சுகிதா சாரங்கராஜ்
சுகிதா சாரங்கராஜ் என்பவர் தமிழ் ஊடகவியலாளரும் எழுத்தாளருமாவார். தமிழ் ஊடக வரலாற்றில் முதல் பெண் பொறுப்பாசிரியராக அறியப்படுகிறார். 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினைப் பெற்றார்.[1]
இளமைக்காலம்
[தொகு]தஞ்சாவூர் மாவட்ட பட்டுக்கோட்டை தாலுகா, கள்ளம்பட்டி என்னும் கிராமத்தில பிறந்து, மன்னை தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். முதுகலை ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார்.[2]
ஊடகத்துறை
[தொகு]தினமலரில் சிறப்புச் செய்தியாளராகப் பணியாற்ற தொடங்கினார்.[2] சன் நியூஸ், கலைஞர் செய்திகள் ஆகிய காட்சி ஊடகங்களில் பணிபுரிந்து, பின்னர் நீயூஸ்7 தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கூகிள் நியூஸ் முன்னெடுப்பின் உண்மை தன்மை கண்டறிவதற்கான உண்மை சரியாப்புப் பயிற்சி, ஐஎப்சிஎன் போய்ன்டர் அமைப்பின் உண்மை சரியாப்புப் பயிற்சி ஆகியவற்றைப் பெற்றவர்.
எழுதிய நூல்கள்
[தொகு]இவர், ஒரு காதலும் ஒரு சொம்பு தண்ணீரும் என்ற கவிதைத் தொகுப்பு நூலும் சமூகமும் தேசிய விருப்பமும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலும் எழுதியுள்ளார். பாலின சமத்துவம் தொடர்பாக இவர் பல்வேறு இதழ்களில், இணையதளங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகத் தண்டனைக் களமாகும் பெண்ணுடல் என்ற நூலினை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பத்தின் வழியாக 2023 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
[தொகு]இவர் லாட்லீ என்கிற ஊடக விருதினை 6 முறை பெற்றுள்ளார்.[3][4] பாலின சமத்துவம் தொடர்பான இவரது தொடர் பங்காற்றலுக்காக லாட்லீயின் நிதிநல்கை, குழந்தைகள் உரிமை தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளுக்காக யுனிசெப் நிதிநல்கை உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் வரிசையில் மகளிர் இலக்கியப் பிரிவில் தண்டனைக் களமாகும் பெண்ணுடல் நூல் பரிசு பெற்றது.[5] இந்நூல் புதுக்கோட்டை தமிழ் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான அறமனச் செம்மல் சீனு சின்னப்பா இலக்கிய விருதையும் பெற்றது.[6] எஸ்.ஆர்.எம். பொதுப்பள்ளி இவருக்கு மங்கை தாரகை என்ற விருதினை வழங்கி கவுரவித்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கலைஞர் எழுதுகோல் விருது". செய்தி மக்கள் தொடர்புத் துறை. Retrieved 9 March 2025.
- 1 2 "சாதிக்க வேண்டும் என்ற வெறி சுகிதாவின்(sugitha) வாழ்க்கையை மாற்றியது". ஷீ தி பீப்பிள். https://tamil.shethepeople.tv/news/sugitha-sarangaraj-journalist. பார்த்த நாள்: 9 March 2025.
- ↑ "First Edition South Asia Laadli Media and Advertising Awards for Gender Sensitivity 2015-16" (PDF). பாப்புலர்பர்ஸ்ட். Retrieved 10 March 2025.
- ↑ ""காதல் திருமணமே என்னை ஊடகத்துறையை தேர்ந்தெடுக்கவைத்தது"- சுகிதா". எஸ்.பி.எஸ். https://www.sbs.com.au/language/tamil/ta/podcast-episode/interview-with-journalist-sugitha-part-1/pix28snmr. பார்த்த நாள்: 10 March 2025.
- ↑ "2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசு வழங்கும் விழா". தமிழ் வளர்ச்சித் துறை. தமிழ் வளர்ச்சித் துறை. Retrieved 9 March 2025.
- ↑ "தாமரை பிரதர்ஸ் பதிப்பக நுாலுக்கு தமிழ் சங்கம் விருது". தினமலர். https://www.dinamalar.com/news/kalvimalar-news/tamil-sangam-award-for-tamarai-brothers-publishing/64448. பார்த்த நாள்: 9 March 2025.
- ↑ "பெண் சாதனையாளா்களுக்கு மங்கையா் தாரகை விருது". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/chengalpattu/2024/Mar/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81. பார்த்த நாள்: 10 March 2025.