சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ
சு-30எம்கேஐ | |
---|---|
![]() | |
வகை | பல்வகை தாக்குதல் வானூர்தி |
உற்பத்தியாளர் | இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் |
வடிவமைப்பாளர் | சுகோய் நிறுவனம் |
முதல் பயணம் | 1 சூலை 1997 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
பயன்பாட்டாளர்கள் | இந்திய வான்படை |
உற்பத்தி | 2002–present |
தயாரிப்பு எண்ணிக்கை | 120+ |
அலகு செலவு | US$34.94 மில்லியன் |
முன்னோடி | சு 27 |
சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ (Sukhoi Su-30MKI) என்பது சண்டை வானூர்தியாகும். இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து இந்திய வான்படைக்காக உருவாக்ககியது. இந்தியா 2000 ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து 140 சு 30 எம்கேஐ விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
முதல் ரஷ்ய தயாரிப்பு சு 30 எம்கேஐ 2002 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது. முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சு 30எம்கேஐ 2004 ஆம் ஆண்டு இந்திய வான்படையில் சேர்க்கப்பட்டது. சூலை 2010 நிலவரப்படி 124 சு 30எம்கேஐ விமானங்களை இந்திய வான்படை இயக்கி வருகிறது. இந்திய வான்படை 280 சு 30எம்கேஐ விமானங்களை 2015 ஆம் ஆண்டுக்குள் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
உருவாக்கம்[தொகு]
எம்கேஐ ரகம் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் கழகமும் இணைந்து உருவாகியது இந்த விமானம். இதன் வான் சட்டம் (airframe) சு 27 இன் வான் சட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும், இதன் வான் பயண மின்னணுவியல் (avionics) சம்பந்தமான பொருட்கள் பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டது. இது சைனாவின் சு 30 எம்கேகே, மலேசியாவின் சு 30 எம்கேஎம் ஆகியவற்றை விட அதிசிறந்ததாகும். இதன் பாகங்கள் அனைத்தும் இந்தியா, இஸ்ரேல், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டவை.
1996-ல் இந்தியா இரண்டு வருட தேர்வுக்கு பிறகு 50 சு-30 ரக விமானங்களை வாங்க முடிவு செய்தது. அப்போது இந்திய விமானப்படையிடமிருந்த ஃப்ரான்ஸின் மிராஜ்-2000-5 விமானத்தை விட சு-30 விலை குறைவாக இருந்ததே, சு-30 விமானம் தேர்வு செய்ய முக்கிய காரணமாகும். 2000-ல் 140 சு-30 விமானங்களை இந்தியாவிலேயே தயாரிக்க ரஷ்யாவுடனான ஒப்பந்தம் ஏற்பட்டது. 2007-ல் மேலும் 40 விமானங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. 2012-ல் மேலும் 42 சூப்பர் சு-30 விமானங்களுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆக மொத்தம் 272 சு-30 விமானங்களை இந்திய விமானப்படை இயக்கவுள்ளது.
இந்தியாவின் பங்களிப்பு[தொகு]
சு-30-ல் பயன்படுதப்படும் இந்திய மின்னனுவியல் தொழில்நுட்பங்கள் ‘வெற்றிவேல்’ என்னும் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டுகால ஆராய்ச்சியில் உருவானவை. DRDO-வின் தலைமையில் பல்வேறு இந்திய பொதுதுறை நிறுவனங்கள் உருவாக்கிய இந்த தொழில்நுட்பங்கள் ரஷ்ய நிபுணர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டதில் உருவான தொழில்நுட்பங்களில் சில,
- MC-486 Mission Computer and DP-30MK Display Processor - (Defence Avionics Research Establishment - DARE)
- Radar Computer - RC1 and RC2 (DARE)
- Tarang Mk2 Radar Warning Receiver (RWR) + High Accuracy Direction Finding Module (HADF) (DARE
- IFF-1410A - Identification Friend or Foe (IFF)
- Integrated Communication suite INCOM 1210A (HAL)
- Radar Altimeter - RAM-1701 (HAL)
- Programmable Signal Processor (PSP) - (LRDE)
- Multi Function Displays (MFD) - Samtel/DARE
MC-486 Mission கம்ப்யூட்டருக்கான மென்பொருள் (software) Ada என்னும் கணிமொழியில் எழுதப்பட்டது.
இந்த தொழில்நுட்பங்களில் சிலவற்றை மலேசியா மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கான சு-30 விமானங்களுக்காக இந்தியா ரஷ்யாவிற்கு வழங்கவுள்ளது.
சூப்பர் சு-30 எம்கேஐ[தொகு]
2012-ல் ரஷ்யாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்தியா 42 சு-30 எம்கேஐ விமானங்களை சூப்பர் சு-30 ரகத்திற்கு மேம்படுத்திட (upgrade) செய்யவுள்ளது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நடக்கவுள்ள இந்த மாற்றங்கள், நான்காம் தலைமுறை (4th generation) சண்டை விமானமான சு-30 எம்கேஐ’க்கு ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்கே உரித்தான சில முன்னேற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், எதிர்பார்க்கபடும் முன்னேற்றங்களில் சில இங்கே
- மேம்படுத்தப்பட்ட AL-31FP எஞ்சின்கள் (Super cruise)
- AESA ராடார் (Phazatron Zhuk-AE அல்லது NIIP BARS வகை)
- ப்ரஹ்மோஸ் ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில் உறுதிபடுத்தப்பட்ட அடிப்பாகம்
- மேம்படுத்தப்பட்ட கண்ணாடி cockpit
- மேம்படுத்தப்பட்ட HOTAS (Hands On Throttle And Stick) செயலகம்
- IDARE (Indian Defence Aviation Research Establishment) தயாரிக்கவுள்ள நவீன பாதுகாப்பு அம்சங்கள்
- மேம்படுத்தப்பட்ட ராடார் எச்சரிக்கை சாதனம்
- மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை சாதனம் (missile lock warning)
- K-100 போன்ற நவீன ஏவுகணைகள்
- அதிக உலோக கலவைகள் (composites) கொண்ட வான் சட்டம்(air frame)
- குறைவான ராடார் பரப்பளவு (RCS - Radar Cross Section)
சூப்பர் சு-30 முன்னேற்றங்களுடன் கூடிய விமானங்கள் ஐந்தாம் தலைமுறை விமானமான PAF-FA வரும் வரை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளா இந்திய விமானப்படைக்கு உறுதுணையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியிணைப்புகள்[தொகு]
- Extensive Technical Information about Su-30MKI
- Core Avionics for Su-30 MKI பரணிடப்பட்டது 2007-02-06 at the வந்தவழி இயந்திரம்
- Interview about MKI with Alexey I. Fedorov (April 23, 2002), the president of the Irkutsk Aviation Industrial Association, responsible for delivery of Sukhoi 30 MKI to India
- A news report on the SU-30MKI in an air exercise with the Royal Air Force
- Video at YouTube
- President of India Mrs. Pratibha Patil Becomes First Woman President to Fly in Sukhoi 30MKI