உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை பீசி விரைவுச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Expressway 9
சுங்கை பீசி விரைவுச்சாலை
Sungai Besi Expressway
Lebuhraya Sungai Besi
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு
பெசுராயா நிறுவனம்
நீளம்:28.3 km (17.6 mi)
பயன்பாட்டு
காலம்:
1998 –
வரலாறு:நிறைவு: 2000
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:E18 காஜாங் பரவல் இணைப்பு; செரி கெம்பாங்கான்
 

E2 தெற்கு வழித்தடம்

3215 செரி கெம்பாங்கான் சாலை
28 கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2; கூச்சாய் லாமா சாலை
E37 கிழக்கு–மேற்கு இணைப்பு விரைவுச்சாலை
E37 கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை; கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1

1 செராஸ் நெடுஞ்சாலை
வடக்கு முடிவு:பாண்டான் சாலை 1; அம்பாங் ஜெயா, சிலாங்கூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பாண்டான் இண்டா, சாம்லின், சாலாக் செலாத்தான், கூச்சாய் லாமா, செரி பெட்டாலிங், சுங்கை பீசி, மைன்ஸ் ரிசோர்ட் சிட்டி, செரி கெம்பாங்கான், பாலக்கோங், புத்ராஜெயா
நெடுஞ்சாலை அமைப்பு

சுங்கை பீசி விரைவுச்சாலை (மலாய்; Lebuhraya Sungai Besi; ஆங்கிலம்: Sungai Besi Expressway (SBE) சீனம்: 新街场高速公路) என்பது தீபகற்ப மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு முக்கிய கட்டுப்பாட்டு-அணுகல் நெடுஞ்சாலை ஆகும்.[1]

18 கிமீ (11 மைல்) நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை செரி கெம்பாங்கான்; அம்பாங் ஜெயா இடையே தென்கிழக்கு கோலாலம்பூர் வழியாகச் செல்கிறது. மேலும் மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம் மற்றும் கோலாலம்பூர்–சிரம்பான் விரைவுச்சாலை ஆகிய இரு சாலைகளுக்கும் மிக அருகில் உள்ளது.[2]

பயண வழி

[தொகு]

இந்த விரைவுச்சாலை மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள செரி கெம்பாங்கான் நகரில் தொடங்கி, காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலை வழியாகத் தொடர்கிறது. பின்னர் இந்த விரைவுச்சாலை மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடத்தின் கிழக்கே; வடக்கு நோக்கிச் சென்று செரி கெம்பாங்கான் வழியாகச் சுங்கை பீசிக்குள் நுழைகிறது.

அதன் பின்னர், இந்த விரைவுச்சாலை கோலாலம்பூர்-சிராம்பான் விரைவுச்சாலையுடன் இணையாகத் தொடர்ந்து; பண்டார் தாசேக் செலாத்தான், கூச்சாய் லாமா, சாலாக் செலாத்தான், செராஸ் வழியாகச் செல்கிறது. பின்னர் இந்த விரைவுச்சாலை வடகிழக்கு நோக்கிச் சென்று அம்பாங் ஜெயாவில் உள்ள பாண்டான் ஜெயா; பாண்டான் இண்டாவுக்கு அருகே திருப்பிவிடப்பட்டு அங்கு அது முடிவுறுகிறது.

வரலாறு

[தொகு]

இசுதானா சாலையில் (Jalan Istana) இருந்து செர்டாங் வரையிலான 16.0 கிலோமீட்டர் (9.9 மைல்) நீளமுள்ள அசல் விரைவுச் சாலையின் கட்டுமானம் 1997-இல் தொடங்கியது. அதற்கு முன்னர் இந்த விரைவுச் சாலை B13 சிலாங்கூர் மாநில சாலையாக இருந்தது. அப்போதைய அதன் பெயர் கோலாலம்பூர்-சுங்கை பீசி சாலை (Jalan Kuala Lumpur–Sungai Besi) ஆகும்.

கட்டுமானத்தின் போது, இந்தச் ​​சாலை ஒரு சுங்கச்சாவடி சாலையாக மாற்றப்பட்டு, E9 என மறுபெயரிடப்பட்டது. பின்னர் 1999 மே 15 அன்று சுங்கச்சாவடி செயல்பாட்டைத் தொடங்கியது. சுங்கை பீசி பரிமாற்றச் சாலையை (Sungai Besi Interchange) மேம்படுத்தும் திட்டம் 2005-இல் தொடங்கி 2007-இல் நிறைவடைந்தது. அதற்கு முன்னர் பாலக்கோங் சாலையை மேம்படுத்தும் திட்டம் 2004-இல் தொடங்கி 2006-இல் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து சாலாக் ஜெயா சுங்கச்சாவடியின் செயல்பாடு பிப்ரவரி 24, 2009 அன்று நீக்கல் செய்யப்பட்டது.

சுங்கக் கட்டணங்கள்

[தொகு]

(சனவரி 1, 2023 முதல்)[3][4][5]

பிரிவு வாகனங்களின் வகை கட்டணம்
(RM)
0 விசையுந்துகள் இலவசம்
1 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்து தவிர) RM 1.85
2 2 அச்சுகள் மற்றும் 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்து தவிர) RM 3.70
3 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் RM 3.70
4 வாடகை உந்துகள் RM 1.85
5 பேருந்துகள் RM 1.30 - 1.85
குறிப்பு:   Touch 'n Go   தொட்டு செல் அட்டைகள், விசா/மாஸ்டர்கார்டு வங்கி அட்டைகள், SmartTAG இஸ்மார்ட் அட்டைகள் (SmartTAG) அல்லது MyRFID வானலை அடையாள அட்டை ஆகியவற்றின் மூலம் மட்டுமே சுங்கக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ரொக்கப் பணம் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Malaysia, eJeeban Web Design. "The Sungai Besi – Ulu Klang Expressway (SUKE) is a 24.4-kilometre three-laned, dual carriageway, expressway spanning across Selangor and the capital of Malaysia, Kuala Lumpur which has an average of 6 million cars travelling back and forth from the city". Retrieved 1 October 2025.
  2. "Sungai Besi Expressway (Lebuhraya Sungai Besi), commonly known as the BESRAYA, is an expressway on the eastern side of Kuala Lumpur. It was built between 1997 and 1999 by Road Builder (M) Holdings Berhad". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 1 October 2025.
  3. "2022". lom.agc.gov.my.
  4. Chan, Dawn (31 December 2022). "(Updated) Lekas and Besraya motorists to usher in New Year with cheaper tolls". NST.com.my.
  5. "Lower toll rates on Besraya, Lekas expressways from Jan 1". TheStar.com.my. 31 December 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]