சுஜாதா ராம்துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sujatha Ramdorai
Sujatha Ramdorai.jpeg
Sujatha Ramdorai
வாழிடம்வான்கூவர்
குடியுரிமைஇந்தியாn
தேசியம்இந்தியாn
துறைகணிதம்
பணியிடங்கள்டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
University of British Columbia
கல்வி கற்ற இடங்கள்St. Joseph's College, Bangalore
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
ஆய்வு நெறியாளர்இராமன் பரிமளா
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Aribam Sharma
அறியப்படுவதுnon-commutative Iwasawa theory, Arithmetic of Algebraic varieties
விருதுகள்ICTP Ramanujan Prize (2006)
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (2004)
Alexander von Humboldt Fellow (1997–1998)

சுஜாதா இராம்துரை (Sujatha Ramdorai) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், கனடா ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.முன்னர் சுஜாதா இராம்துரை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபார்மண்டல் ரிசெர்ஸில் ஒரு பேராசிரியராக பணியாற்றினாா்.இராம்துரை இயற்கணித கோட்பாட்டின் மீதான தனது பணிக்காக அறியப்பட்ட ஒரு இயற்கணித எண் கோட்பாட்டாளர் ஆவார். 2006 ஆம் ஆண்டில் கௌரவமான "சர்வதேச இயற்பியல் கோட்பாட்டு மைய(ICTP)ராமானுஜன் பரிசை" வென்ற முதல் இந்தியரும், 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் விஞ்ஞான துறைகளில் மிக உயர்ந்த கௌரவமான விருதான "சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதையும் பெற்றவா் ஆவார். சுஜாதா இராம்துரை 2007 ஆம் ஆண்டு முதல் 2009 வரை தேசிய அறிவு ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். தற்போது அவர் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்து 2009 ஆம் ஆண்டு முதல் தேசிய நேஷனல் கவுன்சில் உறுப்பினராகவும் உள்ளார். அவர் கோனிட் சோராவின் ஆலோசனைக் குழுவிலும் இருக்கிறார். [4] புனேவில் உள்ள இந்திய கல்வி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு துணைப் பேராசிரியர் பதவி வகித்தார்.

கல்வி[தொகு]

பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் 1982 ஆம் ஆண்டில் அவர் தனது இளங்கலை பட்டப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் 1985 ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மூலம் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றாா் . பின்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் ராமன் பரிமலாவின் மேற்பார்வையில் 1992 ஆம் ஆண்டு தனது முனைவா் பட்டத்தைப் பெற்றாா். [6] அவரது விவாதமே "Witt Groups of Real Surfaces and Real Geometry" ஆகும்.

கணித பங்களிப்புகள்[தொகு]

கோட்ஸ், ஃபுக்கியா, கதோ மற்றும் வெனாஜோப் ஆகியோருடன் இணைந்து இவாசாவா கோட்பாட்டின் பிரதான உந்துதலின் ஒரு பரிமாற்ற பதிப்பை அவர் உருவாக்கியிருந்தார். அதன் தோற்றம் ஜப்பானிய கணிதவியலாளரான கென்சிச்சி இவாசாவாவின் "இவாசாவா கோட்பாடு"ன் படைப்புகளில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_ராம்துரை&oldid=2785427" இருந்து மீள்விக்கப்பட்டது