உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°00′02.7″N 101°47′02.69″E / 3.000750°N 101.7840806°E / 3.000750; 101.7840806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG33  சுங்கை ஜெர்னே
| எம்ஆர்டி
சுங்கை ஜெர்னே நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Sungai Jernih MRT Station
Stesen MRT Sungai Jernih
சீனம்: 遮内河
அமைவிடம்சுங்கை ஜெர்னே காஜாங் சிலாங்கூர்
கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°00′02.7″N 101°47′02.69″E / 3.000750°N 101.7840806°E / 3.000750; 101.7840806
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
ரேபிட் கேஎல்
தடங்கள் 9  காஜாங் 
நடைமேடை2 பக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2 தடங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட நிலையம்
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking 508; Motorcycle 49
துவிச்சக்கர வண்டி வசதிகள் 10
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG33 
வரலாறு
திறக்கப்பட்டது KG33  17 சூலை 2017
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
புக்கிட் டுக்குங்
குவாசா
 
காஜாங் வழித்தடம்
 
காஜாங் அரங்கம்
காஜாங்
அமைவிடம்
Map

சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Sungai Jernih MRT Station; மலாய்: Stesen MRT Sungai Jernih) என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங் புறநகர் பகுதிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையம் E7 (Cheras–Kajang Expressway) செராஸ்–காஜாங் விரைவுச்சாலை; மற்றும் E18 (SILK) காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலைக்கு அமைந்துள்ளது. காஜாங் சிறப்பு மருத்துவமனை (KPJ Kajang Specialist Hospital) மற்றும் உலு லங்காட் மாவட்ட கல்வித் துறை (Hulu Langat Education Department) ஆகியவை நிலையத்தின் அருகில் அமைந்துள்ளன.

நிலையக் கட்டுமானத்தின் போது, ​​இந்த நிலையம் முதலில் தற்காலிகமாக சவுஜானா இம்பியான் (Saujana Impian MRT Station) என்றும்; பின்னர் சுங்கை கந்தான் (Sungai Kantan MRT Station) என்றும் பெயரிடப்பட்டது. நிலையத்திற்கு அருகிலுள்ள சவுஜானா இம்பியான் (Saujana Impian); மற்றும் கம்போங் சுங்கை கந்தான் (Kampung Sungai Kantan) கிராமங்களின் பெயரால் நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையம் காஜாங் நகர மையத்திற்குச் சேவை செய்யும் இரண்டு நிலையங்களில் ஒன்றாகும்; மற்றொன்று காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் ஆகும்.

சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையத்தில் 508 வாகன நிறுத்துமிடங்கள்; மற்றும் 49 விசையுந்து நிறுத்துமிடங்கள் கொண்ட மூடப்பட்ட தரிப்பிடம் உள்ளது.

காஜாங் வழித்தடம்

[தொகு]

9 காஜாங் வழித்தடம் அல்லது காஜாங் எம்ஆர்டி வழித்தடம் (ஆங்கிலம்: Kajang Line அல்லது MRT Kajang Line அல்லது Kelana Jaya Komuter Line; என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் பெரும் விரைவு தொடருந்து வழித்தடம் (Mass Rapid Transit Line) (MRT) ஆகும்.

5 கிளானா ஜெயா இலகு விரைவு தொடருந்து வழித்தடத்திற்கு (LRT Kelana Jaya Line) (LRT) பிறகு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பு ஆகும்.[1]

பொது

[தொகு]

9 சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையம் - காஜாங் தொடருந்து நிலையம் வரையில் கட்டப்பட்ட 19 நிலையங்களில் சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையமும் ஒன்றாகும்; 17 சூலை 2017-ஆம் திகதி திறக்கப்பட்டது.[2] சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இந்த நிலையம் காஜாங் புறநகர்ப் பகுதிகளுக்குச் சேவை செய்கிறது.[3]

நிலைய அமைப்பு

[தொகு]

இந்த நிலையம், காஜாங் எம்ஆர்டி வழிதடத்தின் பெரும்பாலான உயர்மட்ட நிலையங்களைப் போலவே (முனையம் மற்றும் நிலத்தடி நிலையங்கள் தவிர) அமைப்பையும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேல் தளத்தில் நடைமேடை உள்ளது.

இரட்டை வழித்தடங்களிலும் இரண்டு பக்க நடைமேடைகள் உள்ளன; மற்றும் தரை மட்டத்திற்கும் நடைமேடை மட்டத்திற்கும் இடையில் பயணச்சீட்டு வழங்கும் வசதியுடன் கூடிய ஒற்றை இணைப்புவழி வசதிகளும் உள்ளன. நிலையத்தின் அனைத்து தளநிலைகளும் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

L2 நடைமேடை பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங் தொடருந்து  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (→) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டண வாயில்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள், பாதசாரி மேம்பாலம் (→) நுழைவாயில் C
G தரை மட்டம் நுழைவாயில் A (செராஸ் சாலை/கோலாலம்பூருக்கு); நுழைவாயில் B (காஜாங் சிறப்பு மருத்துவமனை/காஜாங் நகரத்திற்கு) (→) தனியார் வாடகை ஊர்திகள் நிறுத்துமிடம் (→) செராஸ் சாலை (→) கேபிஜே காஜாங் சிறப்பு மருத்துவமனை

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]

சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் அமைந்துள்ள செராஸ் சாலையின் இருபுறமும் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள பல மாடி வாகன நிறுத்துமிடத்திற்கு நேரடியாக உயர்த்தப்பட்ட நடைபாதையும் உள்ளது.

 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A செராஸ் சாலை மேற்குப் பகுதி கம்போங் சுங்கை ஜெர்னே, பேருந்து நிறுத்தம் (கோலாலம்பூர்)
B செராஸ் சாலை கிழக்குப் பகுதி ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) பல மாடி வாகனங்கள் நிறுத்துமிடம் (→) பேருந்து நிறுத்தம் (→) (காஜாங்) (→) காஜாங் சிறப்பு மருத்துவமனை (→) கம்போங் சுங்கை கந்தான்
வாகனங்கள் நிறுத்துமிடம் பல மாடி வாகனங்கள் நிறுத்துமிடம்

பேருந்து சேவைகள்

[தொகு]
சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையத்தின் பேருந்து சேவைகள்
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி
T456 [4]  KG33  சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் சௌஜானா இம்பியான் லோட்டஸ் காஜாங் (→) பெர்சியாரான் சௌஜானா இம்பியான் (→) பெர்சியாரான் இம்பியான் பெர்டானா

பிற பேருந்து சேவைகள்

[தொகு]

சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் வேறு சில பேருந்து சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.

சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம்
பேருந்து இயக்குநர் தொடக்கம் இலக்கு பயணவழி குறிப்புகள்
450 [5] ரேபிட் கேஎல் காஜாங் நிறுத்தம் லெபோ புடு முனையம் ரேக்கோ சென்ட்ரல் (→) காஜாங் நகரம்

 KG34  காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம்
 KG33  சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம்
 KG31  புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம்
செராஸ் விரைவுச்சாலை
 KG26  தாமான் கோனாட் எம்ஆர்டி நிலையம்
 KG24  தாமான் மிடா எம்ஆர்டி நிலையம்
 KG22  AG13  மலூரி நிலையம்

பேருந்து நிறுத்தத்திலிருந்து நிலைய நுழைவாயிலுக்கு நடந்து செல்லும் தூரம்

(கோலாலம்பூர்; காஜாங்)

காட்சியகம்

[தொகு]

சுங்கை ஜெர்னே எம்ஆர்டி நிலையம் (13 சூலை 2022)

மேலும் காண்க

[தொகு]

கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ruban, A. (Dec 16, 2016). "A quiet start to Malaysia's first MRT, but commuters happy". The Malay Mail Online. http://www.themalaymailonline.com/malaysia/article/a-quiet-start-to-malaysias-first-mrt-but-commuters-happy. 
  2. "The Launch Of MRT Phase 2 Today Gets M’sians All Excited, How Will Commuters Benefit" (in en-gb). Malaysian Digest இம் மூலத்தில் இருந்து 2017-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729220121/http://www.malaysiandigest.com/frontpage/282-main-tile/686803-the-launch-of-mrt-phase-2-today-gets-m-sians-all-excited-how-will-commuters-benefit.html. 
  3. "Najib launches Phase 2 of Sungai Buloh-Kajang MRT line" (in en). Thestar.com.my. 2017-07-17. https://www.thestar.com.my/news/nation/2017/07/17/najib-launches-phase-2-of-sungai-buloh-kajang-mrt-line/. 
  4. "Sungai Jernih MRT Feeder Bus T456 | mrt.com.my". mrt.com.my. Retrieved 31 December 2020.
  5. "Line Route KJ01 - Smart Selangor (operated by rapidKL) - Bus Schedules". Moovit (in ஆங்கிலம்). Retrieved 31 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]