உள்ளடக்கத்துக்குச் செல்

சுசூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசூக்கி தானுந்து நிறுவனம்
வகைPublic (K.K.)
நிறுவுகை1909; 115 ஆண்டுகளுக்கு முன்னர் (1909) (as Suzuki Loom Works)
நிறுவனர்(கள்)மிச்சியோ சுசூக்கி
தலைமையகம்Hamamatsu, Shizuoka, சப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுதும் (இந்தியா தவிர)
முதன்மை நபர்கள்ஒசாமு சுசூக்கி
(Chairman)
Yasuhito Harayama
(Vice Chairman)
Toshihiro Suzuki
(President)
தொழில்துறைதானுந்துத் துறை
உற்பத்திகள்தானுந்துகள், உள் எரி பொறிகள், motorcycles, ATVs, outboard motors
உற்பத்தி வெளியீடுIncrease 2,878,000 automobiles (FY2012)[1]
2,269,000 Motorcycles and ATVs (FY2012)[1]
வருமானம் ¥2578.3 billion (FY2012)[2]
(ஐஅ$26.27 billion)
இலாபம் ¥80.4 billion (FY2012)[2]
(ஐஅ$819 million)
மொத்தச் சொத்துகள் ¥2487.6 billion (FY2012)[2]
(ஐஅ$25.34 billion)
துணை நிறுவனங்கள்

சுசூக்கி அல்லது சுசூக்கி தானுந்து நிறுவனம் என்பது சப்பானைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் தானுந்து நிறுவனமாகும். இந்நிறுவனம் நான்கு சக்கர, இரு சக்கர வண்டிகளை உற்பத்தி செய்கிறது. அது மட்டுமன்றி படகுகளுக்கான மோட்டார்களையும் சக்கர நாற்காலிகளையும் உற்பத்தி செய்கிறது. 2014-ஆம் ஆண்டுக் கணக்கின் படி சுசூக்கி நிறுவனம் மோட்டார் வாகன உற்பத்தி எண்ணிக்கை அடிப்படையில் உலகின் ஒன்பதாவது பெரிய நிறுவனம் ஆகும். 23 நாடுகளில் 35 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் மொத்தம் 45,000-க்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். உள்நாட்டு நான்கு சக்கர வாகன விற்பனையிலும் இரு சக்கர வாகன விற்பனையிலும் இது சப்பானின் மூன்றாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஒசாமு சுசூக்கி ஆவார்.

உலகின் குறிப்பிடத்தக்க தானுந்து நிறுவனங்களுள் ஒன்றான இது சப்பானிலும் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது எனினும் உலகின் முக்கியமான சந்தையான ஐக்கிய அமெரிக்காவில் இதன் விற்பனை மந்தமாக இருந்ததன் காரணமாக 2012 முதல் அங்கு விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

வரலாறு

[தொகு]
1955 சுசூலைட்டு
மிச்சியோ சுசூக்கி

1909-ஆம் ஆண்டு மிச்சியோ சுசூக்கி என்பவரால் சுசூக்கி தறி நிறுவனமாக இது தொடங்கப்பட்டது. 1929-இல் மிச்சியோ சுசூக்கி ஒரு புதிய வகைத் தறியினைக் கண்டுபிடித்தார். இத்தறியானது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1937-இல் இந்நிறுவனம் சிறிய வகை நான்கு சக்கர தானுந்துத் தயாரிப்பில் ஈடுபட்டது. 1652 முதல் இரு சக்கர தானுந்துகளையும் உற்பத்தி செய்து வருகிறது.

காலக்கோடு

[தொகு]
  • 1909 - மிச்சியோ சுசூக்கியால் சுசூக்கி தறித் தொழில் தொடங்கப்படுகிறது.
  • 1920 - நிறுவனமாகப் பதிவு செய்யப்படுகிறது.
  • 1937 - சிறிய வகைக் கார்கள் உற்பத்தி
  • 1947 - தலைமையிடம் தற்போதைய முகவரிக்கு மாற்றம்
  • 1954 - நிறுவனத்தின் பெயர் மாற்றம் - சுசூக்கி மோட்டார் நிறுவனம்
  • 1958 - S - வணிகச் சின்னமாக ஏற்பு
  • 1982 - இந்திய அரசுடன் இணைந்து மாருதி என்னும பெயரில் இந்தியாவில் தானுந்து உற்பத்தி துவக்கம்
  • 2000 - நிறுவனம் 80 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
  • 2002 - ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் 3 கோடி தானுந்துகள் விற்பனை
  • 2009 - சுசூக்கி என்ற வணிகப் பெயர் துவங்கி 100 ஆண்டுகள் நிறைவு.

துணை நிறுவனங்கள்

[தொகு]

மாருதி சுசூக்கி இந்தியா லிமிட்டெடு

[தொகு]
இந்தியாவில் மாருதி சுவிப்ட்டு வண்டி ஒன்று

இந்திய அரசும் சுசூக்கி நிறவனமும் இணைந்து மாருதி உத்யோக் லிமிட்டெடு என்னும் பெயரில் தானுந்துகளை உற்பத்தி செய்தன. இந்தியாவில் நான்கு சக்கர வாகன உற்பத்தியில் இந்நிறுவனமே முதலிடத்தில் உள்ளது. இதன் தொழிற்சாலை முதலில் அரியானா மாநிலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் குசராத்து மாநிலத்திலும் ஒரு தொழிற்சாலை தொடங்கியது.

தானுந்துகள்

[தொகு]

சுசூக்கி நிறுவனம் தற்போது கீழுள்ள வகை தானுந்துகளை விற்பனை செய்து வருகிறது.

  • ஆல்ட்டோ
  • செலெரியோ
  • சியாசு
  • சிம்னி
  • சுவிப்ட்டு
  • டிசையர்
  • லாப்பின்
  • சோலியோ
  • இக்னிசு
  • பலீனோ
  • விட்டாரா
  • எர்ட்டிகா
  • லான்டி

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Reference for FY2012" (PDF). Suzuki Motor Corporation. 9 May 2013. பார்க்கப்பட்ட நாள் 21 August 2013.
  2. 2.0 2.1 2.2 "Financial Results for FY2012" (PDF). Suzuki Motor Corporation. 9 May 2013. பார்க்கப்பட்ட நாள் 21 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசூக்கி&oldid=3707088" இலிருந்து மீள்விக்கப்பட்டது