சுகு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுகு கோயிலின் முக்கிய நினைவுச்சின்னம்

சுகு கோயில் (Sukuh) ( இந்தோனேசியம்: Candi Sukuh Indonesian pronunciation) மத்திய மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஒரு ஜாவானிய - இந்து மதக் கோயிலாகும். இது 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது லாவு மலையின் மேற்குச் சரிவில் பகுதியில் 910 மீட்டர்கள் (2,990 ft) உயரத்தில் அமைந்துள்ளது. .

சுகு கோயிலில் பிற கோயில்களிலிருந்து மாறுபட்ட, ஒரு தனித்துவமான கருப்பொருளைக் கொண்ட புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பிறப்பதற்கு முந்தைய வாழ்க்கை மற்றும் பாலியல் கல்வி ஆகியவை உள்ளிட்டவை முக்கிய கருப்பொருள்களாக உள்ளன. அதன் முக்கியமான அமைப்பு ஒரு எளிய பிரமிடு வடிவத்தைப் போன்ற நிலையில் அமைந்துள்ளது. அதற்கு முன்னால் புடைப்புச் சிற்பங்கள், மற்றும் சிலைகள் உள்ளன, இதில் தட்டையான ஓடுகளைக் கொண்டு அமைந்துள்ள மூன்று ஆமைகள் மற்றும் தனது ஆண்குறியைப் பிடித்துள்ள நிலையில் ஓர் ஆண் உருவம் ஆகியவை உள்ளன. அவற்றில் உயரமான 1.82   m (6   அடி) அளவினைக் கொண்ட ஆண்குறி உள்ளது. நான்கு விரைகளைக் கொண்டு அமைந்துள்ளது. அது பலவிதமான நகைகளை அணிவதற்காக முறையை உணர்த்தும் வகையில் உள்ளது.[1] இந்த சிலையானது இந்தோனேசியாவின் தேசிய அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்ட சிலைகளில் ஒன்றாகும்.

பின்னணி[தொகு]

சுகு கோயில்15 ஆம் நூற்றாண்டில் லாவு மலையின் வடமேற்கு சரிவுகளில் கட்டப்பட்ட பல கோயில்களில் சுகு ஒன்றாகும். அந்தக் காலகட்டத்தில் ஜாவானிய மதமும் கலையும் இந்திய நெறியுரைகளைக் கொண்ட பரந்த நிலையில் இருந்தன. அவற்றை 8 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த கோயில் பாணிகள் மூலம் காண முடியும். ஜாவாவில் கோயில் கட்டுமான நிலையின் முக்கியத்துவம் பெற்ற இறுதி நிலையாகக் கூறலாம். இது 16ஆம் நூற்றாண்டில் இந்தத் தீவில் நீதிமன்றங்கள் இஸ்லாமிற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் இருந்த சூழலாகும். கோயிலின் தனித்துவம் மற்றும் ஜாவானிய விழாக்கள் மற்றும் சகாப்தத்தின் நம்பிக்கைகள் பற்றிய ஆவணப் பதிவுகள் இல்லாததால் இந்த பழங்காலங்களின் முக்கியத்துவத்தை வரலாற்றாசிரியர்கள் விளக்குவது சிரமமாக உள்ளது.[2]

சுகு கோயிலின் நிறுவனர், லாவு மலையின் சாய்வு முன்னோர்களையும் இயற்கை ஆவிகளையும் வழிபடுவதற்கும், கருவுறுதல் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் ஒரு புனிதமான இடம் என்று நினைத்தார்.[3] இந்த நினைவுச்சின்னம் 1437 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது, இது மேற்கு வாசலில் உள்ள கால வரைபட பதிவினைக் கொண்டு அதனை அறியமுடிகிறது. அதாவது இந்த பகுதி அதன் முடிவில் (1293–1500) மஜாபஹித் இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. இது இரண்டு பிரபுத்துவ அமைப்புகளுக்கு இடையிலான பகைமையைக் காண்பிக்கும் புடைப்புச் சிற்பங்கள் அங்கு உள்ளன. அது அவர்களுக்கிடையே நடைபெற்ற உள் மோதல்களைக் குறிக்கிறது. அதனை அடிப்படையாக வைத்த சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மஜாபஹித்தின் வீழ்ச்சிக்கு அதன் நிறுவனர் காரணம் என்று சிலர் நம்புகின்றனர்.[4]

1815 ஆம் ஆண்டில், 1811 – 1816 ஆம் ஆண்டுகளில் ஜாவாவின் ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் ராஃபிள்ஸ் கோயிலுக்குச் சென்றார். அது மோசமான நிலையில் இருப்பதைக் கண்டார்.[5] அவர் அப்போது பல சிலைகள் தரையில் வீசப்பட்ட நிலையில் இருந்தது என்றும், சில சிலைகள் தலையின்றி இருந்தன என்றும் கூறுகிறார். மாபெரும் லிங்கா சிலையை இரண்டு துண்டுகளாக உடைத்திருப்பதை ராஃபிள்ஸ் கண்டறிந்தார், பின்னர் அவை ஒன்றாக ஒட்டப்பட்டன. பாரம்பரிய பண்பாட்டின் மீதான இத்தகைய காழ்ப்புணர்வு (குறிப்பாக சிலைகளைப் போலவே பாலியல் அடக்கப்படாத நிலையில்) 16 ஆம் நூற்றாண்டில் ஜாவா மீதான இஸ்லாமிய படையெடுப்பின் விளைவாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பொதுவாக மற்ற அனைத்து இஸ்லாமிய மற்றும் ஏகத்துவ படையெடுப்புகளிலும் இவ்வகையான முறைகளைக் காணமுடிந்தது.

கட்டிடக்கலை[தொகு]

சுகு கோயிலின் நுழைவாயிலின் தரையில் யோனிலிங்காவின் புடைப்புச் சிற்பம்

வளாகத்தின் மையப் பகுதியில் உள்ள பிரமிடு அமைப்பு மூன்று மாடிகளின் பின்புறத்தில் உள்ளது. ஆரம்பத்தில், வழிபாட்டாளர்கள் மேற்கு அல்லது குறைந்த உயரத்தினைக் கொண்ட மொட்டை மாடியில் ஒரு நுழைவாயில் வழியாக வளாகத்தை அணுகியிருப்பார்கள். வாயிலின் இடதுபுறத்தில் ஒரு மனிதனை சாப்பிடும் ஒரு அரக்கன், ஒரு மரத்தில் பறவைகள், மற்றும் ஒரு நாய் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. இது பொ.ச. 1437 ஐக் குறிக்கும் கால வரைபடம் என்று கருதப்படுகிறது, இது கோவிலின் அமைக்கப்பட்ட நாளாக இருக்க வாய்ப்புள்ளது. சுகு கோயிலின் நுழைவாயிலின் தரையில் யோனிலிங்காவின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பாலியல் உடலுறவின் ஒரு தெளிவான சித்தரிப்பு உள்ளது, இது ஒரு ஜோடி லிங்கத்தைக் காட்டுகிறது. இதில் ( ஃபாலஸ் ) மற்றும் யோனி ஆகியவை உள்ளன. இது உடல் ரீதியாக யோனியைக் குறிக்கிறது. தளத்தின் பல சிலைகளில் பிறப்புறுப்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன, இது ஜாவானிய செவ்வியல் நினைவுச்சின்னங்களில் தனித்துவமாகும்.

ஆண்குறியை இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள தலை இல்லாத ஆணின் ஆளுயர உருவம்
பீமா இடதுபுறத்தில் கொல்லராகவும், மையத்தில் விநாயகர், மற்றும் வலதுபுறத்தில் உலைக்குள் காற்றை செலுத்துவதற்காக ஊதுகுழாயை இயக்கும்அர்ஜுனன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள்

குறிப்புகள்[தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". மூல முகவரியிலிருந்து June 9, 2007 அன்று பரணிடப்பட்டது.
  2. Miksic, John (1997). Oey, Eric. ed. Java Indonesia. Singapore: Periplus. பக். 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:962-593-244-5. 
  3. Ann Rasmussen Kinney, Marijke J. Klokke and Lydia Kieven (2003). Worshiping Siva and Buddha: The Temple Art of East Java. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8248-2779-1. 
  4. Victor M Fic (2003). From Majapahit and Sukuh to Magawati Sukarnoputri: Continuity and change in pluralism of religion, culture and politics of Indonesia from the XV to the XXI century. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7017-404-X. 
  5. Stanley J. O'Connor (1985). "Metallurgy and Immortality at Caṇḍi Sukuh, Central Java". Indonesia 39: 53–70. http://cip.cornell.edu/DPubS?service=UI&version=1.0&verb=Display&handle=seap.indo/1107006615. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகு_கோயில்&oldid=2868550" இருந்து மீள்விக்கப்பட்டது