சுஜாதா ராம்தோரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜாதா ராம்தோரை
Sujatha Ramdorai
வாழிடம்வான்கூவர்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியா
துறைகணிதவியல்
பணியிடங்கள்டி ஐ எஃப் ஆர்
பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கஶகம்
கல்வி கற்ற இடங்கள்புனித சேவியர் கல்லூரி,பெங்களூர்
அண்ணாமலைப் பல்கலைக்கஶகம்
டி ஐ எஃப் ஆர்
ஆய்வு நெறியாளர்ராமன் பரிமளா
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அரிபம் சர்மா
அறியப்படுவதுபரிமாற்றமின்மை Iwasawa theory, எண்கணிதத்தில் இயற்கணித இனங்கள்
விருதுகள்ஐசிடிபி ராமானுசன் பரிசு (2006)
சாந்தி ஸ்வாரப் பட்னாகர் விருது (2004)
அலெக்சாண்டர் வோன் கம்போல்ட்(1997–1998)

சுஜாதா ராம்தோரை கனடாவின் பிரித்தானிய கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், கனடா ஆராய்ச்சிக் கழகத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.[1][2] முன்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் பணியாற்றினார், ராம்தோரை இவாசாவா கோட்பாட்டின் மீதான தனது பணிக்காக நியமிக்கப்பட்ட ஒரு இயற்கணித எண் கோட்பாட்டாளர் ஆவார். 2006 ஆம் ஆண்டில் கௌரவமான ஐ.சி.டி.பீ. ராமானுஜன் பரிசு வென்ற முதல் இந்தியராகவும், சாந்தி சவரூப் பட்த்நகர் விருது வென்றவரும் இவரே. இந்திய அரசாங்கத்தால் 2004 இல் விஞ்ஞான ஆராய்ச்சி துறையில் கவுரவிக்கப்பட்டார். அவர் 2007 முதல் 2009 வரை தேசிய அறிவு சார்ந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 2009 ஆம் ஆண்டு முதல் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் தேசிய உறுப்பினராகவும் உள்ளார்.[3][4] புனேவில் உள்ள இந்திய கல்வி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு துணைப் பேராசிரியர் பதவி வகித்தார்.[5]

கல்வி[தொகு]

பெங்களூரில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் அவர் தனது பி.எஸ்.சி.வை நிறைவு செய்தார். பின்னர் விஞ்ஞானத்தில் எம்.எஸ்.சி. பட்டப்படிப்பை 1985 இல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர அஞ்சல் வழிக் கல்வி மூலம் நிறைவு செய்தர். பின்னர் அவர் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று 1992 ல் ராமன் பரிமலாவின் மேற்பார்வையின் கீழ் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[6]

கணிதத்திற்கு பங்களிப்பு[தொகு]

கோட்ஸ், ஃபுகாயா, கதோ மற்றும் வெனாஜோப் ஆகியோருடன் இணைந்து இவாசாவா கோட்பாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பொருளின் அடிப்படையில். ஒரு பரிமாற்றமின்மை பதிப்பை அவர் உருவாக்கினார். [7] ஒரு பெரிய ஜப்பானிய கணிதவியலாளரான கென்சிச்சி இவாசாவாவின் படைப்புகளில் இவாசாவா கோட்பாட்டின் தோற்றம் உள்ளது. [8]

ஆசிரியர் நிலை[தொகு]

  • நிர்வாக இயக்குனர், எண் கோட்பாட்டின் சர்வதேச இதழ்
  • ஆசிரியர், ராமானுசன் கணித சமுதாய இதஶ் [7]
  • இணை ஆசிரியர், கணிதவிளக்கங்கள் [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of Canada, Industry Canada (2012-11-29). "Canada Research Chairs". பார்க்கப்பட்ட நாள் 2017-06-20.
  2. "Mathematics". www.math.ubc.ca. பார்க்கப்பட்ட நாள் 2017-06-20.
  3. "An Interview with Prof. Sujatha Ramdorai, http://GonitSora.com". Archived from the original on 2023-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-30. {{cite web}}: External link in |title= (help)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-06. பார்க்கப்பட்ட நாள் 2017-07-30.
  5. "IISER Pune". www.iiserpune.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-20.
  6. Homepage CV
  7. Homepage
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_ராம்தோரை&oldid=3925008" இலிருந்து மீள்விக்கப்பட்டது