உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை சிப்புட் நிகழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கை சிப்புட் நிகழ்வு
Sungai Siput Incident
மலாயா அவசரகாலம்
ஒரு பகுதி
சுங்கை சிப்புட் நிகழ்வு is located in மலேசியா மேற்கு
சுங்கை சிப்புட்
சுங்கை சிப்புட்
சுங்கை சிப்புட் நிகழ்வு (மலேசியா மேற்கு)
நாள் 16 சூன் 1948
இடம் சுங்கை சிப்புட், பேராக், மலாயா கூட்டமைப்பு
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம் மலாயா பொதுவுடைமை கட்சி
இழப்புகள்
3 கொலை இல்லை

சுங்கை சிப்புட் நிகழ்வு (ஆங்கிலம்: Sungai Siput Incident; மலாய்: Insiden Sungai Siput) என்பது மலாயா அவசரகால நிலை தொடங்கியதைக் குறிப்பிடுவதாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் சுங்கை சிப்புட் ஓர் அமைதியான நகரமாக விளங்கியது. 1948-ஆம் ஆண்டு சுங்கை சிப்புட் நிகழ்விற்குப் பின்னர், அதன் வரலாற்றையே மாற்றி அமைத்தது.

பேராக், சுங்கை சிப்புட், எல்பில் தோட்டம் (Elphil Estate); பின் சூன் தோட்டம் (Phin Soon Estate) ஆகிய இரு ரப்பர்த் தோட்டங்களில், 1948 சூன் 16-ஆம் திகதியில், மூன்று பிரித்தானிய தோட்ட நிர்வாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த இரண்டு ரப்பர் தோட்டங்களும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தன.[1]

காலை 8.30-க்கு சுங்கை சிப்புட், எல்பில் தோட்டத்தின் (Elphil Estate) நிர்வாகி ஏ.இ.வால்கர் (A.E. Walker) அவருடைய அலுவலக அறை மேசையில் சுட்டுக் கொல்லப் பட்டார்.[2][3] முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, பின் சூன் தோட்ட மேலாளர் ஜான் அலிசன் (John Allison); அவரின் உதவியாளர் இயன் கிறிஸ்டியன் (Ian Christian) ஆகிய இருவரும் மலாயா பொதுவுடைமை கட்சியின் 12 ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[4][5]

பிரித்தானிய நிர்வாகிகளின் உடல்கள் பத்து காஜாவில் உள்ள ஆங்கலிக்கன் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் பட்டது. இந்தத் தாக்குதல்கள் நடந்த சில வாரங்களுக்குப் பிறகு, மலாயாவில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.

இலக்குகள்

[தொகு]
மலாயா அவசர காலத்தின் போது மலாயா காவல் துறையினர்

1950 சூலை 13 அன்று, மலாயா காவல்துறை அதிகாரி ரால்ப் லூயிஸ் இந்தர் (Ralph Lewis Inder) என்பவர் கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்டு ஈப்போ மருத்துவமனையில் இறந்தார். அன்றைய தினம் அதிகாலையில், பொதுவுடைமை கிளர்ச்சிக்காரர்கள் டோவன்பி தோட்டத்தில் ஏராளமான இளம் ரப்பர் மரங்களை வெட்டிச் சாய்த்தனர். காவல்துறை அதிகாரி ரால்ப் லூயிஸ் விசாரணை செய்ய அங்கு சென்றிருந்தார்.

அந்த வேளையில், கிளர்ச்சிக்காரர்கள் அவருக்காகக் காத்திருந்தனர். ரால்ப் மற்றும் அவரின் இரண்டு துணை காவலர்கள் மூவரும் எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். ஆனாலும் அவர்கள் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போராடினர். அந்த நிகழ்வில் சிறப்புக் காவலர்களில் ஒருவரும் கொல்லப்பட்டார்; மற்றவர் படுகாயம் அடைந்தார். மேலும் காவல் துறையினரின் ஆயுதங்களுடன் கிளர்ச்சிக்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்."[6]

நான்காவது இலக்கு

[தொகு]
மலாயா அவசர காலத்தின் போது சிறப்பு காவல் துறையினர்

பேராக், சுங்கை சிப்புட்டில், நான்காவது ஐரோப்பியர் ரப்பர் தோட்டத்தில் மற்றொரு தாக்குதல் திட்டமிடப்பட்டது. இருப்பினும், அந்தத் ரப்பர் தோட்டத்து நிர்வாகியின் வண்டி பழுதடைந்ததால் அவர் தாமதமாக வேலைக்குச் சென்றார்.

அதனால் திட்டமிடப்பட்ட தாக்குதல் தோல்வியில் முடிந்தது. தோட்டத்து நிர்வாகியைக் கொல்வதற்கு மேலும் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சிக்காரகள் அனுப்பப்பட்டனர். ஆனாலும் அந்த நிர்வாகியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கிளர்ச்சிக்காரகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.[7]

சுங்கை சிப்புட் நிகழ்விற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், பிரித்தானியர்கள் அவசரகால நடவடிக்கைகளைச் சட்டமாக இயற்றினார்கள். இந்த நடவடிக்கைகளின் கீழ், பிரித்தானிய மலாயா அரசாங்கம் மலாயா பொதுவுடைமைக் கட்சியைச் சட்டவிரோதமாக்கியது; மற்றும் ஆயிரக் கணக்கான தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி ஆதரவாளர்களில் பலர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.orangperak.com/sejarah-berdarah-sungai-siput-utara-perak.html%3famp (in Malay)
  2. Itemid=50 "Killings that Triggered the Malayan Emergency in 1948" by Foong Thim Leng (The Star - 11 June 2011) Malaysian Palm Oil Association accessed 4 November 2013
  3. "CHINESE GANGSTERS.". Kalgoorlie Miner (WA: National Library of Australia): p. 5. 17 June 1948. http://nla.gov.au/nla.news-article95717387. பார்த்த நாள்: 4 November 2013. 
  4. "Killings that Triggered the Malayan Emergency in 1948" by Foong Thim Leng (The Star - 11 June 2011) Malaysian Palm Oil Association accessed 4 November 2013
  5. "CHINESE GANGSTERS.". Kalgoorlie Miner (WA : 1895 - 1950) (WA: National Library of Australia): p. 5. 17 June 1948. http://nla.gov.au/nla.news-article95717387. பார்த்த நாள்: 4 November 2013. 
  6. "Spymaster: Memoirs of a rubber planter, bandit fighter and spy by Boris Hembry accessed 28 November 2021.
  7. Souchou Yao (2016). The Malayan Emergency A Small, Distant War (PDF). Monograph series, no. 133. Nordic Institute of Asian Studies. pp. 40–41. ISBN 9788776941918.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கை_சிப்புட்_நிகழ்வு&oldid=4410530" இலிருந்து மீள்விக்கப்பட்டது