சுக்ரவாரி ஏரி
சுக்ரவாரி ஏரி Shukrawari Lake | |
---|---|
சூரியன் மறையும்போது சுக்ரவாரி ஏரி | |
அமைவிடம் | நாக்பூர் |
ஆள்கூறுகள் | 21°08′46″N 79°05′56″E / 21.146°N 79.099°E |
சுக்ரவாரி ஏரி (Shukrawari Lake) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. சுக்ரவாரி தலாவ், காந்தி சாகர் ஏரி, மற்றும் யும்மா ஏரி என்று பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. நாக்பூரில் இராமன் அறிவியல் மையத்தின் எதிரில் சுக்ரவாரி ஏரி உள்ளது. 275 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகக் கூறப்படும் இந்த ஏரி, அப்போதைய நாக்பூரின் ஆட்சியாளரான சந்து சுல்தானால் நீர் வழங்கல் ஆதாரமாக நிறுவப்பட்டது. நீர்த்தேக்கத்துடன் இணைக்கப்பட்ட நாக் நதிக்கு நீரோடைகளை உருவாக்கி திருப்பி விடப்படும் வகையில் நீர்வளத்தை உருவாக்கி அதற்கு 'யும்மா தலாப்' என்று இவர் பெயரிட்டார். பின்னர், போன்சலே மற்றும் பிரிட்டிசு காலங்களில் இது 'சுக்ரவாரி தலாவ்' என்று அறியப்பட்டது போன்சலே வம்சத்தைச் சேர்ந்த ரகு முதலாம் போன்சலே 1742 ஆம் ஆண்டில் நாக்பூரை தனது அரசின் தலைநகராக அறிவித்தார்.[1]
அழகிய செவ்வக வடிவிலான காந்தி சாகர் நீர்த்தேக்கம் இப்போது கல் சுவர்கள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூடப்பட்டுள்ளது. ஏரியின் நடுவில் ஒரு சிறிய தீவு உள்ளது. அது ஒரு தோட்டமாகும். தோட்டத்தின் உள்ளூர் பெயர் சுபூன் தோட்டம் எனப்படுகிறது. சிவன் கோயில் மற்றும் இரவில் மஞ்சள் பாதரச ஒளியால் இத்தோட்டம் ஒளிர்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History". Archived from the original on 17 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)