சுசீலா பிரபாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுசீலா பிரபாகரன் (Suseela Prabhakaran)  இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண் மருத்துவர் ஆவார். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள  திவ்ய பிரபா கண் மருத்துவமனையில் தலைமை கண் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரிகிறார். கேரள அரசின் மருத்துவக் கல்வித் துறையில் கண் மருத்துவத்தில் விரிவுரையாளராக சுசீலா தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

கேரள மாநிலத்தில், குறிப்பாக கண் மருத்துவத் துறையில் சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதில் சுசீலா தீவிரமாக ஈடுபட்டார். உலக சுகாதார நிறுவனம் மற்றும் இன்னர்வீல் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் இவரால் கேரள மக்களுக்கு கண் பராமரிப்பில் பெரிய முன்னேற்றங்களை அறிமுகப்படுத்த முடிந்தது. [1]

மருத்துவர் சுசீலா பிரபாகரன் திருவனந்தபுரத்தின் அரசு கண் மருத்துவமனையை கண் மருத்துவத்திற்கான பிராந்திய நிறுவனமாக உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்தார். கேரள அரசுக்கு கண் மருத்துவத்தில் ஓர் ஆலோசகராகவும் இருந்தார்.

அரசுப் பணியிலிருந்து வெளியேறிய பின்னர் இவர் திவ்ய பிரபா கண் மருத்துவமனையை நிறுவினார்.[2]

விருதுகள்[தொகு]

சுசீலா பிரபாகரன் கண் மருத்துவத்துக்கான பங்களிப்புக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். பள்ளி இறுதி வகுப்பு தேர்வுக்காக கேரள மாநிலத்தில் முதல் தரம் பெற்றதற்காக சுசீலாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதேபோல இந்தியாவின் கேரளா பல்கலைக்கழகத்தில் தனது இளநிலை மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டிலும் தங்கப் பதக்கம் வென்றார். 1981 ஆம் ஆண்டிலும் உலக சுகாதார நிறுவனம் சுசீலா பிரபாகரனுக்கு கண் நுண் அறுவை சிகிச்சையில் சக உறுப்பினர் தகுதியை விருதை வழங்கியது. பன்னாட்டு அரிமா சங்கம் சுசீலா பிரபாகரனுக்கு நைட் ஆஃப் தி பிளைண்டு என்ற விருதையும், இந்திய செஞ்சிலுவை சங்கம் இவருக்கு பிளாட்டினப் பெருவிழா விருதையும் வழங்கி சிறப்பித்தன. நேதாசி சுமரக சமிதி சுசீலா பிரபாகரனுக்கு சேவனா ரத்னா விருது வழங்கியது.

அறிவியல் பங்களிப்புகள்[தொகு]

பிரபாகரன் அறிவியல் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்திய அறிவியல் சுருக்கங்களில் இவரது கட்டுரைகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளது. [3] உலகில் உள்ள 45 மில்லியன் பார்வையற்ற மக்களில், 12 மில்லியன் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். [4] சுசீலா பிரபாகரன் விழிப்படல ஒட்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோயாளிகளுக்கு கண்புரை சரிசெய்தல் அல்லது மேம்படுத்துதல் போன்ற பல நடைமுறைகள் மூலம் இந்தியாவின் கேரள மக்கள்தொகையின் கண் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடிந்தது. சமீபத்திய ஆண்டுகளில் விழிப்படல ஒட்டுதல் சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளில் கண் தானம் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. இந்தியாவின் கேரளாவில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் பெரிய கண்புரை பிரச்சினையை சமாளிக்க சுசீலா பிரபாகரன் கண் தானம் செய்ய வாதிடுகிறார்.

திவ்யா பிரபா கண் மருத்துவமனை[தொகு]

திவ்யா பிரபா கண் மருத்துவமனை சுசீலா பிரபாகரனால் இந்தியாவின் கேரளா சமூகத்தின் பார்வையின் தரத்தைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் நிறுவப்பட்டது. [2] இந்த மருத்துவமனையை நிறுவி ஒரு வருடம் கழிந்த பின்னர் இறந்த மருத்துவர் என். பிரபாகரனின் முயற்சியை சுசீலா பிரபாகரனால் நிறைவேற்ற முடிந்தது, மேலும் கண்புரை மற்றும் கண் அழுத்த நோய் அறுவை சிகிச்சைக்கு இடமளிக்கும் திறன் கொண்ட ஒரு முழு மருத்துவமனையாக இம்மருத்துவமனை மாற்றப்பட்டது. [2] கேரளா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் பார்வை இழப்புகள் இருப்பதற்கான பொதுவான காரணம் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் அடிப்படையான கண்புரை ஆகும். [4] இந்தியாவில் உள்ள மற்ற கண்நோய் பிரச்சனைகளில் கண் அழுத்த நோய், கருவிழிடயின் குருட்டுத்தன்மை, பின் பிரிவு கோளாறு மற்றும் பல காரணங்கள் உள்ளன. [4] இந்த வசதிக்காக சுசீலா பிரபாகரனின் விருப்பம் நோயாளிகளுக்கு மலிவு விலையில் சிறந்த பராமரிப்பு வழங்குவதாகும். [2]

ஒரு மருத்துவமனையாக நிறுவப்பட்ட பிறகு, அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆதாரங்கள் கிடைக்காமல் இருந்தன. அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்ட நோயாளிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். [2] இந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை முறைகளுக்கு இடமளிக்கும் வசதியுடன் விரிவாக்கத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டபோது, ஒரு அறுவைச் சிகிச்சை அரங்கம் வளாகத்தில் சேர்க்கப்பட்டது. இதில் அழுகல் நடைமுறைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தனி பகுதிகள் மற்றும் ஒரு நோய் நுண்மை நீக்கப்பட்ட காற்று நடைபாதை ஆகியவை அடங்கும். [2] இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் பார்வை நோய்களுக்கான சிகிச்சைக்கான தொழில்நுட்பத்தைப் புதுப்பித்துக் கொண்டு ஆண்டு முழுவதும் பல்வேறு மாநாடுகளில் தங்களைத் தொடர்ந்து பயிற்றுவித்துக் கொண்டு வருகின்றனர். இந்த வசதியை ஒரு மருத்துவமனையாக இருந்தாலும், சுசீலா பிரபாகரன் அத்தகைய அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆதாரங்கள் இல்லாத மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்துவதில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Suseela Prabhakaran : Involvement With NGOs". www.museumstuff.com.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Trivandrum, Eye Care Hospitals n Trivandrum,Phaco Cataract Surgeries in Trivandrum,Micro Phaco Cataract in Trivandrum, Protocol for Phaco Foldable ( Keyhole ) Cataract Surgery in Trivandrum,Pre-op instructions in Trivandrum,Post Op recovery after Cataract Surgery in Trivandrum, Consent for cataract surgery-information for patients in Trivandrum,Multifocal IOL in Trivandrum,in Trivandrum, Contact Lenses in Trivandrum,Computerized Field Analyzers in Trivandrum,Computer Vision Syndrome in Trivandrum,Diabetic Eye Diseases in Trivandrum,Glaucoma in Trivandrum,Diabetic Eye Diseases in Trivandrum,Eye Anatomy in Trivandrum, Spectacles in. "Welcome To Divya Prabha Eye Hospital - Kumarapuram,Trivandrum 695011,Kerala". divyaprabha.in.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)Trivandrum, Eye Care Hospitals n Trivandrum,Phaco Cataract Surgeries in Trivandrum,Micro Phaco Cataract in Trivandrum, Protocol for Phaco Foldable ( Keyhole ) Cataract Surgery in Trivandrum,Pre-op instructions in Trivandrum,Post Op recovery after Cataract Surgery in Trivandrum, Consent for cataract surgery-information for patients in Trivandrum,Multifocal IOL in Trivandrum,in Trivandrum, Contact Lenses in Trivandrum,Computerized Field Analyzers in Trivandrum,Computer Vision Syndrome in Trivandrum,Diabetic Eye Diseases in Trivandrum,Glaucoma in Trivandrum,Diabetic Eye Diseases in Trivandrum,Eye Anatomy in Trivandrum, Spectacles in. "Welcome To Divya Prabha Eye Hospital - Kumarapuram,Trivandrum 695011,Kerala". divyaprabha.in.
  3. "Indian Science Abstracts". Indian National Scientific Documentation Centre. 23 March 1999 – via Google Books.
  4. 4.0 4.1 4.2 Verma, Ramesh; Khanna, Pardeep; Prinja, Shankar; Rajput, Meena; Arora, Varun (2011-01-31). "The National Programme for Control of Blindness in India". The Australasian Medical Journal 4 (1): 1–3. doi:10.4066/AMJ.2011.505. பன்னாட்டுத் தர தொடர் எண்:1836-1935. பப்மெட்:23393496. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலா_பிரபாகரன்&oldid=3367574" இலிருந்து மீள்விக்கப்பட்டது