சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி
| சுங்கை துவா (N16) | |
|---|---|
| Sungai Tua (N16) State Constituency in Selangor | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 49,055 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | அமிருதின் சாரி |
| நீக்கப்பட்ட காலம் | 2004 |
| மறுசீரமைப்புக் காலம் | 2018 |
| முதல் தேர்தல் | 1995 |
| இறுதித் தேர்தல் | 2023 |
சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி (N16) (மலாய்: Bahagian Pilihan Raya Sungai Tua; ஆங்கிலம்: Sungai Tua State Constituency; சீனம்: 双溪图阿州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதி கோம்பாக் மக்களவைத் தொகுதியில் (P098) அமைந்துள்ளது.
சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி நீக்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது அமிருதின் சாரி (Amirudin Shari) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். 30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, சுங்கை துவா தொகுதி 12 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 93,235:[4][5]
தொகுதி வரலாறு
[தொகு]| சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| கோம்பாக் செத்தியா மற்றும் ரவாங் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
| 9-ஆவது | 1995–1999 | எஸ். கோபால கிருஷ்ணன் | பாரிசான் (மஇகா) |
| 10-ஆவது | 1999–2004 | ஜெகராசா வீராசாமி | |
| தொகுதி நீக்கப்பட்டு, பத்து மலை தொகுதி எனப் பெயர் மாற்றப்பட்டது | |||
| பத்து மலை தொகுதியில் இருந்து மீண்டும் உருவாக்கப்பட்டது | |||
| 14-ஆவது | 2018–2023 | அமிருதின் சாரி | பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| ஜெகராசா வீராசாமி | பாரிசான் நேசனல் | 7,950 | 51.45 | 25.71 ▼ | |
| ரசாலி ரம்லி | மக்கள் நீதிக் கட்சி | 7,501 | 48.55 | 48.55 | |
| மொத்தம் | 15,451 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 15,451 | 97.97 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 320 | 2.03 | |||
| மொத்த வாக்குகள் | 15,771 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 21,192 | 15,771 | 3.83 | ||
| Majority | 449 | 2.9 | 51.42 ▼ | ||
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| எஸ். கோபால கிருஷ்ணன் | பாரிசான் நேசனல் | 10,480 | 77.16 | |
| அசுமி உசேன் | மலேசிய இசுலாமிய கட்சி | 3,103 | 22.84 | |
| மொத்தம் | 13,583 | 100.00 | ||
| செல்லுபடியான வாக்குகள் | 13,583 | 96.49 | ||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 494 | 3.51 | ||
| மொத்த வாக்குகள் | 14,077 | 100.00 | ||
| பதிவான வாக்குகள் | 19,943 | 14,077 | ||
| Majority | 7,377 | 54.32 | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
- ↑ "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
- ↑ "Notis Mengenai Daerah Mengundi Dan Pusat Mengundi Bagi Bahagian-bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Bagi Negeri-negeri Tanah Melayu / Notice of Polling Districts and Polling Centres for the Federal and State Constituencies of the States of Malaya; Federal Government Gazette" (PDF). Berita RTM. 30 March 2018. P.U. (B) 157(/2018); SPR(R)60 Jld. 21; PN(PU2)178C/LXXXVII. Retrieved 23 March 2026.