சுகேலி பர்
சுகேலி பர் வரைபடம் | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | அரபிக்கடல் |
| ஆள்கூறுகள் | 10°04′N 72°18′E / 10.07°N 72.3°E |
| தீவுக்கூட்டம் | இலட்சத்தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| மொத்தத் தீவுகள் | 3 |
| முக்கிய தீவுகள் |
|
| பரப்பளவு | 0.888 km2 (0.343 sq mi) |
| உயர்ந்த ஏற்றம் | 1 m (3 ft) |
| நிர்வாகம் | |
| யூனியன்பிரதேசம் | ஒன்றியப் பகுதி (இந்தியா) of இலட்சத்தீவுகள் |
| மாவட்டம் | இலட்சத்தீவுகள் |
| தீவுக்கூட்டம் | இலாக்காடிவ் தீவுகள் |
| தாலுகா | கவரத்தி |
| இந்தியாவின் நிர்வாக அலகுகள் | கவரத்தி |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 10 |
| அடர்த்தி | 11 /km2 (28 /sq mi) |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் | 682555, 682559, 682557 |
| தொலைபேசிக் குறியீடு | 04890, 04895 ,04896 |
| ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் | IN-LD-07[1] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
சுகேலி பர் (Suheli Par) என்பது இந்தியாவின் இலட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பவளத் தீவு ஆகும். இது வளமான கடல் விலங்கினங்களின் மண்டலத்தால் சூழப்பட்ட 17 கி.மீ நீளமுள்ள ஒரு முட்டை வடிவத் தீவாகும்.
புவியியல்
[தொகு]10°05′N 72°17′E / 10.083°N 72.283°E என்ற புவியியல் ஆள்கூறுகளில் சுகேலி பர் தீவு அமைந்துள்ளது. கவரத்திக்கு தென்மேற்கில் 52 கி.மீ, அகத்தி தீவின் தெற்கே 76 கி.மீ., கல்பேனியின் மேற்கே 139 கி.மீ. மற்றும் மினிகாயின் வடமேற்கில் 205 கி.மீ. தொலைவில் இத்தீவு அமைந்துள்ளது. இவற்றுக்கிடையே அகலமான நைன் டிகிரி கால்வாய் உள்ளது. இங்குள்ள குளம் 87.76 சதுர கிலோமீட்டர் (33.88 சதுர மைல்) பரப்பளவு கொண்டதாகும்.[2]
தீவுகள்
[தொகு]ஏரியைச் சுற்றியுள்ள பாறையில் மூன்று தீவுகள் உள்ளன.[3]
- வலியகரா : கடலின் வடக்கு முனையில் அமைந்துள்ளது.[4]
வலியகரா தீவு அதன் அசல் தாவரங்களில் பெரும்பகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பெரும்பாலும் வளர்ச்சி குன்றிய, பராமரிக்கப்படாத தென்னை மரங்களைக் கொண்டுள்ளது. தேங்காய்களைச் சேகரிக்க தொழிலாளர்கள் அவ்வப்போது இங்கு வருகிறார்கள். இத்தீவில் துறவி நண்டுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.[5]
இந்தத் தீவில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது.[6] கலங்கரை விளக்கின் ஒளி அளவு 0.395 சதுர கிலோமீட்டர்கள் (0.153 சதுர மைல்கள்) ஆகும்.
- செரியகரா : கடலின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வலியகராவை விட அளவில் சற்று சிறியது. இந்தத் தீவில் ஒரு பெரிய தென்னந்தோப்பு உள்ளது. அக்டோபர் மாத நடுப்பகுதிக்கும் ஏப்ரல் மாத நடுப்பகுதிக்கும் இடையில், அகத்தி மற்றும் கவரத்தி நகரைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தீவில் தற்காலிகக் குடியிருப்புகளில் தங்குகிறார்கள். (சராசரியாக ஆண்டு மக்கள் தொகை 10). அவர்கள் சுற்றியுள்ள நீரில் சூரை மீன்களைப் (டுனாவைப்) பிடித்து தீவில் பதப்படுத்துகிறார்கள். இதன் அளவு 0.383 சதுர கிலோமீட்டர்கள் (0.148 சதுர மைல்கள்).
- இந்திரா-சாசுத்திரி தீவு: இரண்டு தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நீண்ட மணல் திட்டு ஆகும். இது நீள்மூக்கு கடற்பறவைகளால் இனப்பெருக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. [7] இதன் அளவு 0.11 சதுர கிலோமீட்டர்கள் (0.042 சதுர மைல்கள்).
சூழலியல்
[தொகு]தீவுகளில் தென்னை மரங்கள் உள்ளன. அதே போல் பாண்டனசு, சிகேவோலா டக்காடா, டூர்ன்ஃபோர்டியா அர்செண்டியா மற்றும் பெம்பிசு அசிடுலா புதர்கள் போன்ற தாவரங்களும் உள்ளன. சாம்பல் நிற நாரை மற்றும் கருந்தலை மீன்கொத்தி ஆகியவை இந்த தீவில் காணப்படும் பறவைகளாகும். வளமான கடல்வாழ் உயிரினங்கள் காரணமாக சுகேலி பர் தீவை ஒரு கடல் தேசியப் பூங்காவாக அறிவிக்கவும் ஒரு திட்டம் இருந்தது.[8]
2006 ஆம் ஆண்டில் சீசெல்சு என்ற தீவு நாட்டிலிருந்து வந்த ஒரு கப்பல் இந்தத் தீவில் தரையிறங்கியது. ஆனால் எண்ணெய் கசிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ Hydrographic Description (Indian Ocean Pilot)
- ↑ "Suheli Par - Oceandots". Archived from the original on 23 December 2010. Retrieved 2011-11-09.
- ↑ CMFRI bulletin 44
- ↑ Acta Ichthyologica et Piscatoria - Fishes of Lakshadweep
- ↑ Valiyakara/Suheli Par North (Laccadive Islands) Light ARLHS LAK-015
- ↑ Birds of Lakshadweep Islands
- ↑ A.G.K. Menon, Marine Park of Lakshadweep, a report submitted to the Department of Science and Technology, Government of India, 1976
- ↑ Vessel gets stuck off Lakshadweep, no oil spill reported