உள்ளடக்கத்துக்குச் செல்

சுக்ரியா கானும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்ரியா கானும்
Shukriya Khanum
இறப்பு14 மே 2017
லாகூர்
தேசியம்பாக்கித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்அரசு கல்லூரி, கராச்சி
பணிவிமானி
அமைப்பு(கள்)பாக்கித்தான் பன்னாட்டு விமானநிலையம்
உறவினர்கள்மருத்துவர் சாகித் மசூது

சுக்ரியா கானும் (Shukriya Khanum) [1] பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு விமானியாவார். 1935 ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.[2] 1959 ஆம் ஆண்டு வணிக விமானியாக பணியேற்ற பாக்கித்தான் நாட்டின் முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார். [1] வணிக ரீதியாக நிறுவனம் தன்னை வானில் பறக்க அனுமதிக்கவில்லை என்றாலும் சுக்ரியா தனது வாழ்க்கையை தேசிய விமான நிறுவனமான பாக்கித்தான் பன்னாட்டு விமான நிறுவனத்தில் மற்றவர்களுக்கு கற்பிப்பதில் கழித்தார்.

சுக்ரியா தனது வாழ்நாள் முழுவதும் சிறுமிகள் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க தன்னால் முடிந்தவரை முயன்றார். ஆனால் பாக்கித்தான் நாட்டில் நடைமுறையில் இருந்த பாலின சமத்துவமின்மை காரணமாக கடைசிவரை விமானியாகும் தகுதியை இழந்தார்.

கல்வி

[தொகு]

சுக்ரியா 1959 ஆம் ஆண்டு பாக்கித்தானின் கராச்சி நகரத்திலுள்ள அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார் [3] லாகூர் நகரத்திலுள்ள வால்டன் விமான நிலையத்தின் பறக்கும் அகாதமியில் சுக்ரியா பறப்பதற்குத் தேவையான பாடங்களை கற்றுக் கொண்டார்.[4] [5]

தொழில்

[தொகு]

சுக்ரியா 1959 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற உடனேயே தனது பறக்கும் உரிமத்தைப் பெற்றார். [6] [7] தேசிய விமான நிறுவனமான பாக்கித்தான் பன்னாட்டு விமான நிலையத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [8] [9] இருப்பினும், அந்த நேரத்தில், பெண்கள் வணிக விமானத்தில் பறக்க பாக்கித்தான் நாட்டு விதிகள் அனுமதிக்கவில்லை, எனவே சுக்ரியா பாக்கித்தான் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான மன்றத்தில் பறக்கும் பயிற்றுவிப்பாளராக வேலை பெற்றார். அங்கு இவர் புதிய மாணவர்களுக்குப் பறக்க கற்றுக்கொடுத்தார். [10] [11] கராச்சி பறக்கும் மன்றத்தில் சவாரி செய்ய பறக்கும் ஆர்வலர்களையும் சுக்ரியா அழைத்துச் செல்வார். [12] [13]

1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சியா-உல்-அக் ஆட்சிக் காலத்தில் பாக்கித்தானில் இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டபோது, விதிகள் கடுமையாக இருந்தன மற்றும் பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அவை ஒரே பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பணிபுரியும் கருத்தை எதிர்த்தன. அதனால் சுக்ரியா வானத்தில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. சியாவின் விதிகள் ஆண்களும் பெண்களும் ஒன்றாக பறப்பதையும் எதிர்த்தன. [14] [15] சுக்ரியா பின்னர் தரைதளத்தில் மட்டும் விமான பயிற்றுவிப்பாளரின் வேலைக்கு மட்டுப்படுத்தப்பட்டார். [16] இவரது தொழில் வாழ்க்கையில், சுக்ரியாவால் விமானியாக பணியாற்ற முடியவில்லை. [17] [18]

பாலின கட்டுப்பாடுகள் இல்லாமல் பாக்கித்தானில் பறந்த முதல் பெண் வணிக விமானி, ரபியா என்பவராவார். அவர் சுக்ரியாவுக்கு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகே உரிமம் பெற்றார். [19] [20] 2005 ஆம் ஆண்டில் வணிகரீதியான திட்டமிடப்பட்ட விமானத்தின் முதல் பெண் பாக்கித்தான் விமானத் தலைவராக ராபியா பறந்தார். மேலும் 2006 ஆம் ஆண்டு ராபியா முதல் பாக்கித்தானின் அனைத்து பெண்கள் குழு விமானத்தையும் பறக்கவிட்டார். 1989 ஆம் ஆண்டில் ராபியா சுக்ரியாவை கராச்சியில் சந்தித்தார். [21] [22] சுக்ரியா அவரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார் மற்றும் அவரது சொந்த வார்த்தைகளில் "தொழில்முறைக்கு கவனம் செலுத்துங்கள், நீங்கள் ஒரு பெண் என்பதால் நீங்கள் அதை செய்ய முடியாது என்று யாரும் நினைக்க வேண்டாம்" என்று அறிவுரை கூறினார். [23] [24]

இறப்பு

[தொகு]

பல வருடங்களாக போராடி வந்த சுக்ரியா கல்லீரல் புற்றுநோய் [25] காரணமாக 14 மே 2017 அன்று தனது 82 ஆவது வயதில் இறந்தார். லாகூரில் உள்ள சௌகத் கானும் மருத்துவமனையில் சிகிச்சையின்போது சுக்ரியாவுக்கு இறப்பு நிகழ்ந்தது. [26] [27]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Shukriya Khanum – Pakistan's first female commercial pilot dies". The Express Tribune (in ஆங்கிலம்). 2017-05-15. Retrieved 2020-11-27.
  2. Ali, Nasir (in en). Important general Knowledge of Pakistan. https://www.academia.edu/32406584/Important_general_Knowledge_of_Pakistan.
  3. theindependent. "first female pilot".
  4. "Pakistan first female pilot Shukriya Khanum is no more". Pakistan Aviation (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-05-15. Retrieved 2020-11-27.
  5. "Pakistan's first female pilot Shukriya Khanum did the impossible back in 1959". Daily Pakistan Global (in ஆங்கிலம்). 2018-03-08. Retrieved 2020-11-27.
  6. "Who was Pakistan's first female commercial pilot?". Sports News. Retrieved 2020-11-27.
  7. MEDIA, PT AKURAT SENTRA; www.akurat.co. "Pilot Komersial Wanita Pertama Pakistan Tutup Usia". akurat.co (in இந்தோனேஷியன்). Retrieved 2020-11-27.
  8. bransynario. "Pakistani female pilots".
  9. "Shukriya Khanum". www.samaa.tv. Retrieved 2020-11-27.
  10. "Women: to infinity and beyond! ·". HerCareer (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-03-07. Retrieved 2020-11-27.
  11. "Shukriya Khanum - The First Pakistani Woman to Obtain Commercial Pilot Licence (CPL) Passes Away - History of PIA - Forum". historyofpia.com. Retrieved 2020-11-27.
  12. "Pakistan's legendary Fly Girl is no more". gulfnews.com (in ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  13. InpaperMagazine, From (2014-03-09). "Women's day: Shukriya, Miss Shukriya!". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  14. "Pakistan's first female pilot Shukriya Khanum did the impossible back in 1959". Pakistan Defence (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  15. "Shukriya Khanum Archives". Mashion (in ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  16. pakpaedia. "First female pilot of Pakistan".
  17. "Shukriya khanum". Newsline (in ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  18. Zakaria, Rafia (2014-03-08). "HerStory: Seven defining moments for the Pakistani woman". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  19. "Shukriya Khanum: Pakistan's first female commercial pilot dies". 2017-05-15. https://www.bbc.com/news/world-asia-39922670.
  20. Khalid, Lubna. "Women - flying high!". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  21. Tahir, Zulqernain (2006-01-26). "All-women crew pilots plane for 1st time". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  22. "Sky is the Limit". Newsline (in ஆங்கிலம்). 2017-03-10. Retrieved 2020-11-27.
  23. "History of PIA - Pakistan International Airlines". historyofpia.com. Retrieved 2020-11-27.
  24. "Social media celebrates as PIA female pilots fly challenging Gilgit flight". The Express Tribune (in ஆங்கிலம்). 2018-06-21. Retrieved 2020-11-27.
  25. "Pakistan's first female pilot Shukriya Khanum dies at 82". Daily Pakistan Global (in ஆங்கிலம்). 2017-05-14. Retrieved 2020-11-27.
  26. "Pakistan's first female Pilot Shukriya Khanum dies at 82 – Abb Takk News" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-11-27.
  27. "Shukriya Khanum, Pakistan's first female pilot, passes away at 82". International Business Times UK (in ஆங்கிலம்). 2017-05-16. Retrieved 2020-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரியா_கானும்&oldid=3277822" இலிருந்து மீள்விக்கப்பட்டது