சுங்கை பீசி-உலு கிள்ளான் உயர்மட்ட விரைவுச்சாலை
| சுங்கை பீசி-உலு கிள்ளான் உயர்மட்ட விரைவுச்சாலை Sungai Besi–Ulu Klang Elevated Expressway Lebuhraya Bertingkat Sungai Besi–Ulu Klang | |
|---|---|
![]() விரைவுச் சாலையின் சின்னம் | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு Prolintas | |
| நீளம்: | 24.4 km (15.2 mi) |
| பயன்பாட்டு காலம்: | 2012 – |
| வரலாறு: | தொடக்கம்: 2021 கட்டம் 1: 16 செப்ட்ம்பர் 2022 (DUKE நெடுஞ்சாலை-CKE நெடுஞ்சாலை). கட்டம் 2: 16 சூன் 2023 (CKE நெடுஞ்சாலை-KESAS நெடுஞ்சாலை) [1] |
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | |
|
மாமண்டா சாலை 11 | |
| தெற்கு முடிவு: | |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | புக்கிட் ஜாலில், செரி பெட்டாலிங், சுங்கை பீசி, சேரர், பான்டான் இண்டா, உலு லங்காட் மாவட்டம், அம்பாங் சாலை, உலு கிள்ளான் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
சுங்கை பீசி-உலு கிள்ளான் உயர்மட்ட விரைவுச்சாலை
(மலாய்; Lebuhraya Bertingkat Sungai Besi–Ulu Klang; ஆங்கிலம்: Sungai Besi–Ulu Klang Elevated Expressway (SUKE) என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பகுதிகளில் இயங்கும் 24.4 கி.மீ. மூன்று வழி நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இரட்டை வழித்தடங்களைக் கொண்டது.
சுங்கை பீசி மற்றும் உலு கிள்ளான் நகர்ப் பகுதிகளுக்கு இடையே தற்போதுள்ள கோலாலம்பூர் மத்திய வளைய சாலை 2-க்கு மேல் இந்த விரைவுச்சாலை இயங்குகிறது. இதனால் இப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைக்க முடிகிறது.
பாதை விளக்கம்
[தொகு]இந்த விரைவுச்சாலை வடக்கில் சிலாங்கூர் உலு கிள்ளான் பகுதியில் தொடங்கி, கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2-க்கு (Kuala Lumpur Middle Ring Road 2) மேலே அம்பாங் வரை செல்கிறது. பின்னர் இந்த விரைவுச்சாலை அம்பாங் ஜெயா வழியாக தென்கிழக்கே திருப்பி செராஸ் மற்றும் ஆலாம் டமாய் வழியாக தென்மேற்கே திரும்புகிறது. இறுதியாக மேற்கு நோக்கி திரும்பி மத்திய வட்டச் சாலை 2-ஐ (Middle Ring Road 2) மீண்டும் சந்தித்து சுங்கை பீசியில் முடிவடைகிறது. பின்னர் அங்கு சா ஆலாம் விரைவுச்சாலையில் Shah Alam Expressway தொடர்கிறது.[2]
வரலாறு
[தொகு]இந்த விரைவுச்சாலை உலு கிள்ளான், அம்பாங், பான்டான் இண்டா, செராஸ், பண்டார் துன் ரசாக் மற்றும் பண்டார் தாசேக் செலாத்தான் ஆகிய இடங்களில்;
கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 2 வழியாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஒரு விரைவுச் சாலை கட்டப்பட வேண்டும் என்று புரோலிண்டாஸ் நிறுவனம் (Prolintas) முன்மொழிந்தது. இந்தத் திட்டத்திற்கு 2015-ஆம் ஆண்டு மலேசிய வரவு செல்வு நிதியில் இருந்து RM 5.3 பில்லியன் ஒதுக்கப்பட்டது. உலு கிள்ளானில் இருந்து காஜாங் நகருக்கு மாற்றுப் பாதையாக இந்த விரைவுச் சாலை தற்போது செயல்படுகிறது.[3]
கூறுபாடுகள்
[தொகு]- உயர்மட்ட சுங்கச்சாவடிகள்.
- பெரும்பாலான நெடுஞ்சாலைகள் உயர்த்தப்பட்டவை
- மலேசியாவில் சுருள் சாய்வுப் பாதையைக் கொண்ட முதல் சாலை.
தாசிக் தம்பகானில் ஓய்வு மற்றும் சேவை பகுதிகள்
சுங்க கட்டணங்கள்
[தொகு]அம்பாங், புக்கிட் தெராத்தாய் மற்றும் ஆலாம் டாமாய் சுங்கச் சாவடிகளில், விரைவான பரிவர்த்தனையை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அக்டோபர் 15, 2022 முதல், அனைத்து கட்டணப் பரிவர்த்தனைகளும் தொட்டு செல் (Touch 'n Go) அட்டைகள் அல்லது திறன் அட்டைகள் (SmartTAG) எனும் மின்னணு முறையில் நடத்தப்படுகின்றன.[4]
சுங்கக் கட்டணங்கள்
[தொகு]இந்த விரைவுச் சாலையின் மூன்று சுங்கச் சாவடிகள் (அம்பாங், புக்கிட் தெராத்தாய் மற்றும் ஆலாம் டாமாய்) உள்ளன, ஒவ்வொன்றும் ஒரே கட்டணத்தை வசூலிக்கின்றன.
(அக்டோபர் 15, 2015 முதல்)[5]
| பிரிவு | வாகனங்களின் வகை | கட்டணம் (RM) |
|---|---|---|
| 0 | விசையுந்துகள் | இலவசம் |
| 1 | 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (வாடகை உந்து தவிர) | RM 2.30 |
| 2 | 2 அச்சுகள் மற்றும் 6 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் (பேருந்து தவிர | RM 4.60 |
| 3 | 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் | RM 6.90 |
| 4 | வாடகை உந்துகள் | RM 1.20 |
| 5 | பேருந்துகள் | RM 2.30 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "SUKE Phase 2 Opening Overview". Free Malaysia Today (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 15 June 2023.
- ↑ "Project Overview". SUKE : Sungai Besi - Ulu Kelang Elevated Expressway (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 23 December 2021.
- ↑ "RM48b for four highways, MRT, LRT extension". Free Malaysia Today.
- ↑ "Eh, dah sebulan tol percuma di Lebuhraya SUKE!". Retrieved 20 November 2022.
- ↑ "KADAR TOL: Lebuhraya SUKE". Retrieved 20 November 2022.

