சுசுவாங்பான்னாவின் வெப்பவலய தாவரவியல் பூங்கா (Xishuangbanna Tropical Botanical Garden (XTBG)) என்ற தாவரவியல் பூங்கா, சீனாவின் உள்ளது. இதனை சீன அறிவியல் பேராயம் (Chinese Academy of Sciences (CAS)), 1959 ஆம் ஆண்டு மெங்கலா வட்டத்தில் (Mengla County) நிறுவியது. இதன் நிலப்படக் குறியீடு 21º55' N, 101º15'E ஆகும். இப்பூங்காவின் பரப்பளவு 1125 ha ஆகும். இங்கு பூமியின் வெப்ப வலயத்திலுள்ள 301 குடும்பங்களின்;, 2110 பேரினங்களின்; 13,000 இனங்கள், 35 விதமான வளர்நிலை சூழிடங்கள் உருவாக்கப்பட்டு பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. [1] இவ்விடத்தில் 338 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 164 அறிவியல் ஆய்வாளர்களும், இதற்குரிய நுட்பவியலாளர்களும் அடங்கியுள்ளதாகக் கூறுவர். மேலும், ஏறத்தாழ 101 மூத்த அறிவியல் ஆய்வாளர்கள், 240 முதுநிலை பட்டதாரிகள் இப்பூங்காவின் மேம்பாடுகளுக்கு செயற்படுகின்றனர். 698 அறிவியல் ஆய்வுத்திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 13 திட்டங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. இவற்றினைச்சார்ந்து 60 நூல்களும், 829 அறிவியல் ஆய்வு அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.