சுகுணா விலாச சபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுகுணா விலாச சபா (Suguna Vilasa Sabha) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். சுகுணா விலாச சபா கிளப் எஸ்.வி.எஸ். கிளப் என்றும் அழைக்கப்படுகிறது. சுகுணா விலாச சபா கிளப் 1891 ஆம் ஆண்டில் வரலாற்றுத் திறமைகளை மேம்படுத்துவதற்காக மறைந்த சம்பந்த முதலியார் தலைமையிலான ஈடுபாடு கொண்ட பெருமக்களின் குழுவினரால் நிறுவப்பட்டது. இது நகரத்தின் மிகவும் பழமையான மற்றும் முன்னணி நாடக நிறுவனங்களில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

சுகுணா விலாச சபா மெசென்னையில் ஒரு நாடக நிறுவனமாக 1891 ஆம் ஆண்டில் ஜார்ஜ் டவுன் என்னும் இடத்தில் ஒரு வீட்டில் நிறுவப்பட்டது. 1902 ஆம் ஆண்டில், இந்த சபாவானது விக்டோரியா பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டது, அவ்விடத்தில் அது 1902 ஆம் ஆண்டு முதல் 1936 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. பின்னர் அது அண்ணா சாலைக்கு இடம் மாறியது. [1] 1945 ஆம் ஆண்டில், இந்த சபா தனது சொந்த அரங்கமான நியூ தியேட்டர் என்னும் அரங்கினைக் கட்டியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேடை நாடகங்கள் குறையத் தொடங்கியதும், இந்த சபாவானது ஒரு சமூகக் கழகமாக மாற்றம் பெற்றது.

ஆரம்ப காலகட்டத்தில் இந்த சபா ஜார்ஜ் டவுனில் உள்ள விஜயநகரம் மகாராஜா உயர்நிலைப்பள்ளியில் வாடகைக்கு கட்டணமின்றி செயல்பட்டு வந்தது. 1896 ஆம் ஆண்டில் இது தம்பு செட்டி தெருவில் ஒரு வளாகத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. 1902 ஆம் ஆண்டில் இந்த சபா விக்டோரியா பொது மண்டபத்திற்கு மாறியது. பின்னர் அங்கிருந்து சபா தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஆரம்பித்தது. டென்னிஸ், பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் பிற பொழுதுபோக்கிற்கான விளையாட்டுகளுக்கான வசதிகளைப் பெற்றதோடு பல நாடகங்களை நடத்துவதற்கான வசதிகளையும் பெற்றது. தொடர்ந்து சொந்தமாக ஒரு கட்டிடத்தை வாங்குவதற்கான தேவை உணரப்பட்டது. பின்னர் தற்போதைய இடம் வாங்கப்பட்டது.

முன்னாள் தலைவரான டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமியின் கீழ், நகரத்தின் மிகப் பழமையான மற்றும் முதன்மை கிளப்புகளில் ஒன்றாக இந்த சபா தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

கலைஞர்கள்[தொகு]

தமிழ் நாடகக்கலைஞரான பம்மல் சம்பந்த முதலியார் 1900 களின் முற்பகுதியில் சுகுண விலாச சபாவுடன் மிகுந்த தொடர்பு கொண்டிருந்தார். பிரபல நடனக் கலைஞரான ஈ.கிருஷ்ண ஐயரும் சபாவுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

வசதிகள்[தொகு]

திறந்தவெளி திரையரங்கம், சிறு விழாக்கள் நடத்துவதற்கான வசதி, ஐ பார், உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் விளையாடுவதற்கான வசதிகள், நீச்சல் குளம், ஆரேக்கியத்திற்கான கிளப் நூலகம், விருந்தினர் மாளிகை மற்றும் பில்லியர்ட்ஸ் விளையாட வசதி உள்ளிட்டவை இங்கு காணப்படுகின்றன..

உள்கட்டமைப்பு[தொகு]

  • 10 டீலக்ஸ் அறைகள் உள்ளிட்ட, நல்ல வசதிகள் கொண்ட, கவர்ச்சிகரமான முறையில் வடிவமைக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட அமைப்பு
  • அதிநவீன விளையாட்டு வளாகம், அதிநவீன வசதிகள் மற்றும் ஆரோக்கிய கிளப்பைக் கொண்ட சிறந்த விளையாட்டரங்கம்.
  • குளிரூட்டப்பட்ட பார், புகை பிடிக்கக்கூடாத இடம், மாநாட்டு அரங்குகள், மற்றும் நூலகம்.
  • சைவம், அசைவம், சீன தந்தூரி மற்றும் கான்டினென்டல் உணவு.
  • நன்கு தரைவிரிப்பு செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் வசதிகள் கொண்ட இரண்டு அறைகள்
  • புல்வெளி சேவை.

அமைவிடம்[தொகு]

இந்த கிளப் 57, அண்ணா சாலை, சென்னை - 600 002 என்னும் முகவரியில் அமைந்துள்ளது.

125 ஆவது ஆண்டு விழா[தொகு]

சுகுணா விலாச சபாவின் 125ஆம் ஆண்டு விழா 2010 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் அப்போதைய தமிழக ஆளுநர் தமிழ் நாடகங்களையும் வளர்க்கவும்,அதனை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் நகரத்தில் உள்ள சபைகள் ஒன்று சேர வேண்டும் என்று கூறினார். நகரத்தில் கலை, நடனம், நாடகம் ஆகிய கலைகளை வளர்ப்பதற்கு பல புகழ் பெற்ற கலைஞர்கள் ஆற்றிய பங்கினை அவர் நினைவுகூர்ந்தார். தமிழ் நாடகங்களை இளைஞர்களிடையே பிரபலப்படுத்த வேண்டியது தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியம் என்றார். அந்த சபையின் பங்களிப்பை எடுத்துக் கூறும்போது அவர், நாடகத்தந்தையான பம்மல் சம்பந்த முதலியாரால் நிறுவப்பட்ட, தற்போது 1,500 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபா மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூர்பா காந்தி ஆகியோரை செப்டம்பர் 1926இல் கௌரவப்படுத்தியுள்ளது என்று நினைவுகூர்ந்தார். [2]

குறிப்புக்கள்[தொகு]

  1. Srinivasachari, C. S. (1939). History of the city of Madras written for the Tercentenary Celebration Committee. Madras: P. Varadachary & Co.. பக். 317. 
  2. Suguna Vilasa Sabha celebrates 125 years, The Hindu, 31 July 2010

சான்றாதாரங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுணா_விலாச_சபா&oldid=2888569" இருந்து மீள்விக்கப்பட்டது