உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கை கண்டிஸ் (N49)
சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதி
State Constituency in Selangor
வாக்காளர்களின் எண்ணிக்கை78,605 (2023)[1]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2018
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
சட்டமன்ற
உறுப்பினர்
வான் சகானுரின் அகமது
முதல் தேர்தல்2018
இறுதித் தேர்தல்2023

சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி (N49) (மலாய்: Bahagian Pilihan Raya Sungai Kandis; ஆங்கிலம்: Sungai Kandis State Constituency; சீனம்: 双溪甘迪斯州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், (கிள்ளான்; சா ஆலாம்) மாவட்டங்களில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். கோத்தா ராஜா மக்களவைத் தொகுதியில் (P111) அமைந்துள்ள இந்தத் தொகுதி, 2018-ஆம் ஆண்டில், செரி அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி; (Seri Andalas) மற்றும் செரி மூடா சட்டமன்றத் தொகுதி (Sri Muda) எனும் இரு தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது.

சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

2018-ஆம் ஆண்டில் இருந்து சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது வான் சகானுரின் அகமது (Wan Dzahanurin Ahmad) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். சுங்கை கண்டிஸ் தொகுதியின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை: 69.0% மலாய்க்காரர்கள்; 13.0% சீனர்கள்; 15.2% இந்தியர்கள்; 2.90% இதர இனத்தவர் என பதிவாகி உள்ளது.

30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, சுங்கை கண்டிஸ் தொகுதி 19 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

தொகுதி வரலாறு

[தொகு]




சுங்கை கண்டிஸ் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2023)[3]

  மலாயர் (69.0%)
  சீனர் (13.0%)
  இதர இனத்தவர் (2.90%)
சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செரி அண்டலாஸ்; செரி மூடா தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
14-ஆவது 2018 சுகைமி சாபி பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
2018–2023 சவாவி முகினி
15-ஆவது 2023–தற்போது வரையில் வான் சாருனின் அகமது பெரிக்காத்தான்
(பெர்சத்து)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023[4]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
வான் சாருனின் அகமதுபெரிக்காத்தான்28,92649.0149.01 Increase
சவாவி முகினிபாக்காத்தான்28,75948.7212.72
அபிரீனா சகிரா செரிப்மூடா1,3412.272.27 Increase
மொத்தம்59,026100.00
செல்லுபடியான வாக்குகள்59,02699.30
செல்லாத/வெற்று வாக்குகள்4140.70
மொத்த வாக்குகள்59,440100.00
பதிவான வாக்குகள்78,60559,44026.23 Increase
Majority1670.2922.98
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
  2. "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
  3. "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
  4. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.{{cite web}}: CS1 maint: date and year (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]