உள்ளடக்கத்துக்குச் செல்

சுக்தா பிரீதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்தா பிரீதம்
நீதிபதி
பதவியில்
13 ஏப்ரல் 2011  தற்போது வரை
இந்திய உச்ச நீதிமன்றம்-இல் வழக்குரைஞர்
பதவியில்
செப்டம்பர் 2004  ஜனவரி 2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1982 (1982-06-01) (அகவை 44)
குருச்சேத்திர மாவட்டம், அரியானா, இந்தியா
பெற்றோர்
  • நீதிபதிபிரீதம் பால் (தந்தை)
  • மாயா பிரீதம் (தாய்)
முன்னாள் மாணவர்பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
பணிநீதிபதி
விருதுகள்சிறந்த விளையாட்டு வீரர், எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.எம். பட்டப்படிப்புகளில் தங்கப் பதக்க வென்றவர்

சுக்தா பிரீதம் (Sukhda Pritam) அரியானா மாநிலத்தில் உள்ள ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக உள்ளார்.

தற்போது, பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்குகிறார்.

இவர் 2023 முதல் 2025 வரை சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதியின் தலைமையில் இந்த ஆராய்ச்சி மையம் செயல்பட்டது. சட்டச் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக பல குறிப்பிடத்தக்க வெளியீடுகள் வெளியிடப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு அம்பாலாவில் தலைமை நீதித்துறை நீதிபதியாக பணியாற்றினார். இவர் 2020-21 இல் அரியானா மாநிலச் சட்ட சேவைகள் ஆணையத்தின் இணை உறுப்பினர் செயலாளராக இருந்தார்.

தில்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் இரண்டு ஆண்டுகள் துணை பதிவாளராகவும் (நீதித்துறை) இருந்தார்.[1] முன்பு ஏப்ரல் 2016 முதல் சோனிபட் மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் குடிமையியல் நீதிபதியாக (எஸ். ஆர். பிரிவு) நியமிக்கப்பட்டார், அங்கு இளைஞர் நீதி வாரியத்திற்குத் தலைமை தாங்கினார்.[2] 13 ஏப்ரல் 2016 அன்று சண்டிகரில் இருந்து சோனிபட்டிற்கு மாற்றப்பட்டு பதவி உயர்வு பெற்றார்.[3]

இவரது தந்தை நீதிபதி பிரீதம் பால் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆவார். அரியானாவின் ஊழல் தடுப்பு குறைதீர்ப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவில் நியமிக்கப்பட்டார். லோக் ஆயுக்தாவில் பணியாற்றிய பிறகு 18 சனவரி 2016 அன்று ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Green Tribunal". Archived from the original on 30 January 2019. Retrieved 30 January 2019.
  2. "History of Courts". Ecourts.gov.in. Retrieved 2016-09-23.
  3. "एक सप्ताह में ज्यूडिशियरी में दूसरा बड़ा फेरबदल, 199 जजों के तबादले".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்தா_பிரீதம்&oldid=4570023" இலிருந்து மீள்விக்கப்பட்டது