சுகுணா வரதாச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுகுணா வரதாச்சாரி (பிறப்பு: 20 டிசம்பர் 1945) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1] வீணை இசைப்பதிலும் புலமை பெற்றவர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தமிழ்நாட்டின் தாராபுரத்தில் பிறந்தவர். பி. கே. இராஜகோபால ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் இசை பயின்றார்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசை ஆசிரியராக 1984 முதல் 2004 வரை பணியாற்றினார். அகில இந்திய வானொலியில் உயர்தரக் கலைஞராக அங்கீகரிக்கப்பட்டவர். இந்தியாவிலும் உலகமெங்கிலும் கச்சேரிகள் நடத்தி முசிறி சுப்ரமணியம், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் இயற்றிய பாடல்களைப் பாடி புகழ் பெற்றவர். இந்திய அளவிலும் உலக அளவிலும் இசை குறித்தான கருத்தரங்கங்களில் பங்குகொண்டு செயல் விளக்கங்களை அளித்துள்ளார்.[1]

விருதுகள்[தொகு]

  • சங்கீத கலாஜோதி (2007), வழங்கியது: சுஸ்வரா
  • ஆச்சார்ய இரத்னகரா (2011), வழங்கியது: கிளீவ்லாண்ட் தியாகராஜ விழாக் குழு
  • சங்கீத கலா ஆச்சார்யா (2010), வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை[2]
  • சங்கீத் பிராச்சார்யா (2014) சண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ், மும்பை
  • சங்கீத நாடக அகாதமி விருது (2015)[1]

பெற்ற சிறப்புகள்[தொகு]

  • சென்னையில் அமைந்துள்ள நிகழ்த்தும் கலைகளுக்கான நடுவண் பல்கலைக்கழகத்தின் இயக்கக் குழு உறுப்பினர்.
  • சென்னை மியூசிக் அகாடமியின் வல்லுநர் குழு உறுப்பினர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  2. "SANGITA KALA ACHARYA". மியூசிக் அகாதெமி. 16 டிசம்பர் 2018. https://www.musicacademymadras.in/awards/sangita-kala-acharya. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 

உசாத்துணை[தொகு]

  • Suguna Varadachari, சுருதி இணைய இதழ், 20 டிசம்பர் 2017

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுணா_வரதாச்சாரி&oldid=3266649" இலிருந்து மீள்விக்கப்பட்டது