சுண்ணக்காரர்
| சுண்ணக்காரர் চুনারু | |
|---|---|
| குல தெய்வம் (ஆண்) | அகத்தியர் |
| மதங்கள் | இந்து |
| மொழிகள் | வங்காளி |
| மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | மேற்கு வங்காளம் |
சுண்ணக்காரர் (Chunaru) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு வங்காள இந்து சாதி ஆகும். இது வங்காள மொழியில் சுனாரு என்று இச்சாதி அழைக்கப்படுகிறது. இவர்களின் பாரம்பரிய தொழில் நத்தைகளின் ஓட்டிலிருந்து நீர்த்த சுண்ணாம்பு தயாரிப்பதாகும்.[1] சுண்ணாம்புக்கல்லிலிருந்து சுண்ணக்கட்டி கிடைத்த பிறகும், சாந்துப் பொருளாக சிமெண்ட்டு வந்த பிறகும், சுண்ணக்காரர்கள் தங்கள் பாரம்பரிய தொழிலில் பிழைப்பு நடத்துவதற்குப் போராடினர். மேலும் படிப்படியாக அவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
மணிக்லால் சின்காவின் கூற்றுப்படி,[2][3] தற்போது மேற்கு வங்காளத்தில் சுமார் 200 முதல் 300 சுனாரு குடும்பங்கள் மட்டுமே உள்ளன என்று அறியப்படுகிறது.
வரலாறு
[தொகு]பிரம்ம வைவர்த்த புராணம் மற்றும் பிரிகத் தர்ம புராணம் ஆகியவற்றில் சுனாருக்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. சந்தோசு குமார் குண்டுவின் கூற்றுப்படி, சுனாருக்கள் அநேகமாக சங்ககர்களுக்குள் சேர்க்கப்பட்டிருக்கலாம். சுனாரு மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், அவர்கள் பட்டியல் சாதியினராகவோ அல்லது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவோ கருதப்படவில்லை என்றும் இவர் நம்புகிறார்.[1] 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மத்திய மற்றும் கிழக்கு வங்காளத்தில் உள்ள சிறு சமூகங்கள் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டதாக இனவரைவியல் ஆய்வுகள் ஆவணப்படுத்தியுள்ளன.
நீர்த்த சுண்ணாம்பைத் தயாரிக்க, சங்குகள் முதலில் மண் சூளைகளில் எரிக்கப்பட்டு, பின்னர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Kundu, Santosh Kumar (2008). বাঙালি হিন্দু জাতি পরিচয় [An Introduction of Bengali Hindu Castes] (in Bengali). Kolkata: Presidency Library. pp. 128–129. ISBN 978-81-89466-13-8.
- ↑ Sinha, Maniklal (1982). Rarher Jati O Kristi (in Bengali) (3rd ed.). Bishnupur: Bangiya Sahitya Parishad - Bishnupur Branch. pp. 1–154.
- ↑ Singha, Maniklal (1977). Paschim rarh tatha Bankura sanskriti. Bisnupur: Chittaranjan Dasgupta. Archived from the original on 2023-04-09. Retrieved 2026-03-28.
- ↑ Ishwardi.com Newsdesk (January 11, 2010). "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (in Bengali). Ishwardi.com இம் மூலத்தில் இருந்து 2012-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120424174912/http://www.ishwardi.com/index.php?option=com_content&view=article&id=194:2010-01-11-14-26-56&catid=81:2009-12-21-09-54-38. பார்த்த நாள்: December 25, 2011.