உள்ளடக்கத்துக்குச் செல்

சுட்டெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டிக் காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் சுட்டெழுத்துகள் ஆகும். என்ற எழுத்து கண் தோன்றாத சேய்மையையும், என்ற எழுத்து அண்மையையும் என்ற எழுத்து சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்டுக் கண்ணுக்குத் தெரியும் நிலத்தையும் [1] சுட்டுவன. அகரம் பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் சேய்மையிலுள்ள பொருளையும்; இகரம் பேசுவோனுக்கு அண்மையிலுள்ள பொருளையும்; உகரம் கேட்போனுக்கு அண்மையிலுள்ள பொருளையும் சுட்டுவதே பொதுவான மரபாகும். சுட்டெழுத்துக்கள் அகச்சுட்டு (அவன், இவன், உவன்), புறச்சுட்டு(அம்மனிதன், இம்மனிதன், உம்மனிதன்) என இருவகைப்படும்.

"" என்ற சுட்டெழுத்து.

[தொகு]

தற்காலத்தில் 'உ' என்ற சுட்டெழுத்து தமிழ்நாட்டில் வழக்கில் இல்லை. ஆனால், பழங்காலத்தில் pool வழக்கில் இருந்தது . அதே வேளை இந்த "உ" சுட்டெழுத்து யாழ்ப்பாணத் தமிழ் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தற்போதும் தொடர்ந்து இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். 'உ' என்ற சுட்டு பல பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது. சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் உள்ளவற்றைக் குறிக்க 'உ' என்ற சுட்டெழுத்து பயன்பட்டது. நடுவிலுள்ள பொருள்களையும், உயரத்திலுள்ள பொருள்களையும், பின்பக்கம் உள்ள பொருள்களையும் சுட்ட 'உ' பயன்படும்

சான்று:

உம்பர்- மேலே என்ற பொருள் தரும்.
உப்பக்கம் - முதுகுப்பக்கம் என்ற பொருள் தரும்.
உதுக்காண் - சற்று தூரத்தில் பார் என்ற பொருள் தரும்.

அகச்சுட்டு

[தொகு]

ஒருசொல்லின் அகத்தே (உள்ளே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது அகச் சுட்டு எனப்படும்.
சான்று:

வன், வள், வர், து, வை
வன், வள், இவர், இது, இவை
து, வன்.

அகச்சுட்டுச் சொற்களிலிருந்து சுட்டெழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது.

புறச்சுட்டு

[தொகு]

ஒரு சொல்லின் புறத்தே (வெளியே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு ஆகும்.
சான்று:

அப்பையன்
இவ்வீடு
உப்பக்கம்.

புறச்சுட்டு சொற்கள் பிரித்தாலும் பொருள் தரும். (அ+ பையன், இ+ வீடு, உ+பக்கம்).

அண்மைச்சுட்டு

[தொகு]

அண்மையில் (அருகில்) உள்ளவற்றைக் குறிக்க உதவும் சுட்டு "அண்மைச் சுட்டு" எனப்படும். என்ற சுட்டெழுத்து அண்மையைக் குறிக்க உதவுகிறது.
சான்று:

இக்காட்சி
இவன்,
இவர்,
இந்நறுமணம்.

சேய்மைச் சுட்டு

[தொகு]

சேய்மையில் (தொலைவில்) உள்ளவற்றைச் சுட்டிக் காட்ட உதவும் சுட்டு, சேய்மைச் சுட்டு எனப்படும், என்ற சுட்டெழுத்து தொலைவைக் குறிக்க உதவுகிறது.
சான்று :

அக்கடிதம்,
அவன்,
அவர்,
அம்மலை.

சுட்டுத்திரிபு

[தொகு]

தற்காலத்தில் அங்கு, இங்கு, அந்த, இந்த போன்ற சொற்கள் சுட்டுப்பொருளை உணர்த்தி பெருவழக்காக நிற்கின்றன. இது "சுட்டுத்திரிபு" எனப்படும்.
சான்று:

அந்தப் பக்கம்
இந்த வீடு

உசாத்துணை

[தொகு]

தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்- நச்சினார்க்கினியம்

அடிக்குறிப்பு

[தொகு]
  1. உவக்காண் என் காதலர் செல்வார் இவக் காண் என் மேனி பசப்பு ஊர்வது - திருக்குறள்
  2. அ இ உ அம் மூன்றும் சுட்டு. தொல்காப்பியம் 31,
  3. ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. தொல்காப்பியம் 32
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டெழுத்து&oldid=3736944" இலிருந்து மீள்விக்கப்பட்டது