உள்ளடக்கத்துக்குச் செல்

சுசீலா துதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசீலா துதி
உறுப்பினர்-இராசத்தான் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
3 திசம்பர் 2023
தொகுதிநோகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1966
பிகானேர், இராசத்தான், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ராமேஷ்வர் லால் தூடி
தொழில்அரசியல்வாதி

சுசீலா துதி (Sushila Dudi)(பிறப்பு 1966) இந்தியாவில் இராசத்தானைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பிகானேர் நோகா சட்டமன்றத் தொகுயிலிருந்து 16ஆவது இராசத்தான் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் இராசத்தான் சட்டமன்றத்தின் முன்னாள் சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராமேஷ்வர் லால் துதியின் மனைவி ஆவார்.[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

இராசத்தானின் பிகானேர் மாவட்டத்தில் உள்ள நோகா நகரத்தைச் சேர்ந்தவர் துதி. இவரின் கணவர் ராமேஷ்வர் துதி, இராசத்தான் சட்டமன்றத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.[4][5][6]

அரசியல்

[தொகு]

சுசீலா முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், இந்திய தேசிய காங்கிரசு தேர்தலில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், தனது நோய்வாய்ப்பட்ட கணவர் வகித்த சட்டமன்ற உறுப்பினர் இடத்தை வென்றார்.[7] இவர் 2023 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் நோகா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாஜகவின் பிகாரி லால் பிஷ்னோயை 8,149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rajasthan Election Results 2023: Full list of BJP and Congress winners". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-03. Retrieved 2024-04-29.
  2. "Rajasthan Assembly Elections: Congress Announces 2nd List Of 43 Candidates, 15 Ministers Named". www.india.com (in ஆங்கிலம்). Retrieved 2024-04-29.
  3. Livemint (2023-12-03). "Rajasthan Assembly Election Result 2023 winners list". mint (in ஆங்கிலம்). Retrieved 2024-04-29.
  4. PTI. "Rajasthan polls: Congress, BJP have fielded 29 relatives of leaders as candidates so far". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-04-29.
  5. PTI (2023-11-16). "Rajasthan polls: Sushila Dudi banks on ailing ex-MLA husband's goodwill to win Nokha for Cong". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-04-29.
  6. "'Sushila Dudi will work for masses'". firstindia.co.in (in ஆங்கிலம்). Retrieved 2024-04-29.
  7. "Sushila Dudi: A political novice with big ambitions for Nokha". TheDailyGuardian (in ஆங்கிலம்). Archived from the original on 2024-04-29. Retrieved 2024-04-29.
  8. "Rajasthan Election: नोखा सीट पर कांग्रेस के लिए बड़ी परीक्षा, बीमार रामेश्वर डूडी की जगह पत्नी को बनाया है उम्मीदवार". rajasthan.ndtv.in (in இந்தி). Archived from the original on 2024-04-29. Retrieved 2024-04-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலா_துதி&oldid=4586813" இலிருந்து மீள்விக்கப்பட்டது