சுதர்சன் அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதர்சன் அகர்வால்
Sudarshan Agarwal
Sudarshan Agarwal 2004.jpg
2004 இல் அகர்வால்
2-வது உத்தராகண்ட ஆளுநர்
பதவியில்
8 சனவரி 2003 – 28 அக்டோபர் 2007
முன்னவர் சுர்சித் சிங் பர்னாலா
பின்வந்தவர் பன்வாரி லால் ஜோசி
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 19, 1931(1931-06-19)
லூதியானா, பஞ்சாப், இந்தியா
இறப்பு 3 சூலை 2019(2019-07-03) (அகவை 88)
புது தில்லி, இந்தியா
தேசியம் இந்தியர்

சுதர்சன் அகர்வால் (Sudarshan Agarwal, 19 சூன் 1931 – 3 சூலை 2019)[1][2] என்பவர் உத்தரகண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு அக்டோபர் 2007 மற்றும் ஜூலை 2008 களில் முன்னாள்  ஆளுநராக இருந்துள்ளார்.[3] .

சுதர்சனக் அகர்வால் லூதியானாவில் பிறந்தார். இவர் ஒரு முதல் வகுப்பு சட்டப் பட்டதாரி ஆவார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மூன்று ஆண்டுகள் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1981 முதல் 1993 வரை அவர் மாநிலங்களவை செயலாளராக இருந்தார்.

உத்தராகண்டம் மாநில ஆளுநராக அகர்வால்  ஜனவரி 2003 இல் ஆனார்.[4] அவர் 19 ஆகஸ்ட் 2007 இல் சிக்கிம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[5] அக்டோபர் 2007 இல் உத்தர்கண்டின் ஆளுநராக பதவியில் இருந்தார். அக்டோபர் 25 அன்று சிக்கிம் ஆளுநராக பதவியேற்றார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Ex-Uttarakhand Governor Sudarshan Agarwal passes away". 3 July 2019. Archived from the original on 3 ஜூலை 2019. https://web.archive.org/web/20190703170555/https://newsdig.in/news/241633321/Ex-Uttarakhand-Governor-Sudarshan-Agarwal-passes-away. பார்த்த நாள்: 3 July 2019. 
  2. "Biography of Agarwal". Archived from the original on 13 மே 2007. 9 அக்டோபர் 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: BOT: original-url status unknown (link).
  3. "Sudarshan Agarwal sworn in as new Governor of Sikkim"[தொடர்பிழந்த இணைப்பு], UPI (newkerala.com), 25 October 2007.
  4. "Sudarshan Agarwal leaves U'khand Guv post" பரணிடப்பட்டது 2007-10-23 at the வந்தவழி இயந்திரம், Sahara Samay, October 2007.
  5. "Tiwari appointed new Andhra governor" பரணிடப்பட்டது 2012-10-18 at the வந்தவழி இயந்திரம், IST, TNN (The Times of India), 20 August 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்சன்_அகர்வால்&oldid=3586988" இருந்து மீள்விக்கப்பட்டது