சுசிலா குரகம
சுசிலா குரகம සුසිලා කූරගම | |
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 14, 1943 கொழும்பு, பிரித்தானிய இலங்கை |
| இறப்பு | பெப்ரவரி 1, 2016 (அகவை 72) சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, இலங்கை |
| மற்ற பெயர்கள் | என்சினா |
| கல்வி | சிறீ பராக்கிரமபாகு கல்லூரி, நாரகேன்பிட்டி |
| பணி | நடிகை, நாடக ஆசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1950–2016 |
| வாழ்க்கைத் துணை | எம். பி. ஞானதிலகே |
| பிள்ளைகள் | 4 |
சுசிலா குரகம (Susila Kuragama)(கலா பூசனா சுசிலா குரகம) ( 14 அக்டோபர் 1943 - 1 பெப்ரவரி 2016) ஓர் இலங்கை நடிகை ஆவார். இலங்கைத் திரைப்படத்துறை, மேடை நாடகம், தொலைக்காட்சியில் இவர் நடித்துள்ளார்.[1] இவர் நடித்த கோபி காடே என்ற தொலைக்காட்சித் தொடரில் "என்சினா" என்ற பாத்திரத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இவர் 1943 அக்டோபர் 14 அன்று கொழும்பு, நாரகேன்பிட்டா, திம்பிரிகசுயாயாவில் பிறந்தார்.[3] இவர் நாரகேன்பிட்டாவில் உள்ள சிறீ பராக்கிரமபாகு கல்லூரியில் தனது கல்வியை முடித்தார்.[4]
இவர் ஓய்வுபெற்ற காவலரான எம். பி. குணதிலகவை மணந்தார்.[5][6] இந்தத் தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.[7][4]
இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, 2016 சனவரி 22 முதல் சிறீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.[5] சிறீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2016 பெப்ரவரி 1 அன்று தனது 72வது வயதில் குரகம காலமானார்.[3][8] இவரது இறுதிச் சடங்கு 2016 பெப்ரவரி 3 அன்று கொழும்பு மயானத்தில் நடைபெற்றது.[9]
தொழில் வாழ்க்கை
[தொகு]இவர் தனது 7ஆவது வயதில் பல நாடககங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜி.டி.எல். பெரேராவால் தயாரிக்கப்பட்ட 'சக்கரா வட்டன்' என்ற நாடகத்தின் மூலம் இவர் முதன்முதலில் மேடை நாடகத்தில் தோன்றினார்.[1] பின்னர் இவர் 'நட்டாபுன்', 'மனபே', 'அவன்கலா', 'எலரா துட்டுகெமுனு', 'கேமமாலி' மற்றும் 'சரடியல்' ஆகிய மேடை நாடகங்களில் நடித்தார்.[3][9][4]
குரகம, தர்மா சிறீ கல்தேராவால் இயக்கப்பட்ட 1978ஆம் ஆண்டு வெளியான 'தீபாஞ்சலி' திரைப்படத்தின் மூலம் தனது முதல் திரைப்படத்தில் அறிமுகமானாா்.[10] இதன் பிறகு, 'முவன் பெலெசா', 'அஜசத்தா', 'கிம்கனே கீ நாடே', 'விஜய் சஜா அஜய்', 'நரலோவ ஹோல்மன்' மற்றும் 'ஜூரிய மமாய்' போன்ற வணிகத் திரைப்படங்களில் பல நகைச்சுவையான துணை வேடங்களில் நடித்துள்ளார்.[4] இவர் நாடகம், திரைப்படத் தயாரிப்பு, நடிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.[5] இவர் சரபினகே வாலவ்வா, சிலின் பிலின், சத்முத்து, தியாசேனா, உபடின்ன சகுந்தலா மற்றும் ரோடி கெல்லா ஆகிய மேடை நாடகங்களைத் தயாரித்தார்.[11]
1981இல், தேவிசு குருகேயின் கோபி கடே என்ற தொலைக்காட்சித் தொடருக்கு குரகம தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] "என்சினா" என்ற இவரது பாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமானது. மேலும் இவர் தனது உண்மையான பெயரை விட இவரது கதாபாத்திரப் பெயரால் அறியப்பட்டார்.[5] இவர் 1 ஏப்பிரல் 1987 அன்று முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட தொடரில் ஆரம்பத்திலிருந்தே தோன்றினார்.[13]
இவர் சக நடிகர் சந்திரசிறி கொடிதுவக்குவுடன் லங்கா லங்கா, ஒபா டக்கோத் கரி, லசானா சாண்டே மற்றும் எசுரு கலா கலாயே போன்ற காதல் பாடல்களைப் பாடினார்.[14] இவர் "என்சினகே சபிரினா" என்ற தனிநபர் இசை நிகழ்ச்சியையும் நடத்தினார்.[9][4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Susila Kuragama filmography". Daily Mirror. Retrieved 16 March 2020.
- ↑ "Kopi Kade Ensina is on its way". News First. Retrieved 16 March 2020.
- 1 2 3 "Susila Kuragama passes away". Hiru FM. Retrieved 16 March 2020.
- 1 2 3 4 5 "Ensina left Kopi Kade without telling anyone". Sarasaviya. Retrieved 16 March 2020.
- 1 2 3 4 "Ensina says goodbye". Dinamina. Retrieved 16 March 2020. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Ensina of 'Kopi Kade' fame dies". Daily News. Retrieved 16 March 2020.
- ↑ "Susila to retire from theater forever". lankatruth. Archived from the original on 8 செப்டம்பர் 2019. Retrieved 16 March 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Susila to retire from theater forever". lankatruth. Retrieved 16 March 2020.
- 1 2 3 "Susila Kuragama died". Divaina. Retrieved 16 March 2020.
- ↑ "Susila Kuragama films". News First. Retrieved 16 March 2020.
- ↑ "Susila Kuragama intensive care unit". srilankamirror. Retrieved 16 March 2020. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Those who have left us from Kopi Kade". lifie. Archived from the original on 8 ஜூலை 2020. Retrieved 16 March 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Kopi Kade". Sunday Times. Retrieved 2010-08-14.
- ↑ "Abilin Uncle bids farewell". Divaina. Retrieved 15 March 2020.