaki.com/info/profiles/profil87.html
  2. http://srutimag.blogspot.com.au/2012/03/sudharani-raghupathy-is-68-today.html
  3. http://www.narthaki.com/info/profiles/profil87.html
  4. http://www.narthaki.com/info/profiles/profil87.html
  5. http://www.narthaki.com/info/profiles/profil87.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதாராணி_இரகுபதி&oldid=2958525" இலிருந்து மீள்விக்கப்பட்டது