சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே (Sudarshani Fernandopulle, பிறப்பு: அக்டோபர் 29, 1960), இலங்கை அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். இவர் இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டு, முதல் தடவையாக நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து 2015, 2020 தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றார்.