சுக்கேன் தெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்கேன் தெய்
Sukhen Dey
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1989 மார்ச்சு 28
அண்டுல்
வசிப்பிடம்அண்டுல், அவுரா, மேற்கு வங்காளம்
உயரம்1.68 மீட்டர் (2014)
எடை56 கிலோகிராம் (2014)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)56 கி.கி
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் பாரம் தூக்குதல்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாசுகோ 56 கி.கி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 தில்லி 56 கி.கி
25 சூலை 2014 இற்றைப்படுத்தியது.

சுக்கேன் தெய் (Sukhen Dey) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் நாள் பிறந்தார். மேற்கு வங்காள மாநிலம், அவுரா இவரது சொந்த ஊராகும். இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 56 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். முன்னதாக புது தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இவர் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார் [1]. மலேசியாவின் முகமது பிசோல் சுல்லெய்மிக்கு அடுத்ததாகவும் வெண்கலப் பதக்கம் வென்ற கனேசு மாலிக்கு முன்னதாகவும் போட்டியை முடித்தார் [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கேன்_தெய்&oldid=3728435" இருந்து மீள்விக்கப்பட்டது