உள்ளடக்கத்துக்குச் செல்

சுதாமா பாலம்

ஆள்கூறுகள்: 22°14′12″N 68°58′7″E / 22.23667°N 68.96861°E / 22.23667; 68.96861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதாமா பாலம்
துவாரகாதீசர் கோயில் மற்றும் துவாரகையை இணைக்கும் பாலம்
போக்குவரத்து பாதசாரிகள் நடக்கும் பாலம்
தாண்டுவது கோமதி ஆறு
இடம் துவாரகை, தேவபூமி துவாரகை மாவட்டம், குஜராத், இந்தியா
வடிவமைப்பு மனிதர்கள் மட்டும் நடப்பதற்கான தொங்கு பாலம்
கட்டுமானப் பொருள் காங்கிரீட், உருக்கு
மொத்த நீளம் 166 m (545 அடி)[1]
அகலம் 4.2 m (14 அடி)[1]
கட்டியவர் ரிலையன்ஸ் தொழில்கள் நிறுவனம்
கட்டுமானம் தொடங்கிய தேதி 5 மே2011
கட்டுமானம் முடிந்த தேதி பிப்ரவரி 2016
அமைவு 22°14′12″N 68°58′7″E / 22.23667°N 68.96861°E / 22.23667; 68.96861
சுதாமா பாலத்தின் வடக்கு முனை

சுதாமா பாலம் (Sudama Setu), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்திலுள்ள துவாரகை நகரத்தையும், துவாரகாதீசர் கோயிலையும் இணைக்கும் தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் துவாரகாதீசர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக .கோமதி ஆற்றின் மேல் கட்டப்பட்டது. இப்பாலத்தில் வாகனங்கள் செல்ல இயலாது. ரூபாய் 42 கோடி செலவில் கட்டப்பட்ட இத்தொங்கு பாலம் 11 சூன் 2016 அன்று திறக்கப்பட்டது.[1] இப்பாலம் 166 m (545 அடி) நீளமும்; 4.2 m (14 அடி) அகலமும் கொண்டது.

பெயர்க் காரணம்

[தொகு]

கிருஷ்ணரின் இளமைக்கால நண்பரான குசேலர் என்ற சுதாமர் நினைவாக இப்பாலத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Chief Minister Anandiben Patel Inaugurates 'Sudama Setu' at Dwarka". DeshGujarat News from Gujarat. 11 June 2016. Retrieved 23 October 2016.
  2. Parimal Nathwani (5 September 2015). "Janmashtami and Teacher's Day Coincides: Who could be bigger teacher than Krishna?". DeshGujarat. Retrieved 10 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதாமா_பாலம்&oldid=4196927" இலிருந்து மீள்விக்கப்பட்டது