சுங்கம் பள்ளிவாசல், மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கம் பள்ளிவாசல்
சுங்கம் பள்ளிவாசல் (மேலிருந்து எடுக்கப்பட்ட படம்)
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்நெல்பேட்டை, மதுரை, தமிழ்நாடு, இந்தியா
சமயம்இசுலாம்

சுங்கம் பள்ளிவாசல் (Sungam Mosque), மதுரையிலுள்ள நெல்பேட்டையில் அமைந்துள்ளது.[1].இது மதுரையிலுள்ள பழமையான பள்ளிவாசல். முகலாய கட்டிடப்பாணியில் உள்ளூர் மக்களால் கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

மதுரை மாநகரின் மையப்பகுதியில் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கும் நெல் பேட்டை, மதுரைக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் கேந்திரமாக விளங்குகிறது. தென்மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் மற்றும் தானிய வகைகள் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இங்குதான் சந்தைப்படுத்தப்பட்டது. மாலிக் கபூரின் வெற்றியைத் தொடர்ந்து மதுரை பல்வேறு முஸ்லீம் மன்னர்களின் குடையின் கீழ் ஆளப்பட்டது. அப்போது நெல்பேட்டை பகுதி இசுலாமியர் அதிகம் வசிக்கும் இடமாக மாறியது.[2]

சுங்க வரி[தொகு]

அக்கால கட்டத்தில் மதுரைக்கு வர நெல்பேட்டை அருகே வைகை நதியைக் கடந்து வருவது ஒன்று தான் வழியாக இருந்தது. நகருக்குள் வருபவர்களிடம் நுழைவுவரி, சுங்கவரி வசூல் செய்யப்பட்டது. சுங்கச்சாவடி அருகே இசுலாமியர் தொழுகைக்காக மசூதி ஒன்றை கட்டினர். அதுவே அன்றிலிருந்து சுங்கம் பள்ளிவாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சுங்கம் பள்ளிவாசல் கட்டடம் பழமை வாய்ந்த நிலையில் காட்சி தருகிறது.

சுங்கம் பள்ளிவாசல் தெருவில் இரும்பைத் தகடாகவும், பொருள்களாகவும் செய்யும் தொழிலே பெரும்பான்மையாக உள்ளது.

மாநகராட்சிப் பள்ளி[தொகு]

சுங்கம் பள்ளிவாசல் அருகே மதுரை மாநகராட்சியின் உமறுப் புலவர் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மதுரை மாவட்டத்தில் 118 பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை". தினமணி. 30 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பாண்டி நாட்டு மன்னர்கள". புத்தாளம். 2017-06-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. "பத்தாம் வகுப்பு: மதுரை மாவட்டம் 94 சதவீதம் தேர்ச்சி". தினமணி. 22 மே 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "மதுரையில் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாட்டம்". தினமலர். 26 சனவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.