உள்ளடக்கத்துக்குச் செல்

சுகோர்சலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகோர்சலைட்டு
Scorzalite
பொலிவியாவின், எசுத்தானோ ஓர்க்கோ சுரங்கத்திலிருந்து கிடைத்த சுகார்சலைட்டு கனிமம் (6.8 x 5.7 x 5.1 செ.மீ)
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Fe2+,Mg)Al2(OH,PO4)2
இனங்காணல்
நிறம்அடர் நீலம்
படிக இயல்புமணிகள், திரட்சிகள், இருபிரமிடு படிகங்கள்
படிக அமைப்புஒற்றைச்சரிவு
இரட்டைப் படிகமுறல்பல, அடுக்கு வடிவம்
பிளப்புதெளிவு {110}, தெளிவற்றது {101}
முறிவுசமமற்றது
மோவின் அளவுகோல் வலிமை6
மிளிர்வுபளபளக்கும்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஅரை ஒளிபுகும்
ஒப்படர்த்தி3.33
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
ஒளிவிலகல் எண்nα = 1.626 – 1.645 nβ = 1.654 – 1.674 nγ = 1.663 – 1.680
இரட்டை ஒளிவிலகல்δ = 0.037
பலதிசை வண்ணப்படிகமைபார்க்கலாம் X = நிறம்மற்றது; Y = Z = நீலம்
2V கோணம்அளக்கப்பட்டது: 62°
நிறப்பிரிகைr < அதிகம் உணரக்கூடியது
மேற்கோள்கள்[1][2][3]

சுகோர்சலைட்டு (Scorzalite) என்பது (Fe2+,Mg)Al2(OH,PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அலுமினியம் பாசுப்பேட்டு கனிமமான இது நிறமற்றது முதல் வெள்ளை, மஞ்சள் அல்லது ரோசா நிறம் வரை மாறுபடும். ஒற்றைச் சரிவச்சுப் படிக அமைப்பில் இக்கனிமம் படிகமாகிறது. இது இரும்பு, மக்னீசியம் மற்றும் அலுமினியம் பாசுப்பேட்டுகளைக் கொண்ட, அடர் நீல நிறமுடைய ஒரு பாசுப்பேட்டு கனிமமாகும். மெல்லிய நிறமும் அதிக மக்னீசியம் செறிவும் கொண்ட இலாசுலைட்டு கனிமத்துடன் இணைந்து உருவாகும் ஒரு திண்மக் கரைசல் தொடரின் ஒரு முனை உறுப்பாக சுகோர்சலைட்டு திகழ்கிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சுகோர்சலைட்டு கனிமத்தை Scz[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

சுகோர்சலைட்டு கனிமம் ஒற்றைச் சாய்வுப் படிக அமைப்பில், இரு பிரமிடு வடிவத்தில் படிகமாகிறது. 5.5–6 என்ற மோவின் கடினத்தன்மையையும், 3.4 என்ற ஒப்பு அடர்த்தியையும் கொண்டுள்ளது. உருகுதிறனற்றதாகவும், நீரில் கரையாத கனிமமாகவும் உள்ளது. வெதுவெதுப்பான ஐதரோகுளோரிக் அமிலத்தில் மிகச் சிறிதளவு கரையும்.

தோற்றம்

[தொகு]

முதன்முதலில் 1947-ஆம் ஆண்டில், பிரேசிலின் மினாசு கெரைசு மாநிலத்திலுள்ள தோசு பள்ளத்தாக்கு, இலினோபோலிசு பகுதியில் அமைந்துள்ள கோர்ரேகோ ஃப்ரியோ சுரங்கத்தின் கருங்கற் தீப்பாறைகளில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. பிரேசிலியப் புவியியலாளர் எவரிசுட்டோ பெனா சுகோர்சாவின் (1899–1969) நினைவாகப் பெயரிடப்பட்டது.[2]

பெக்மடைட்டுகள் மற்றும் கயனைட்டு (அலுமினியம் செறிந்த) குவார்ட்சைட்டுகளில் ஓர் இரண்டாம் நிலை கட்டமாகக் சுகோர்சலைட்டு காணப்படுகிறது. சௌசலைட்டு, டிரைஃபிலைட்டு, வில்லியைட்டு, திரோலைட்டு, அப்படைட்டு, லாக்ராய்சைட்டு, பெர்லினைட்டு, டூர்மலைன், மசுகோவைட்டு, பெல்ட்சுபார் மற்றும் குவார்ட்சு ஆகிய கனிமங்களுடன் சுகோர்சலைட்டு தொடர்பு கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Handbook of Mineralogy
  2. 1 2 Mindat.org
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோர்சலைட்டு&oldid=4497979" இலிருந்து மீள்விக்கப்பட்டது