உள்ளடக்கத்துக்குச் செல்

சுசான்னி ஐகிரைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசான்னி ஐகிரைன்
Suzanne Aigrain
சுசான்னி ஐகிரைன், 2018
பிறப்புசனவரி 9, 1979 (1979-01-09) (அகவை 45)[1]
துறைவானியற்பியல்
வானியல்
புறவெளிக்கோள்கள்
பாயேசியக் குறுக்கீடு
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
எக்சீட்டர் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்விஇலைசேயி பியேர் தெபெர்மாட்
கல்வி கற்ற இடங்கள்இம்பீரியல் கல்லூரி, இலண்டன் (இளம் அறிவியல்)
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடுகோள் கடப்புகளும் உடுக்கண வேறுபடு திறனும் (2005)
இணையதளம்
www.asc.ox.ac.uk/person/284

சுசான்னி ஐகிரைன் (Suzanne Aigrain) (பிறப்பு: 1979)[1] ஆக்சுபோர்டு பல்கலைக்கழக வானியற்பியல் பேராசிரியர் ஆவார். மேலும் இவர் ஆக்சுபோர்டு ஆல் சோல்சு கல்லூரியின் ஆய்வுறுப்பினரும் ஆவார்.[2] இவர் புறவெளிக் கோள்களையும் உடுக்கண வேறுபடு திறனையும் ஆய்வு செய்கிறார்.[3]

இளமையும் கல்வியும்

[தொகு]

ஐகிரைன்பிரான்சில் உள்ள தவுலவுசில் பிறந்து வளர்ந்தார். இவர் இலைசேயி பியேர் தெபெர்மாட்டில் கல்வி கற்றார்.[1] இவர் 2000 இல் இயற்பியல் இளவல் பட்டத்தை இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார்.[2] இவர் பட்டப் தன் படிப்பின்போதே சான்பிரான்சிசுக்கோவில் உள்ள கோளரங்கில் அகப்பணியாளராக இருந்துள்ளார். மேலும் இவர் ஐரோப்பிய விண்வெளி முகமையில் ஆறு மாதங்கள் செலவிட்டுள்ளார்.[4] பிறகு இவர் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்தில் சேர்ந்து 2005 இல் தன் முனைவர் பட்ட்த்தைப் பெற்றார்.[2][5] இவரது முனைவர் பட்ட ஆய்வு கோள் கடப்புகளைப் பற்றியும் உடுக்கண வேறுபடுதிறனைப் பற்றியும் அமைந்தது.[5]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்

[தொகு]

இவர் 2004 இல் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்தில் முதுமுனைவர் பட்ட ஆய்வு உதவியாளராக சேர்ந்தார்.[2] இவர் 2007 இல் எக்சீட்டர் பள்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்ராகச் சேர்ந்தார்.[2][6][7] இவர் 2010 இல் ஆக்சுபோர்டு ஆல் சோல்சு கல்லூரியில் ஆய்வு உறுப்பினராக அமர்த்தப்பட்டார்.[2][8] இவர் ஆக்சுபோர்டுவானியற்பியல் துறை சார்ந்த விண்மீன்களும் கோள்களும் குழுவுக்குத் தலைமை தாங்கி, புறவெளிக்கோள்களையும் அவற்றைச் சார்ந்த விண்மீன்களையும் பற்றி ஆய்வு மேற்கொள்கிறார்.[9] இவர் அபுள் தொலைநோக்கியையும் மீப்பெரு தொலை நோக்கியையும் கோரோட் விண்கலத்தையும் தனாஆய்வில் பயன்படுத்தி வருகிறார்.[10] இவர் 2011 இல் ஜியோவன்னி தினெத்தியும் ஜோசெலின் பெல் பர்னலும் கலந்துகொண்ட இயற்பியல் நிறுவனமும் அரசு வானியல் கழகமும் இணைந்த கூட்டம் ஒன்றைப் புறவெளிக்கோள்களைப் பற்றிய அண்மைக் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுக்காக முன்னின்று நடத்தினார்.[11]

ஆர விரைவு (திசைவேக) முறைவழியில் புறக்கோள்களைக் கண்டறிவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி இவர் மிகவும் அக்கறையோடு சிந்தித்து தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கர்ய்வித் துல்லியம், உடுக்கணச் செயல்பாடு, அறைகுறைய்யன நோக்கீடுகள் போன்ற சிக்கல்களை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பிற படிம முறைகளில் புறக்கோள்களைக் கண்டறிவதில் உள்ள வரம்புகளைப் பற்றியும் வெளியிட்டுள்ளார்.[12] ஆல்பா செண்டாரியின் Bb எனும் புவிநிகர் கோளை கண்டறிந்த ஐரோப்பிய தெற்கு நோக்கீட்டகப் பணியில் பங்களிப்பு செய்த்தோடு,[13] பின்னர் 2016 இல் அப்படியொரு கோள் உண்மையில் நிலவவில்லை என்பதை நிறுவுவதிலும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டுள்ளார்.[14]

இவரும் இவரது குழுவும் உண்மையான வானியற்பியல் குறிகைகளைக் காப்பதற்காக, கருவிப் பிழைகளைக் களைய பாயேசியக் குறுக்கீட்டு முறையைப் பயன்படுத்தினர். இவர் கெப்ளர் K2 விண்கலத் திட்டத்தில் முதன்மையான பங்காற்றியுள்ளார். அத்திட்டத்தின் அமைப்புவழி இரைச்சலைக் கட்டுபடுத்தி பல கடப்புநிலைக் கோள்களைக் கண்டறிய வழிவகை செய்துள்ளார்.[15] இவர் வியாழன்நிகர் கோள்களையும் வியாழ்ன் உருவளவுள்ள கோள்களைக் கண்டறியும் ஆய்விவிலும் ஈடுபட்டுள்ளார்.[16] இவர் விண்மீன் கொத்துகளை ஆய்வு செய்ய கடப்புநிலை அளக்கை முறையின் வல்லமையை நிறுவியுள்ளார்.[17] இவரது ஆராய்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்ப ஏற்பாட்டு மன்றம் நிதி நல்கி வருகிறது.[18]

இவர் புறவெளிக்கோள்களை ஆய்வு செய்ய 2019 இல் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றம் தொகுப்புநிதி வழங்கியுள்ளது.[19]

அறிவியல் பரப்பல்

[தொகு]

இவர் மக்களோடு பழகி, பல மக்கள் அறிவியல் விரிவுரைகளை ஆற்றியுள்ளார்.[10][20][21][22] இவர் நம்கால வானொலித் தொடரில் 2013 இல் புறவெளிக் கோள்களைப் பற்றிப் பேசியுள்ளார்.,[23] மேலும் இவர் அறிவியல் துளி நிகழ்விலும் பங்கேற்றுள்ளார்.[24] இவ 2018 இல் ஆக்சுபோர்டு திரையரங்கில் ஒரு சிறிய முயற்சி நாடகம் முடிந்த்தும் பேசியுள்ளார்.[25] இவர் 2018 நவம்பரில் கிங்சு அரண்மனையில் நடந்த கடற்கரையும் புடவியும் பிற அனைத்தும் நிகழ்கலை நிகழ்சியிலும் பங்கேற்றுள்ளார்.[26] இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆவார்.[27] இவர் ஒரு கவிஞர்; மேலும் இவர் பிலிப்சு அகிரைனுடன் இணைந்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.[28][29][30]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Aigrain, Suzanne (2007). "Suzanne Aigrain CV" (PDF). Ex.ac.uk. Archived from the original (PDF) on 2015-08-07.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "All Souls College Oxford". Asc.ox.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  3. "Suzanne Aigrain - University of Oxford Department of Physics". 2.physics.ox.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 27 November 2018.
  4. "Suzanne AIGRAIN - Innovation Convention 2014". Ec.europa.eu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  5. 5.0 5.1 Aigrain, Suzanne (2005). Planetary transits and stellar variability. Inspirehep.net (PhD thesis). University of Cambridge. arXiv:astro-ph/0501558. இணையக் கணினி நூலக மைய எண் 890157875. வார்ப்புரு:EThOS.
  6. "Dr Suzanne Aigrain". Newton.ex.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  7. "Past group photos | Physics and Astronomy | University of Exeter". Emps.exeter.ac.uk (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  8. "Suzanne Aigrain: homepage". Astro.ex.ac.uk. Archived from the original on 2018-08-03. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  9. "about – stars & planets @ oxford". Splox.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  10. 10.0 10.1 "Interview: Suzanne Aigrain | SpaceCareers.uk" (in en-GB). SpaceCareers.uk. https://spacecareers.uk/?p=suzanne_aigrain. 
  11. "A golden age of exoplanet discovery". Spacedaily.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  12. "Interview with Suzanne Aigrain : On the Search for nearby Earth-like Exoplanets" (in fr-FR). PALE RED DOT. 2016-02-14 இம் மூலத்தில் இருந்து 2018-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181126051005/https://palereddot.org/de/interview-to-suzanne-aigrain-on-the-search-for-nearby-earth-like-exoplanets/. 
  13. "UK astronomers celebrate discovery of new Earth-sized planet - Science and Technology Facilities Council". Stfc.ukri.org (in ஆங்கிலம்). United Kingdom Research and Innovation. Archived from the original on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  14. Rajpaul, V.; Aigraine, S. (2016). "Ghost in the time series: no planet for Alpha Cen B." (in en). Monthly Notices of the Royal Astronomical Society: Letters 456 (1): L6–L10. doi:10.1093/mnrasl/slv164. 
  15. Howell, Steve B.; Sobeck, Charlie; Haas, Michael; Still, Martin; Barclay, Thomas; Mullally, Fergal; Troeltzsch, John; Aigrain, Suzanne et al. (2014). "The K2 Mission: Characterization and Early Results" (in en). Publications of the Astronomical Society of the Pacific 126 (938): 398–408. doi:10.1086/676406. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-6280. Bibcode: 2014PASP..126..398H. 
  16. Fletcher, Leigh N.; Irwin, Patrick G. J.; Barstow, Joanna K.; Kok, Remco J. de; Lee, Jae-Min; Aigrain, Suzanne (2014). "Exploring the diversity of Jupiter-class planets" (in en). Philosophical Transactions of the Royal Society A 372 (2014): 20130064. doi:10.1098/rsta.2013.0064. பன்னாட்டுத் தர தொடர் எண்:1364-503X. பப்மெட்:24664910. Bibcode: 2014RSPTA.37230064F. 
  17. Aigrain, S.; Pont, F. (2007). "On the potential of transit surveys in star clusters: impact of correlated noise and radial velocity follow-up" (in en). Monthly Notices of the Royal Astronomical Society 378 (2): 741–752. doi:10.1111/j.1365-2966.2007.11823.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-8711. Bibcode: 2007MNRAS.378..741A. 
  18. [1]
  19. "ERC awards over €600 million to Europe's top researchers". ERC: European Research Council (in ஆங்கிலம்). 2019-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
  20. Anon. "Exploring the Diversity of Exoplanets". Iop.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  21. "Exploring the Diversity of Exoplanets" (PDF). Rse.org.uk. Archived from the original (PDF) on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  22. Follow The Evidence (2017-07-03), Where and How Might We Search for Life? - Suzanne Aigrain, பார்க்கப்பட்ட நாள் 2018-11-25
  23. "BBC Radio 4 - In Our Time, Exoplanets". Bbc.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  24. "Deep space discoveries". Pintofscience.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  25. "One Small Step: Far Beyond The Moon". Oxfordplayhouse.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  26. "Orchestra of the Age of Enlightenment – Worlds Beyond • Kings Place" (in en-GB). Kings Place. https://www.kingsplace.co.uk/whats-on/classical/orchestra-of-the-age-of-enlightenment-worlds-beyond/. 
  27. "Suzanne Aigrain at IAU". Iau.org. International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  28. Aigrain, Philippe (2012). Sharing: Culture and the Economy in the Internet Age (in ஆங்கிலம்). Amsterdam University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789089643858.
  29. "About | www.sharing-thebook.com". Sharing-thebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  30. "Suzanne Aigrain: Poetry". Astro.ex.ac.uk. Archived from the original on 2021-07-13. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்னி_ஐகிரைன்&oldid=3951384" இலிருந்து மீள்விக்கப்பட்டது