உள்ளடக்கத்துக்குச் செல்

சுசேதா கடேதங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசேதா கடேதங்கர்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுயோகா, சாகச விளையாட்டுகள், வேத மற்றும் யோக ஆலோசனை
நிகழ்வு(கள்)கோபி 2011

சுசேதா கடேதங்கர் (Sucheta Kadethankar; பிறப்பு: 1977) என்பவர் இந்தியாவின் புனேவைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை, யோகா ஆசிரியர், சாகசப் பயணி ஆவார். 2011ஆம் ஆண்டு கோபி பாலைவனம் முழுவதையும் நடந்தே கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் மங்கோலியாவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனமான கோபி பாலைவனத்தில் சுமார் 1,000 மைல் (1,600 கிமீ) தூரம் நடந்தார். [1]

தொழில் வாழ்க்கை

[தொகு]

சுசேதா யோகசாஸ்திரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சமசுகிருத மொழியிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். புனேவில் அமைந்துள்ள கோஹம் யோக சாலா என்ற யோகா பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இணைய வழி , நேரடி வகுப்புகள் மூலம் யோகா, வேதப் பாராயணம், பதஞ்சலி யோக தரிசனம் போன்ற இந்திய மரபு அறிவியல் பாடங்களைக் கற்பித்து வருகிறார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சுசேதா கடேதங்கர் பெர்க்குசன் கல்லூரி, புனேயில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2] பின்னர் யோகசாஸ்திரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது தொழில்வாழ்க்கையைப் பத்திரிகையாளராகத்[3] தொடங்கிய இவர், பின்னர் தகவல் தொழில்நுட்பம் துறையில் பணியாற்றினார். சிமான்டெக் நிறுவனத்தில் முதன்மைத் தகவல் நிரலராகவும் பணியாற்றியுள்ளார்.

மலையேற்றம், நீண்ட தூர நடைபயணம், மிதிவண்டிப் பயணம், ஆற்றைக் கடத்தல், பாலைவனப் பயணம் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தார். 2008ஆம் ஆண்டு எவரெசுட்டுச் சிகரம் அடிவார முகாமுக்கு மலையேற்றப் பயணம் மேற்கொண்டதுடன், இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பல நடைபயணங்களில் பங்கேற்றுள்ளார்.[4][5]

கோபி பாலைவனப் பயணம்

[தொகு]

2011 ஆம் ஆண்டில் அயர்லாந்தின் எக்சுபுளோர் தொண்டுநிறுவனம் அமைப்பு ஏற்பாடு செய்த கோபி கிராசிங் 2011 என்ற சாகசப் பயணத்தில் பங்கேற்றார். 60 நாட்களில் 1,600 கிலோமீட்டர் தூரம் நடந்து கடக்க திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்திற்கு ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சுசேதாவும் ஒருவராவார்.[6]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Athavale, Ashlesha (31 July 2011). "Try Gobi for a change". Mumbai Mirror. http://www.mumbaimirror.com/others/sunday-read/Try-Gobi-for-a-change/articleshow/16150936.cms.
  2. "Pune's Sucheta becomes first Indian woman to cross Gobi desert". Deccan Herald. 30 July 2011.
  3. "Change makers of Pune: Sucheta Kadethankar, 33, Trekker". India Today. 25 October 2011.
  4. Das, Dipannita (16 November 2012). "Kadethankar gets leadership excellence award". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/pune/Kadethankar-gets-leadership-excellence-award/articleshow/17244232.cms.
  5. Mande, Abhishek (7 October 2011). "She is the first Indian to cross the Gobi desert". Rediff. http://www.rediff.com/getahead/slide-show/slide-show-1-achiever-sucheta-kadethankar-first-indian-to-cross-the-gobi-desert/20111007.htm.
  6. Raghunath, Pamela (3 August 2011). "Desert horizons didn't sap her spirit". Gulfnews.com. http://gulfnews.com/news/world/india/desert-horizons-didn-t-sap-her-spirit-1.846431. பார்த்த நாள்: 26 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசேதா_கடேதங்கர்&oldid=4561022" இலிருந்து மீள்விக்கப்பட்டது