சுசீந்திரம் பாலம்
சுசீந்திரம் பாலம் என்பது, சுசீந்திரத்தில் பழையாற்றின் மீது கட்டப்பட்டுள்ள பழைய பாலமாகும். இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1935 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டது.
இந்த பாலம் ஜார்ஜ் பிலிப், டிரஸ்கட் என்ற இரண்டு ஆங்கிலேய பொறியாளர்களின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்தின் நான்கு புறங்களிலும் தீபங்கள் ஏற்றும் விதத்தில் உயரமான தீபத் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று மட்டும் தற்போது உள்ளது.
திருவிதாங்கூர் சமசுதானத்தின் சின்னமான இரண்டு யானைகளின் நடுவே சங்கு அமைந்திருப்பதை போன்ற வடிவம் இந்த பாலத்தின் அருகே பொறிக்கப்பட்டுள்ளது.[1]
சுசீந்திரம் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மத்திய அரசு 7.30 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி பாலத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு பால கட்டுமானபணிகள் முழுமையடைந்தன.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கன்னியாகுமரி - 2000, தினத்தந்தி, நாள்.31.12.1999, ப. 13.
- ↑ "போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிப்பு : சுசீந்திரம் பாலம் திறப்பு விழா எப்போது?". www.dinakaran.com. Archived from the original on 2021-11-08. Retrieved 2021-11-08.
- ↑ "சுசீந்திரம், நரிக்குளம் பாலங்கள் போக்குவரத்து தெருக்கடிக்கு தீர்வு : சுற்றுலா மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும்". Hindu Tamil Thisai. Retrieved 2021-11-08.
வெளியிணைப்புகள்
[தொகு]- சுசீந்திரம் புதிய பாலத்தில் போக்குவரத்து தொடக்கம், தினமணி, ஆகஸ்டு 11, 2017. பார்த்த நாள்: ஆகஸ்டு 11, 2017.